உருவாகிறதா கமல் பயோபிக்?; ஸ்ருதிஹாசன் விளக்கம்

நடிகை ஸ்ருதிஹாசன், ‘தி டெகாய்ட்’, ‘சலார்- 2, சென்னை ஸ்டோரி உட்பட சில படங்களில் இப்போது நடித்து வருகிறார். தந்தையர் தினத்தை முன்னிட்டு அவர் அளித்த பேட்டியில் கமல்ஹாசன் தன்னை எவ்வாறு ஊக்கப்படுத்தினார் என்று தெரிவித்தார்.

அவரிடம் இருந்து இயக்குநர் ஆக வேண்டும் என்ற உந்துதலை பெற்றுள்ளதாகத் தெரிவித்த ஸ்ருதிஹாசனிடம் கமல்ஹாசனின் பயோபிக் உருவானால் இயக்குவீர்களா? என்று கேட்டபோது, மறுத்தார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “அப்பாவின் வாழ்க்கை கதையை நான் படமாக்கினால், அது ஒரு சார்பாகவே இருக்கும். ஆனால், அவர் கதையை சிறப்பாக படமாக்கக் கூடிய திறமையான பலர் இருக்கிறார்கள் என நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button