நியூஸிலந்தின் முன்னாள் பிரதமர் ஜசிண்டா ஆர்டனுக்கு உயரிய அங்கீகாரம்
நியூஸிலந்தின் முன்னாள் பிரதமர் ஜசிண்டா ஆர்டனுக்கு (Jacinda Ardern) ‘dame’ என்ற உயரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
COVID-19 நோய்ப்பரவலின் போதும் கிரைஸ்ட்சர்ச் (Christchurch) பள்ளிவாசல் தாக்குதல்களின் போதும் அவர் ஆற்றிய சேவைக்கு அந்த அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.
“இந்த அங்கீகாரத்தை ஏற்றுக்கொள்வதில் எனக்கு இருமனதாக இருந்தது. கடந்த 5 ஆண்டுகளாகப் பல சிக்கல்களை நாம் ஒரு தேசமாக ஒன்றிணைந்து சந்தித்தோம். பலர் எனக்கு அளித்த ஊக்கம் என்னை இந்த அங்கீகாரத்தைப் பெற வைத்தது. இதனைப் பெறுவது எனது குடும்பம், சக ஊழியர்கள், எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவிப்பது போல் உள்ளது,” எனத் திருவாட்டி ஜசிண்டா கூறினார்.
நியூஸிலந்து எதிர்கொண்ட பல சிக்கல்களை எதிர்த்துப் போராடிய திருவாட்டி ஜசிண்டாவின் சேவை அங்கீகரிக்கப்பட்டதாகப் பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் (Chris Hipkins) தெரிவித்தார்.
![]()