ரஷியா மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 27 பேர் பலி

“மாஸ்கோ, உக்ரைன்-ரஷியா போரானது 2 ஆண்டுகளை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குகின்றன.

இதன் மூலம் உக்ரைன் இன்னும் போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது.இந்தநிலையில் ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பிராந்தியத்தை குறிவைத்து உக்ரைன் சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது.

அவற்றில் 20-க்கும் மேற்பட்ட டிரோன்களை ரஷிய வான்பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். எனினும் இந்த தாக்குதலில் 27 பேர் பலியாகினர். மேலும் 15 பேருக்கு படுகாயம் ஏற்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.”,

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button