சீனாவில் விமானத்தில் பயணிக்கும் போது புகைப்படம் எடுக்க தடை
சீனாவில் உள்ள சிவில்-இராணுவ விமான நிலையங்களில் விமானம் புறப்படும்போதும், தரையிறங்கும் போதும் ஜன்னல் வழியாக புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என சீனாவின் உயர்மட்ட உளவு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெளிநாட்டு பயணி ஒருவர் ஜன்னல் வழியாக புகைப்படம் எடுத்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிவில்-இராணுவ விமான நிலையத்தின் வழியாக பயணிக்கும்போது, ஜன்னல் திரைச்சீலைகளை மூடுவது மற்றும் அனைத்து விதிகளையும் பின்பற்றுவது கட்டாயம் என்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
“அங்கீகரிக்கப்படாத புகைபடங்கள் மற்றும் காணொளிகளை ஒன்லைனில் பதிவேற்ற முடியாது.
இந்நிலையில், ஹாங்காங்கைத் தளமாகக் கொண்ட சவுத் சைனா மார்னிங் போஸ்ட், இராணுவ வசதிகள் குறித்து இரகசியம் காக்க உலகம் முழுவதும் உள்ள நிலையான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், அண்மையில் வெளிநாட்டவர் ஒருவர் புகைப்படம் எடுத்த சம்பவம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் ஊடகங்களின்படி, கிழக்கு சீன நகரமான Yiwuஇல் இருந்து பெய்ஜிங்கிற்குச் சென்ற வெளிநாட்டுப் பயணி ஒருவர் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி இராணுவ-சிவிலியன் விமான நிலையத்தை புகைப்படம் எடுத்தார்.
இந்த விடயம் தொடர்பில் விமானத்தில் இருந்த சக பயணி ஒருவர் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்ததையடுத்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![]()