Euro 2024 – அரையிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்: தோல்வியுடன் விடைபெற்றார் ரொனால்டோ

நடப்பு Euro 2024 காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி போர்த்துகலை பெனால்டி ஷூட்அவுட் முறையில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளது.

வோக்ஸ்பார்க்ஸ்டேடியன் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல்கள் எதையும் பெற்றிருக்கவில்லை.

இதனையடுத்து இரு அணிகளுக்கும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. எனினும், எந்த அணியாயும் கோல் அடிக்கமுடியவில்லை.

இறுதியில் பெனால்டி ஷூட்அவுட் முறையில் 5-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி போர்த்துகலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இதன்படி, அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை எதிர்த்து பிரான்ஸ் விளையாடவுள்ளது.

இதேவேளை, போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இது கடைசி யூரோ சாம்பியன்ஷிப் போட்டியாக அமைந்துள்ளது.

அண்மையில் போர்த்துகல் ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர், இது தனது கடைசி யூரோ சாம்பியன்ஷிப் தொடர் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தோல்வியுடன் யூரோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ விடைபெற்றுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button