அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் மினிசொட்டா மாகாணம் மினியாபொலிஸ் நகரின் வொய்டியர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இன்று துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.

மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர். இதன் மூலம் இச்சம்பவத்தில் மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *