அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக பாலியல்வன்முறை குற்றச்சாட்டுகளை சுமத்திய பெண் ரஸ்யாவில் – பிரஜாவுரிமையை பெற முயற்சி

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தன்னை பாலியல்ரீதியில் துன்புறுத்தினார் என குற்றம்சாட்டிய பெண் ரஸ்யா சென்றுள்ளார்.

டராரீடே என்ற 59 வயது பெண்ணே ரஸ்யாவிற்கு சென்றுள்ளதுடன் அந்த நாட்டின் பிரஜாவுரிமையை கோரியுள்ளார்.

ரஸ்யாவில் பாதுகாப்பாக உணர்வதாக தெரிவித்துள்ள அவர் அந்த நாட்டில் வாழவிரும்புவதாக தெரிவித்துள்ளார்.

1993 இல் பைடனின் காங்கிரஸ் அலுவலகத்தில் பணியாற்றியவேளை அவர் தன்னை பாலியல்ரீதியில் துன்புறுத்தினார் என அந்த பெண்மணி குற்றம்சாட்டியிருந்தார்.

எனினும் பைடன் இந்த குற்றச்சாட்டை உறுதியாக நிராகரித்திருந்தார்.

பைடன் செனெட்டராக பணியாற்றியவேளை அவரின் கீழ் இந்த பெண்மணி பணியாற்றியிருந்தார்,2020 இ;ல் தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பமானவேளை அவர் பைடனிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார்.

தனது 29 வயதில் அமெரிக்க நாடாளுமன்றில் பைடன் தன்னை பாலியல்ரீதியில் துன்புறுத்தினார் என அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

விமானத்திலிருந்து மொஸ்கோவில் இறங்கியவேளை நான் நீண்டநாட்களின் பின்னர் பாதுகாப்பாகவும் மதிப்பு கிடைப்பதாகவும் உணர்ந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

ரஸ்ய ஜனாதிபதியிடம் நான் ரஸ்ய பிரஜையாவதற்காக விண்ணப்பிக்கப்போகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button