விடாமுயற்சி; ரிலீஸ் திகதி குறித்து அஜித் கொடுத்த அப்டேட்

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ‘விடாமுயற்சி’ வெளியாகிறது. விரைவில் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்ப்டி, விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு அஜர்பைஜான் கிளம்பியுள்ளது. இந்நிலையில், இப்படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அஜித்தின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால், படக்குழு இதுகுறித்து எந்த அறிவிப்பும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button