இந்தியா

நாடாளுமன்ற சபாநாயகரானார் ஓம் பிர்லா: பிரதமர் மோடி – ராகுல் காந்தி வாழ்த்து

இந்தியாவின் நாடாளுமன்ற சபாநாயகரை தெரிவு செய்யும் தேர்தலானது இன்று நடைபெற்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி, சார்பாக ஓம் பிர்லாவும் எதிர்கட்சி சார்பில் எம்.பி.கே. சுரேஷ் ஆகியோரும் போட்டியிட்டனர்.

இந்நிலையில் ஓம் பிர்லாவை சபாநாயகராக பிரதமர் மோடி முன்மொழிய, பாதுகாப்புத்துறை அமைச்சர் வழி மொழிந்தார்.

அதேவேளை இந்திய கூட்டணியின் வேட்பாளர் சுரேஷை ஆதரித்து 3 தீர்மானம் வழிமொழியப்பட்டது.

இந்நிலையில் குரல் வாக்கெடுப்பின் அடிப்படையில் ஓம் பிர்லா சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார்.

இதனையடுத்து மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தெரிவாகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் இணைந்து புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவை அவரது சபாநாயகர் இருக்கையில் அமர வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *