1 மணி நேரம் சிரிப்பு – பணத்தை அள்ளி இறைக்கும் ஜப்பானிய மக்கள்!
சிரிக்க மறந்த மக்களுக்கு அதனை கற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை ஜப்பானிய அரசு மேற்க்கொண்டு வருகின்றது.
இந்நிலையிலேயே, டோக்கியோவில் உள்ள கலைக்கல்வி நிறுவனம், சிரிக்க மறந்த ஜப்பானிய மக்களுக்கு சிரிக்க கற்றுக் கொடுக்கும் வகுப்புக்களை செயற்படுத்தி வருகின்றது.
இதற்காக, ஒரு மணிநேரம் நீடிக்கும் ஒரு பாடத்திற்கு 7,700 யென் ($55) செலவழித்து ஜப்பானிய மக்கள் இவ்வகுப்பில் கலந்துக் கொள்கின்றனர்.
உலகில் கொரோனா தொற்று உச்சக்கட்டத்தை எட்டி இலட்ச கணக்கானோர் பலியான நிலையில், மக்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
அத்தோடு, கொரோனா பரவுதலால் மக்கள் மத்தியில் முகக்கவசம் அணியும் பழக்கம் காணப்பட்டது.
மேலும், ஜப்பானிய அரசினால் முகக்கவசம் அணியும் முறை நீக்கப்பட்டாலும் சிலர் அதனையே வழக்கப்படுத்திக் கொண்ட தன்மைகள் காணப்படவே செய்துள்ளன.
இதன் தாக்கத்தால் ஜப்பானியர்கள் சிரிக்கவே மறந்து விட்டதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையிலேயே ஜப்பானிய அரசு மேற்காணும் செயற்பாடுகளை செயற்படுத்தி வருகிறது.
![]()