பொலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு உயரிய விருது; கௌரவிக்கக் காத்திருக்கும் சுவிட்சர்லாந்து

பொலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு மிக உயரிய விருதான Pardo alla Carriera Ascona-locarno Tourism எனப்படும் வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.

சுவிட்சர்லாந்தில் 77வது லோகார்னோ திரைப்பட விழா அடுத்த மாதம் (ஒகஸ்டு) 7-ம் திகதி முதல் 17-ம் திகதி வரை நடக்கிறது.

இந்த விழாவில் பிரபலமான பொலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விருதை இதற்கு முன்னர் இத்தாலி இயக்குநர் பிரான்செஸ்கோ ரோசி, அமெரிக்க பாடகர் நடிகர் ஹாரி பெலாபோன்டே மற்றும் மலேசிய இயக்குநர் சாய் மிங்-லியாங் ஆகியோர் பெற்றுள்ளனர்.

இந்த வரிசையில் தற்போது ஷாருக்கானுக்கு இந்தாண்டு வழங்கப்படவுள்ளது. மேலும் இந்த விருது வழங்கும் விழாவில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற தேவதாஸ் திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

இந்த வரிசையில் இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான பதான், ஜவான் படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று ஒவ்வொரு படமும் ரூ.1000 கோடி வசூலை பெற்றது.

ஒகஸ்ட் மாதம் விருதை பெறவுள்ள ஷாருக்கான் தொடர்ந்து ரசிகர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button