20 லட்சம் பேருக்கு 200 வகையான நோய்

தமிழகத்தில், 20 லட்சம் பேர் வரை சுகாதாரமற்ற உணவு உட்கொள்வதால், 200 வகையான நோய் பாதிப்பு உள்ளாகும் அபாயம் உள்ளது,” என, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.

இதுகுறித்து, இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது:

பெரும்பாலான நோய்களுக்கு உணவு முறை முக்கிய காரணமாக உள்ளது. சுகாதாரமான உணவு உட்கொள்ளாததால், சாதாரண வயிற்றுப்போக்கு துவங்கி, புற்றுநோய் என, 200 வகையான நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

எனவே, வீடுகளிலேயே சுகாதாரமான உணவு உட்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். அதன்படி, சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், பாத்திரங்கள் ஆகியவற்றை, சுத்தமாக கழுவி பயன்படுத்த வேண்டும்.

காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை, இறைச்சி, மீன் ஆகியவற்றுடன் சேர்த்து வைப்பதை தவிர்க்க வேண்டும்.

அதேபோல், அதிகளவில், ‘பிரிஜ்’ பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button