முச்சந்தி

வளி மாசடைவு: 10 இந்திய நகரங்களில் 33 ஆயிரம் உயிரிழப்புகள்

வளி மாடசைவு காரணமாக இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் 33,000 பேர் உயிரிழப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

“லான்செட் ப்ளெனரி ஹெல்த்” சஞ்சிகையின் அறிக்கையின் மூலம் இந்திய விடயம் தெரியவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் 10 நகரங்களில் வளி மாசடைவு காரணமாக இவ்வாறு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

அகமதாபாத், பெங்களூர், சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, புனே, சிம்லா மற்றும் வாரணாசி ஆகிய நகரங்களில் இறப்புகள் பதிவாகியுள்ளன.

அத்துடன், மும்பை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற ஒப்பீட்டளவில் குறைந்த அளவு வளி மாசடைவு கொண்ட நகரங்களில் கணிசமான எண்ணிக்கையிலான இறப்புகள் காணப்பட்டதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

2008 மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நடத்தப்பட்ட, குறுகியகால வளி மாசடைவு வெளிப்பாடு மற்றும் பல்வேறு சூழலைக்கொண்ட நடகங்களில் இறப்பு எண்ணிக்கை இடையிலான தொடர்பை மதிப்பிடுவதற்கான இந்தியாவின் முதல் ஆய்வாக இது கருதப்படுகிறது.

இதனிடையே, இந்தியாவில் வளியின் தரம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரத்தை விட அதிகமாக இருப்பதாகவும் குறித்த அறிக்கையில் காட்டப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button