கனடா இடை தேர்தலில் பாரிய தோல்வி: பிரதமர் ட்ரூடோவுக்கு பலத்த நெருக்கடி

லிபரல் கட்சியின் முக்கிய கோட்டையாக கருதப்படும் டொராண்டோவில் உள்ள செயின்ட் பால் இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பலத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

டொராண்டோவில் உள்ள செயின்ட் பால் இடைத்தேர்தலில் லிபரல் கட்சி தோல்வியடைந்தது.

அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு இடம்பெறவுள்ள நிலையில், இடைத்தேர்தலில் ஏற்பட்ட ட்ரூடோவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகின்றது.

இத்தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் டான் ஸ்டீவர்ட் வெற்றி பெற்றார். ஸ்டீவர்ட் 42 சதவீத வாக்குகளைப் பெற்று எதிர் போட்டியாளரான லெஸ்லி சர்ச்சை தோற்கடித்தார்.

செயின்ட் பால்ஸ் என்பது கடந்த 30 ஆண்டுகளாக லிபரல்களால் ஆட்சிசெய்யப்பட்டு வருகின்றது.

கடந்த 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் அவர்கள் 49 வீத வாக்குகளைப் பெற்றிருந்தனர்.

இந்த தேர்தலில் எதிரணி வேட்பாளர் 22 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

இந்நிலையில் அதிகார மையத்தில் ஏற்பட்ட தோல்வி அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக ட்ரூடோவின் தலைமை குறித்து கேள்விகளை எழுப்புகிறது.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பிரதமர் ட்ரூடோ, மக்கள் நலனுக்காக தானும் கட்சியும் முயற்சிப்போம் என்று ட்ரூடோ கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button