பிரான்ஸ் தேர்தல்; பெண்களின் உரிமைகள் குறித்து எச்சரிக்கை
பிரான்ஸில் இனப்பெருக்க உரிமைக்கு ஆபத்து எனக்கூறி ஆயிரக்கணக்கான பொது மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர்.
சுமார் 34,000 எதிர்ப்பாளர்கள் பிரான்ஸ் முழுவதும் 50 இற்கும் மேற்பட்ட பேரணிகளை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலின் முதல் சுற்றில் மக்கள் வாக்களிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பதாக இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
கருத்துக்கணிப்புகளின் படி தேசிய பேரணி மற்றும் அதன் கூட்டணிகளும் முன்னிலை வகிக்கின்றன.
இந்த நிலையில், தீவிர வலதுசாரிகள் ஆட்சிக்கு வரும்போது, கருக்கலைப்புக்கான உரிமையை பாதிப்பதாக கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
இருப்பினும், கருக்கலைப்பு உரிமைகள் ஏனைய நாடுகளை விட பிரான்ஸில் சிறப்பாக பாதுகாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, சட்டபூர்வ கால எல்லையை குறைப்பது அல்லது கருக்கலைப்பு மாத்திரைகளை கட்டுப்படுத்துவது போன்று கருக்கலைப்பு மேற்கொள்வதனை கடினமாக்குவதனை எதிர்கால அரசாங்கம் தடுக்காது என சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
![]()