காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்: இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்களை குறிவைத்ததில் 32 பேர் பலி

இஸ்ரேலிய படையினர் கடந்த 48 மணி நேரத்தில் காசா முழுவதும் ஐந்து இடம்பெயர்ந்தோர் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இறுதியாக நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 32 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதுவரை 139 பேர் உயிரிழந்ததாகவும் காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், காஸா – இஸ்ரேல் போர் தொடர்பில் இராஜதந்திர ரீதியில் தீர்வு காண்பதையே தமது நாடு விரும்புவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தாக்குதலுக்குள்ளான பகுதிகளுக்கு பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம் சுகாதாரப் பொருட்களுடனான பொதிகளை விநியோகித்துள்ளது.

இடம்பெயர்ந்தோர் தங்குமிடங்களில் அதிக நெரிசலால் ஏற்படும் நோய் பரவலை குறைப்பதனை நோக்கமாகக் கொண்டு இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button