ஒரே ஒரு சட்டத்தால் தென்கொரிய நாட்டு மக்களின் 2 வயது குறைந்தது.. எப்படி தெரியுமா?

தென்கொரிய நாடு ஒரே ஒரு சட்டம் இயற்றியதை அடுத்து அந்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் இரண்டு வயது குறைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மற்ற நாடுகளைப் போல் தென்கொரியாவில் வயது கணக்கிடப்படுவதில்லை. குழந்தை பிறக்கும்போதே ஒரு வயது என்று கணக்கிடப்படுகிறது. ஏனெனில் வயிற்றில் இருக்கும் போதே அந்த குழந்தையின் வயது கணக்கிடப்படுகிறது.

அதேபோல் ஒவ்வொரு குழந்தையின் பிறந்தநாள் அன்று வயது கணக்கிடப்படுவதில்லை. ஜனவரி ஒன்றாம் தேதி தான் வயது கணக்கிடப்படுகிறது.

ஒரு குழந்தை டிசம்பர் 31ஆம் தேதி பிறந்தது என்றால் அந்த குழந்தை பிறக்கும் போதே ஒரு வயதை முடிந்திருக்கும் நிலையில் அடுத்த நாளே அதாவது ஜனவரி 1ஆம் தேதி வருவதால் அந்த குழந்தை ஒரே நாளில் இரண்டு வயதை கடந்து விடும் என்ற நிலை வரும்

ஆனால் தற்போது தென்கொரியா நாட்டில் மற்ற நாடுகள் கடைப்பிடிப்பது போல் வயது கணக்கிடப்படும் என்று சட்டம் இயற்றி உள்ளது. இதனை அடுத்து தென்கொரிய நாட்டு மக்களின் இரண்டு வயது குறைந்துள்ளது. இதனால் அந் நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button