இந்தியன் 2 ட்ரைலர் வெளியீட்டை அறிவித்த படக்குழு: அனல் பறக்கும் போஸ்டர்
நாளை மறுநாள் (25) இந்தியன் 2 படத்தின் ட்ரைலர் வெளியிடப்படும் என படக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியன் 2 படம் வெளியாக இன்னும் ஏறக்குறைய 20 நாட்கள் மட்டுமே இருப்பதால் படக்குழு தீவிரமான புரோமோஷனில் ஈடுபட்டு வருகின்றது.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ட்ரைலரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
மேலும் 25ஆம் திகதி எப்போது ட்ரைலர் ரிலீஸ் செய்யப்படும் என்பதை படக்குழு தெரிவிக்கவில்லை. இதற்கு தனியாக படக்குழு அப்டேட் கொடுக்க வாய்ப்புள்ளது.
இதேவேளை, உலகநாயகன் நடிப்படில் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் 2 அடுத்த மாதம் 12ம் திகதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()