இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல்

இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்களின் தங்குமிடமான ஐக்கிய நாடுகள் சபையால் பராமரிக்கப்பட்டு வரும் பாடசாலை மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 12 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹமாஸ் போராளிகளும் அங்கு தங்கியிருந்ததாக இஸ்ரேல் இராணுவத்தை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனன.

இஸ்ரேலியா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலை “குழந்தைகள் உட்பட மக்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்டதாக” ஒக்ஸ்பம் இன்டர்நெசனல் ( Oxfam International) தெரிவித்துள்ளது.

பேரழிவான போரை நிறுத்துவதற்கு இரு தரப்பிலும் அழுத்தம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதால், எதிர்வரும் நாட்களில்அண்மைய போர்நிறுத்த முன்மொழிவுக்கு ஹமாஸ் தனது முறையான பதிலைச் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக எகிப்திய மற்றும் கத்தார் மத்தியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

டெய்ர் எல்-பாலாவில் உள்ள அல்-அக்ஸா வைத்தியசாலை மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதாவது காயமடைந்த மற்றும் இறந்தவர்களால் வைத்தியசாலை நிரம்பியுள்ளமை இவ்வாறு விபரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,Nuseirat அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் மத்திய காசாவில் அமைந்துள்ள Magazi அகதிகள் முகாம் மீதான தாக்குதலில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 06 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் ஹமாஸ் போர் ஆரம்பமானதிலிருந்து இதுலரை 36,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் 83,000 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button