தாய்மையும்; தாம்பத்தியமும்!… ( சிறுகதை ) …. ஏலையா க.முருகதாசன்.

தாய்மையைப் பேணியும் தாம்பத்தியத்தைப் பேணியும் அவள் குடும்பத்தை நடத்தும் சமநிலைப் பாங்கை அவளின் முகத்தைப் பார்த்து இரசித்த வண்ணம் கண்ணத்தில் தவழ்ந்த தலைமயிரை மனைவியின் காதோரம் ஒதுக்கிவிட்டபடி மனைவியின் பின் கழுத்தில் ஆதரவாக கையை வைச்சபடி அவனும் கண்ணயர்கிறான்.
-கணவன் கனகேஸ்வரன்.
தாய்மையும்; தாம்பத்தியமும்!… 
வேலை முடிஞ்சு வேகமாக பஸ் ஸ்ராண்ஐட நோக்கி வந்து கொண்டிருந்த கஸ்தூரி,கைத்தொலைபேசி அடிக்கவே கைப்பைக்குள் கையைவிட்டுத் துழாவி எடுத்து யார் ரெலிபோன் செய்கிறார்கள் என்று பார்த்தாள்.
அம்மா என்று ஆங்கிலத்தில் பேர் விழவே கைத்தொலைபேசித் திரையை வலதுபக்கமாக அரக்கி நடந்து கொண்டே காதிலை வைச்சு „ என்னம்மா’ என்று கஸ்தூரி கேட்க,’வேலை முடிஞ்சுதா எங்கை நிற்கிறாய் „ என்று தாய் கேட்க,’வேலை முடிஞ்சு இப்ப பஸ் ஸ்ராண்டுக்குப் போய:க் கொண்டிருக்கிறன்,ஏனம்மா „ என்று கஸ்தூரி கேட்கிறாள்.
„பிள்ளை வரேக்கிலை அல்டியடியிலை இறங்கி நான் சொல்லுற சாமான்களை வாங்கிக் கொண்டு வாறியா’
„சரி சொல்லம்மா’
„காசு கையிலை இருக்கா’
„அம்மா நான் பார்த்து வாங்கிறன் இல்லாட்டி காட்டிலை வாங்கலாம்மா,பஸ் வரப் போகுது கெதியிலை சொல்லம்மா’
„ஒருநெஸ்கபே கோப்பிப் போத்தல்’
„ம்’
„ஒரு கோழிச்சலாமி’
„ம் சரி’
„அல்டியின்ரை அந்த தயிர் வைச்சிருக்கிற மூலையிலை பார் முல்லர் மில்க் இருக்குது இப்ப அங்கபோர்ட் அதிலை ஒரு ஐஞ்சு போத்தல்’
„சுப்பர் „
„ஏண்டி இப்ப சுப்பர் எண்டனி’
„பின்னை வேறை என்னன்டு சொல்றது டொக்ரர் என்ன சொன்னவர் உதொண்டும் குடிக்க வேண்டாமென்று சொன்னவரல்லோ’
„ஓமடி ஓமடி நீ அந்த டொக்கரரை விட பெரிய டொக்ரர்’
„நீங்கள் திருந்தப் போற ஆளில்லை’
„வாயை மூடிக் கொண்டு நான் சொல்றதை வாங்கிக் கொண்டு வா’
„வேறை என்ன வாங்க வேணும்’
„இரண்டு வாழைப்பழம்,இரவுச் சாப்பாட்டுக்கு புட்டவிச்சிருக்கிறன்,கொப்பா வேலையாலை இரவு பத்து மணிக்குத்தான் வருவார் அவருக்குப் புட்டுக்கு வாழைப்பழம் வேணும்,புட்டுக்கு வாழைப்பழமென்றால் அவருக்குப் புpடிக்கும், இரவுக்கு ஒரு வாழைப்பழம.; கொப்பாவுக்கு நாளைக்கு காலமை வேலை, வேலைக்கு பேகேக்கிலை பாணுக்கு ஒரு வாழைப்பம் குடுத்து விட வேணும்…’
„அம்மா நீங்கள் உங்களை பழுதாக்கி அப்பாவையும் பழுதாக்கிறியள்,லூசுக் குடும்பத்திலை நானும் வந்து பிறந்தன்,வாழைப்பழம் அப்பா சாப்பிடக் கூடாதம்மா’
„ஓ அப்பிடியோ நாங்கள் லூசென்றால் நீ மகாராணி குடும்பத்திலை பிறந்திருக்கலாமே,மற்றது கவ்லண்டிலை எண்ணை மலிச்சுப் போட்டிருக்கிதோ என்று பார்,மலிச்சுப் போட்டால் …நீ கனக்கத் தூக்கமாட்டாய்,இப்போதைக்கு ஒன்டை வாங்கிக் கொண்டு வா….’
„அம்மா எனக்கு பஸ் வரப் போகுது,நீங்கள் ஒன்று செய்யிறியளே’
„என்ன செய்ய வேணும் சொல்லு’
„உங்களுக்குத் தேவையான சாமான்களை ஒரு துண்டிலை எழுதி,அதைப் கண்டியாலை படம் பிடிச்சு வட்ஸ் அப்பிலை அனுப்பிவிடுங்கோ’
„சரி’
கஸ்தூரியின் தாய் கனகேஸ்வரி சாமான்களின் பெயர்களைத் துண்டிலை எழுதிக் கொண்டிருக்க,ரெலிபோன் அடிக்கிறது.
மறுபக்கத்தில் கனகேஸ்வரியின் சினேகிதி ஜெகதாம்பாள்,’ஈஸ்வரி அக்கா உங்களுக்கு ஒரு புதினக் கதை சொல்ல வேண்டும் முதலாந் திகதி ஓபகவுசனிலை நடந்த இளைராஜாவின்ரை மகனின்ரை புறோகிறாமிலை பொடியலைப் போல பொட்டையளும் சரிக்குச் சமனாய்க்; குடிச்சதுகளாம் கேள்விப்பட்டனீங்களே’என்று சொல்ல,’உந்தக் கோதாரி விழுந்த கதையைச் சொல்லவே எனக்கு ரெலிபோன் எடுத்தனி,நான் கையிலை வேலையாய் இருக்கிறன்’ பிறகு எடு ஈவு சோவாய்க் கதைக்கலாம் „ என்று சொல்லியபடி கனகேஸ்வரி ரெலிபோனை வைச்சுவிட்டு
பேப்பர் துண்டில் எழுதியதை கைத்தொலைபேசியில் படம் பிடிச்சு அனுப்பிப் போட்டு வீட்டு வேலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினாள்.
கொஞ்ச நேரத்தில் மகள் கஸ்தூரியிடமிருந்து ரெலிபோன் வரவே,
„சொல்லு எல்லாம் வாங்கிட்டியா’
„அம்மா நான் அல்டிக்குள்ளை நிற்கிறன், அதென்னம்மா இரண்டு வாழைப்பழம் என்றதுக்கு கீழை ஜெகதாம்பாள் என்று எழுதியிருக்குது’ என்று கேட்க’அட கடவுளே நான் அவளின்ரை பெயரையே எழுதியிருக்கிறன்,அவள் வேலை செய்ய விட்டால்தானே,அவள் சமைச்சு வைச்சிட்டு ஈவு சோவாய் இருந்து கொண்டு கொஞ்சக்காசுக்கு ரெலிபோன் கதைக்கலாம் என்டதற்காக ஊர்ப்பூராயம் கதைக்கிறதே ஜெகதாம்பாளின்ரை வேலையாயப் போச்சுது,உனக்கனுப்ப லிஸ்ட் எழுதேக்கிலைதான் அது ரெலிபோன் எடுத்துது ஏதோ ஞாபகத்திலை அதின்ரை பெயரை எழுதிப் போட்டன்,மூலையிலை முல்லர் மில்க் பார்த்தனியே…..’
„அம்மா பார்த்து வாங்கிறன் ரெலிபோனை வையம்மா „ என்று சொல்லி கஸ்தூரி ரெலிபோனை வைக்கிறாள்.
சாமான்களை வாங்கிக் கொண்டு வந்த கஸ்தூரி அடுப்படிக்கதவோடு சாமான்கள் கொண்டு வந்த பையை வைச்சிட்டு தனது அறைக்குள் போய்க் கொண்டே „அம்மா சூடாய் ஒரு தேத்தண்ணிப் போடடுத் தாம்மா „ என்று சொல்லிக் கொண்டே; போய்விடுகிறாள்.
தேத்தண்ணிக் கோப்பையுடன் அறைக்குள் போன கஸ்தூரியின் தாய்,நான் சொன்னதெல்லாத்தையும் வாங்கிக் கொண்டு வந்தனிதானே,இல்லாட்டி கொப்பர் மாதிரி எதையாவது வாங்காமல் வந்தனியோ தெரியாது „ என்று சொல்ல,’அம்மா சும்மா வழவழ என்று கதைக்காதையுங்கோ நான் எல்லாத்தையும் சரியாகத்தான் வாங்கிக் கொண்டு வந்தனான்,எடுத்துப்பாருங்கள்; நீங்கள் சொன்ன எல்லாமிருக்கும்’ என்கிறாள்.
மகள் வாங்கிக் கொண்டு வந்த சாமான்களை ஒவ்வொன்றாக எடுத்து அடுக்கிய தாய் வாழைப்பழங்கள் இல்லாததைக் கண்டு „கஸ்தூரி எங்கையடி வாழைப்பழங்கள்’ என்று கேட்க „ அம்மா உங்கைதான் இருக்கும் பாருங்கோ „ எனச் சொல்ல,’இஞ்சை காணேலையடி’ என்று தாய்; சொல்ல „அம்மா வாழைப்பழங்கள் நசியக்கூடாதென்று பைக்கு மேலை வைச்சுக் கொண்டு வந்தனான்’ என்றவள் தான் வாங்கிக் கொண்டு வந்த சாமான்களைப் பார்க்கிறாள.;;,அவள் வாங்கின எல்லாச் சாமான்களும் இருக்க,வாழைப்பழங்களை மட்டும் காணவில்லை.
„எங்கினேன் விழுந்திருக்குமோ இல்லாட்டில் பஸ்ஸிக்கிளைதான் விழுந்திருக்குமோ என்று சொல்லிக் கொண்டிருக்க’ எனக்குத் தெரியும் கொப்பாவுக்கு தப்பபாமல் பிறந்திருக்கிறாய் நீயும் கொப்பாவைப் போல வேண்டுமென்றே வாங்காமல் விட்டிருப்பாய் இப்ப அதுகள் விழுந்து போட்டுது என்கிறாய், நீ அல்டிக்குள்ளை நின்று சுகரைப் பற்றிக் கதைக்கேக்கிளையே எனக்குச்
சந்தேகம் வந்தது,இவள் வாழைப்பழங்களை வாங்காமால் வந்தாலும் வருவாளென்று அது சரியாய்ப் போச்சுது, கொப்பாவும் இப்படித்தான் வாங்காமல் வருவார் ,பிறகு என்னட்டை „இஞ்சரப்பா ஐயையோ மறந்திட்டனப்பா என்பார்,வைச்சு உரிச்சு கொப்பன் மாதிரி நடிக்கிறதிலை கெட்டிக்காரி எல்லாம் பரவணிப பழக்கம்,கொப்பற்றை ஆட்களின்ரை குணம் அப்பிடியே உன்னட்டையும் இருக்கு…’
„அம்மா இப்ப எதுக்கம்மா தேவையில்லாமல் அப்பான்ரை ஆட்களை இழுக்கிறாய் வாழைப்பழங்கள் இல்லாததும் நல்லதுதான் „ என்கிறாள் கஸ்தூரி.
„அப்ப நீ வாங்காமல்தான் வந்திருப்பாய்’![]()
„அம்மா நம்பினால் நம்புங்கோ நம்பாட்டில் விடுங்கோ, வாழைப்பழங்களை வாங்கிக் கொண்டு வந்தது உண்மை அது எங்கேயோ விழுந்திட்டுதாக்கும்’என்று சொல்லிக் கொண்டே கஸ்தூரி போய்விடுகிறாள்.
„இவளை நம்பேலாது தகப்பனைப் போல நல்லாய் நடிப்பாள்.அந்தாளும்,வேணுமென்றே சாமான்களை வாங்காமல் வருவார் நான் கேட்டதும் „ஐயையோ மறந்திட்டன் என்ரை செல்லம் என்று என்ரை கன்னத்தை தடவிச் சமாளிப்பார் நானும் ஒவ்வொருமுறையும்; „அவற்றை சரசத்துக்கு மசியக்கூடாதென்றுதான் மனசைத் திடப்படுத்துவன் ஆனால் என்ன செய்யிறது மனுசன்றை விரல் கன்னத்திலை பட்டதும் உடம்பை என்னவோ செய்ய மௌமாகிவிடுவன்…’ தன்னை மறந்து கனகேஸ்வரி வாய்விட்டுச் சொல்ல,
„அம்மா உனக்குள்ளை சொல்றதாக நினைச்சுக் கொண்டு எனக்கும் கேட்ககத்தககதாக சொல்றாயம்மா இப்பதான் தெரியுது உங்கடை ரெண்டு பேற்றை ஸ்ரோரியும் „ என்று கஸ்தூரி அறைக்குள்ளிருந்து சொல்லியதை கனகேஸ்வரி கேட்டதும் „ஐயையோ நான் புலம்பினது அவளுக்கு கேட்டுடிச்சோ’ என வெட்கப்படுகிறாள்.
கணவன் வேலையால் வந்ததும் புட்டையும் கத்தரிக்காய் குழம்பையும் கோப்பையில் போட்டு கணவனுக்கு முன்னால் சாப்பாட்டு மேசையில் வைச்சுக் கொண்டே கனகேஸ்வரி „இண்டைக்கு உங்கடை மோள் என்ன காரியம் செய்தவள் தெரியுமோ’ என்று சொல்ல „இரண்டு வாழைப்பழங்கள் வாஙகிக் கொண்டு வரச் சொன்னனான் ஒண்டு இப்ப சாப்பிடவும் மற்றதைக் காலமை வேலைக்குப் போகேக்கை தந்துவிட என்று நினைச்சு சொல்லிவிட வாங்கின வாழைப் பழங்களை பஸ்சுக்குள் துலைச்சுப் போட்டன் என்று சொல்கிறாள்,இவள் உண்மை சொல்கிறாளா இல்லாட்டி பொய் சொல்கிறாளா என்று தெரியேலை’ என்று கனகேஸ்வரி இழுக்க „சரி சரி அதை விடு,அவள் பொய் சொல்லியிருக்கமாட்டாள்’ என்று கணவன் சொல்கிறான்.
கணவனும் மனைவியும் சாப்பிட்டு முடிஞ்சதும்,படுக்கையறைக்குப் போகும் வழியில் „பிள்ளை சாப்பிட்டாளா’ என்று கணவன் கேட்க „ அவள் எட்டு மணிக்கே
சாப்பிட்டிட்டாள் முட்டையும் கூனி இறால் கருவாடும் போட்டுப் பொரிச்சுக:; குடுத்தனான் என்று பதில் சொல்லியபடி படுக்கையறைக்குள் நுழைகிறாள்.
கணவன் கைத்தொலைபேசியை நோண்டிக் கொண்டிருப்பதைக் கவனிச்ச கனகேஸ்வரி’காலமைக்கு நாலுமணிக்கு நீங்கள் வேலைக்குப் போக எழுமN;பாணும்,உதை வைச்சிட்டு அந்தப் பக்கமாகத் திரும்பிப் படுங்கள் எனக்கு நித்திரை வருகுது நானும் நாலு மணிக்கு எழும்ப வேண்டும் „ என்று கணவனுக்குச் சொல்ல,மனைவிக்கு கேட்டும் கேளாத மாதிரி’அலுவல் ஒன்றிருக்கு’ என்று மனைவியைக் கடைக்கண்ணால் பார்த்தபடி கைத்தொலைபேசியில் முகநூலைத் தட்டியவர்,மனைவி சம்மதிப்பாளா என்பதை நோட்டம் விட்டபடி „இஞ்சை பாரப்பா கொண்ணர் இரண்டு வாழைப் பழங்களைப் ; போட்டு என்னவோ எழுதியிருக்கிறார்’ என்று சொல்ல,’இப்ப நீங்கள் என்னைக் கடைக் கண்ணால் பார்த்தபடி ஏதோ அலுவலிருக்கு என்று சொன்னியளே அது என்ன அலுவல்,எனக்கும் நீஙகள் எதைச் சொல்றியள் என்று விளங்கும்,நீங்கள் விடிஞ்சாலும் நித்திரை கொள்ளப் போவதில்லை என்னையும் நித்திரை கொள்ள விடமாட்டியள்’ என்று சொல்ல, கணவன் மனைவி சொன்னதைக் கேளாத மாதிரி கனகேஸ்வரியின் தமையன் முகநூலில் எழுதியதை வாசிக்கிறார்.
„நான் இன்று 952 இலக்க பஸ்ஸில் வீட்டுக்குப் போவதற்காக ஸ்ரேகிறாடர் பஸ் ஸ்ராணடில் நின்ற அந்த பஸ்ஸின் பின் கதவு வழியாக ஏறி,கதவோடு இருந்த இருக்கையில் இருக்காமல் எதிரே இருந்த இருக்கையில் இருந்த போது எனது இருக்கைக்குப் பக்கத்தில் உள்ள இடது பக்க இருக்கைக்கு கீழே இரண்டு வாழைப்பழங்கள் விழுந்து கிடந்ததைக் கண்ட நான்,யாராவது இருக்க வந்தால் அரக்கி இடம் கொடுக்கையில் நானே வாழைப்பழத்தில் மிதிக்க வாழைப்பழம் சளுக்கென்று நசிஞ்சு எனது சப்பாத்தில் ஒட்டிக் கொள்வதுடன் பஸ்சும் அழுக்காகிவிடுமே என்பதை நன்றாக யோசிச்சு முடிவெடுத்த நான் குனிஞ்சு வாழைப்பழத்தை எடுத்து எனக்கருகிலிருந்த இருககையில் வைச்ச நான் மனம் கேட்காமல்,நானே அரக்கி யாருக்காவது இடம் கொடுக்கையில் வாழப்பழங்களுக்கு மேல் நான் இருக்கையில் வாழைப்பழங்கள் நசிந்து பின் காற்சட்டை அழுக்கானால் அதைப பார்ப்பதற்கு அசிங்கமாகியும் பிசுபிசுப்பும் ஏற்பட்டுவிடும் என்பதற்காக அவற்றை எடுத்துக் கொண்டு போய் சாரதியிடம் கொடுக்க அவர் கீழே நின்ற பஸ் நிறுவனப் பணியாளரிடம் கொடுத்தார்.
யார் தொலைத்த வாழைப் பழங்களோ தெரியாது,தொலைத்தவர் வீட்டிலை பேச்சு வாங்கினாலும் வாஙகலாம் „ என்று எழுதியதைக் கணவன் வாசித்து முடிச்சதும் அதைக் கேட்டுக கொண்டிருந்த கனகேஸ்வரி „பிள்ளை கஸ்தூரி இங்கை வா’ என்று கூப்பிட தனது அறையைவிட்டு தாய்தகப்பானின்ரை படுக்கையறைக்குள் கஸ்தூரி வர’ உன்ரை மாமா வாழைப்பழங்களின் கதையொன்றை எழுதியிருக்கிறார்,இதுதான் நீ துலைச்ச வாழைப்பழங்களோ என்று பார்’ என்று தாய் சொல்ல,தகப்பனிடமிருந்து கைத்தொலைபேசியை வாங்கிப் பார்த்த கஸ்தூரி,’ஓமம்மா நான் துலைச்ச வாழைப்பழங்கள் இவைதான்,நான் வாழைப் பழஙகளை வாங்காமல் பொய் சொல்றன் என்று நினைச்சியள் இப்பவாவது
நம்புறியளா „ என்றவள் தாய்க்கு செல்லமாக தலையில்: ஒரு குட்டுக் குட்டிவிட்டு தனது அறைக்குள் போகிறாள்.
அவள் போனதன் பின் சில நிமிடங்கள் செல்ல „அலுவல்’ என்று கணவன் கனகேஸ்வரியின் காதில் கிசுகிசுக்க „பேசாமல் படுங்கள்’ என அவள் சொல்வது கேட்டு கொஞ்ச நேரம் அமைதி படுக்கை அறையில் நிலவியது.
சில நிமிடங்கள் செல்ல,’இண்டைக்குத்தான் இந்த அலுவல் கடைசியும் முதலுமாய் இருக்க வேணும்,உங்களுக்கென்ன ஆம்பளை,நான் தாய் பக்கத்தறையில் பெத்தபிள்ளை படுத்திருக்கு அதுவும் ஒரு குமர்ப்பிள்ளை,எந்த அசிகையும் கேட்காதென்ற நினைக்கிறியளாக்கும்.இனிமேலைக்கு யாருமில்லாத நேரம் பகலென்றாலும் பரவாயில்லை….இப்படி வேண்டாம் எனக்கு உடம்பு கூசுது…நான் தாய்,இதுதான் கடைசியும,;முதலும் என்று சிணுங்களும் கோபமுமாகச் சொல்ல,கணவன் கல்லுளி மங்கனாய் அமைதியாகிறான்.
„இண்டைக்குத்தான் கடைசியும் முதலுமென்று சொல்வதும்’பிறகு அதையும் மீறி சல்லாபம் நடப்பதும் வழமையாக வருடக் கணக்காக நடக்கும் ஒன்றுதான்.
ஓரிரு நிமிடங்கள் கழித்துக் கனகேஸ்வரி ரொய்லற்றுக்கு எழுந்து போனவள் திரும்பி வரும் போது மகளின் அறைக்கதவை மெதுவாக தள்ளிப் பார்க்கிறாள்.
மகள் கஸ்தூரி தன்னை மறந்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்,அப்படியென்றால்,அவள் நேரத்தோடு நித்திரையாகிவிட்டாள் என்று நினைச்சு நிம்மதி மூச்சுவிட்டாள் கனகேஸ்வரி.
பூனை போல மெதுவாக வந்து படுத்தவள் குப்புறப்படுத்திருக்கும் கணவனின் முதுகின் iயையைப் போட்டு படுத்தபடி „காலமைக்கு முட்டைக் கோப்பி போட்டுத் தாறதோ „ எனச் சத்தமில்லாமல் கேட்க,கணவன் „ம் „ என்று பதிலளித்து „அதிலும்’ கொஞ்சம் விட்டால் நல்லது எனச் சொல்ல’ ஒரு சாப்பாட்டுக் கரண்டியளவுதான் விட்டுத் தருவன்’ என்கிறான்.
„சரி’ என்று சொன்னவன் கண்ணை மூடி நித்திரையாகப் போகும் மனைவியை வாஞ்சையோடு பார்க்கிறான்.
தாய்மையைப் பேணியும் தாம்பத்தியத்தைப் பேணியும் அவள் குடும்பத்தை நடத்தும் சமநிலைப் பாங்கை அவளின் முகத்தைப் பார்த்து இரசித்த வண்ணம் கண்ணத்தில் தவழ்ந்த தலைமயிரை மனைவியின் காதோரம் ஒதுக்கிவிட்டபடி மனைவியின் பின் கழுத்தில் ஆதரவாக கையை வைச்சபடி அவனும் கண்ணயர்கிறான்.
![]()