16 நாய் இனங்களை வளர்க்கத் தடை: வேதனையில் உரிமையாளர்கள்

டோபர்மேன், ஜெர்மன் ஷெப்பர்ட், ரொட்வெய்லர்  உள்ளிட்ட 16  வகையான நாய்களை வளர்க்க எகிப்து அரசு தடைவிதித்துள்ளது.

மேலும் குறித்த நாய்களை வளர்ப்பவர்கள்  அவற்றை ஒரு மாதத்திற்குள் கால்நடை துறையிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இவ்அறிவிப்பானது நாய் வளர்ப்பவர்களிடையே  பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ”பெற்ற பிள்ளைகளைப் போல் தாம் வளர்ப்பு நாய்களைக் கருதுவதால் அரசின் இவ் அறிவிப்பானது தமக்கு மிகுந்த வேதனையை அளிப்பதாகவும், எனவே அரசு  இவ்விடயத்தில்  சற்று கரிசனையைக்  காட்டவேண்டுமெனவும் நாய் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எகிப்தில் கடந்த ஏப்ரல் மாதம், அண்டை வீட்டுக்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர், அவர்கள் வளர்த்த ரொட்வெய்லர்நாய்  கடித்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

இச்சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்தே ஆபத்தானதாகக் கருத்தப்பட்ட 16 நாய் இனங்களை வளர்க்க எகிப்து அரசு தடை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button