முச்சந்தி

திருமுறிகண்டியில் கோர விபத்து ஒருவர் உயிரிழப்பு; மூவர் படுகாயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியில் திருமுறிகண்டிக்கும் கொக்காவில் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

வெளிநாடு ஒன்றிலிருந்து வருகை தந்தவர்களை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அழைத்து பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் ஒன்று ஏ 9 வீதியின் 241 ஆவது கிலோ மீற்றருக்கும் 242 ஆவது கிலோ மீற்றருக்கும் இடைப்பட்ட பகுதியில் முன்னே சென்று கொண்டிருந்த பாரஊர்தியின் பின்புறத்தில் வேகமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நால்வரும் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button