கதைகள்

“நாதஸ்வர ஓசையிலே”….. சிறுகதை …..

 

எப்பொழுதும் சிவா வீட்டில்தான் பாலா இருப்பான். சிவாவின் அப்பா மாரிமுத்து நாதஸ்வர வித்துவான் அவர் சீர்வாளியை ச்சரி செய்வதும் ஓட்டைகளைச் சுத்தம் செய்து நன்றாக எண்ணெய் பூசப்பட்ட இந்த நாதஸ்வரத்தை எடுத்து வாசிப்பதும் அதில் தொங்கும் வண்ண வண்ண மஞ்சள் கயிறுகளும் பலவிதமான சீர்வாளிகளும் பார்த்துக் கொண்டே இருப்பான் அவற்றைப் பார்த்தால் அவனுக்கு அவ்வளவு ஆசையாக இருக்கும். என்றாவது ஒருநாள் அதை எடுத்து வாசிக்க வேண்டும் அதை எடுத்து கையில் பார்க்க வேண்டும் என்று மிகுந்த ஆசையோடு இருந்தான்பாலகுருநாதன்.வித்வான் மாரிமுத்துவைதெரியாதவர்கள் சுத்துப்பட்டியில் இல்லை.

அவர்கள் குடும்பம் வழிவழியாக கோவிலில் மங்கள இசை வாசித்து வந்த குடும்பம் மெல்ல மெல்ல அதை வாசிப்போர் குறைந்து கேட்பதும் குறைந்து கொண்டே வந்த காலம்.அவர் மகன் சிவாவிற்கு நாதஸ்வரம் வாசிப்பதில் விருப்பமில்லை பலமுறை சொல்லிப் பார்த்தும் அடித்து பார்த்தும் அவன் அதை தொடவே மறுக்கிறான். ஆனால் சிவாவின் நண்பன் பாலகுருநாதன் மிகுந்த ஆசையோடும் விருப்பத்தோடும் நாதஸ்வரம் வாசிக்கும் எண்ணத்தோடும் சிவாவுடன் பழகினான்.

அவன்நிறைய ஊர் திருவிழாக்களில் திருமண வீடுகளில் அறுபதாம் கல்யாண வீடுகளில் மாரிமுத்து வாசிக்கும்போது கூடவே சென்று விடுவான். அவர் வாசிப்பதைக் கேட்பது ஒரு அலாதி சுகம் அது.மட்டுமல்லாது அவர் போகிற இடமெல்லாம் நல்ல உணவு கிடைக்கும்.இப்பொழுதெல்லாம் கோயிலில் இசைத்தட்டு போடுவதும் இயந்திரத்தின் மூலமாக நாதஸ்வர இசை போடுவதுமாக இருந்தது மெல்ல மெல்ல மாரிமுத்துவினுடைய இசையை க்கேட்பது அங்கே குறைந்துவிட்டது.

வெறுத்துப் போய் கோபத்தின் உச்சியில்சில நேரம் புலம்புவது உண்டு. ஆனாலும் நாள்தோறும் அவர் அதிகாலையில் கோயிலில் வாசித்தால்தான் நாள் விடியும் உண்டு சிவ பெருமானுக்கு பிடித்த இசையே மாரிமுத்துவின் நாதஸ்வர இசை என எல்லோரும் சொல்லும் அளவுக்கு அற்புதமான சாகித்யத்திற்கு சொந்தக்காரர் மாரிமுத்து ..

பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், சிவராத்திரி போன்ற நாட்களில் அவர் வாசிக்காத நாட்களே இல்லை தமிழகத்து கோயில்களே இல்லை.நிறைய பேர் அவர் வாசிப்பதை ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ இருந்து கேட்டு சிறப்பாக பண முடிப்புகளை க்கொடுத்து விட்டு செல்வதுண்டு அப்படி மாரிமுத்து பிள்ளைக்கு என ரசிகர் கூட்டம் பெரிதாக இருந்தார்கள். சிவா பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரி படிப்பை வெளியூரில் சென்று விடுதியில் தங்கி படித்தான்.

ஆனால் பாலகுருநாதனுக்கு பள்ளி படிப்பை முடித்தவுடன் மேற்கொண்டு படிப்பதற்கு விரும்பவில்லை வேறு வேலைக்கு செல்லவும் விரும்பவில்லை எப்பொழுதும் பாலகுரு

மாரிமுத்து உடனே சென்று கொண்டிருந்தான் வீட்டில் அவள் அம்மா மட்டும் “ஏன்டா இப்படி ஏதாவது மேக்கொண்டு படிக்கலாம் ஒரு வேலைக்கு போனா

என்ன எதுவுமேஇல்ல எதும் .இல்லாம இப்படி நாதஸ்வர வித்வான் மாரிமுத்து பின்னாடி அலைறீயே நீ எல்லாம் எப்ப உருப்பட போறியோ”.என்பாள்.

ஆனாலும் நாள்தோறும் அதிகாலையில் 6 மணிக்கு க்குளித்து முடித்து அவர் சிவன் கோயிலில்வாசிக்கையில் கூடவே இருப்பான் அவர் எங்கெல்லாம் வாசிக்கப் போகும்போது அவருக்குள் பணிவிடை எல்லாம் செய்வான் ஒருநாள் எப்படியாவது அவர் சொல்லித் தருவார் என்ற நம்பிக்கையில் சிவாவை போலவே பாலகுருநாதன் ஒரு மகன் போல மாரிமுத்துடனே அலைந்து சென்றான் அவர் மேல் அவர் மேல் பாசமும் மரியாதையும் வைத்திருந்தான்

பலமுறை கேட்டும் பலமுறை கெஞ்சி பார்த்தும் அவர் நாதஸ்வரம் வாசிக்க அவனுக்கு சொல்லிக் கொடுக்கவில்லை .தன் மகன் நாதஸ்வரத்தை வாசிக்கவில்லையே என்ற வருத்தமும் வேதனையும் இருந்தது. சிவாவின் அம்மாவும் அவ்வப்போது பாலகுருநாதனை திட்டி “சிவா எப்படி ஒழுங்கா படிக்கப் போறான் நீ எதுக்குடா இந்த ஆளு கூட சேர்ந்து சுத்திகிட்டு இருக்க இதெல்லாம் நம்பினால் வாழ்க்கையில ஒன்னும் தேறாது ”

பலமுறை அக்கறையோடும் அன்போடும் கண்டிப்போடும் அவள் சொல்வாள் எதுவும் அவன் மண்டையில் ஏறாது.ஊருக்குள் பெரிய இழவு பெரிய நாட்டாமைக்காரர் பாட்டி இறந்துவிட்டார் . கல்யாணச் சாவு. தேற்பாடை சடங்கு ட்ரம்செட் எல்லாம் ஏற்பாடானது. இருந்தாலும் நாதஸ்வரம் வாசிக்க வேண்டும் யாரை அழைக்கலாம் என்ற பொழுது மாரிமுத்து பிள்ளைக்கு உடல்நலம் சரியில்லாமல் அவர் படுத்து விட்டார் ஒரு வாரமாக கடுமையான காய்ச்சலில் இருக்கிறார்.

எழுந்துக்க முடியாத சூழ்நிலை என்ன செய்யலாம் என்று யோசித்து யோசித்து பெரிய இழவு எல்லோரும் நாலு பக்கமும் சென்று பார்க்கிறார்கள் எந்த ஊரிலும் யாருமே இல்லை இருந்தாலும் நாதஸ்வரம் இல்லாமல் எப்படி இந்த எழவை முடிப்பது என்று எல்லோருக்கும் மனக்குறையாக இருக்கிறது சில பெருசுகள் அதை கண்டிப்பாக வலியுறுத்துகிறார்கள்.எங்கிருந்தாலும் ஒரு ஆள புடிச்சு கூட்டிட்டு வாங்கடா ஒரு நாலு பாட்டு நாயனம்ஊதித்தான்தான் கிழவிக்கு பாடை கட்ட வேண்டும் என்றது .ஊர்சனம்

பெரியோர்கள் சொன்னதை எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்த காரணத்தினால் சிறுசுகள் கடுப்பில் ஆட்களைத் தேடிக்கொண்டே இருந்தார்கள்யாரும் கிடைக்கவில்லை எப்படியாவது மாரிமுத்து பிள்ளையை எழுப்பி வாசிக்க சொல்லலாம் என்றார் அவர் சுயநினைவுஇல்லாமல் படுத்துக்கொண்டு கிடக்கிறார் அவரால் எதுவும் முடியாது.

எல்லோரும் இப்படி ஊரே நாதஸ்வர வித்வானை தேடிக்கொண்டிருந்த பொழுது எவனோ ஒருவன் கோபத்தில் இந்த வித்துவான் மாரிமுத்துவுக்கு வந்த கெரகத்தை பாத்தீங்களா ஒவ்வொரு நாளும் கோயில்ல ஊதிக்கிட்டு இருப்பாரு கல்யாண வீட்டில எழவு வீட்டுல ஊதிக்கிட்டு இருப்பாரு இப்படி நமக்கு அவசரம் சொல்லும் போது அந்த ஆளும் படுத்துக்கிட்டாரு வேற யாராவது உருவாக்கி வைத்திருந்தாலும் பரவாயில்லை அவர் மகனும் படிக்க போய்ட்டானா பெரிய கலெக்டராக போறேன்

என்று வாய்க்கு வந்தபடி மாரிமுத்து பிள்ளையின் குடும்பத்தை பேசியது பாலகுருநாதனுக்கு ஆத்திரத்தை வரவழைத்தது வேகமாக அவர் வீட்டுக்கு போனான் அவர் மனைவியிடம் சொல்லிவிட்டு அவர் வைத்திருந்த நாதஸ்வர பையை எடுத்து வந்து நாட்டாமைக்கார அம்மா வீட்டின் முன்பு நின்று பெரிய அளவில் எல்லோரும் பார்க்கும்படி நாதஸ்வரத்தை எடுத்து முதலில் ஒரு மல்லாரியை வாசித்து

விட்டுஇறைவணக்கப் பாடல் ஒன்றை வாசித்து விட்டு பின்பு சோகப்பாடல்கள் தொடங்கினான்.

“எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்”

“சோதனை மேல் சோதனை போதுமடா சாமி”

“ஆறு மனமே ஆறு ஆண்டவன் கட்டளை ஆறு”

சோல பைங்கிளியே “சொந்தமுள்ள பூங்கொடியே,ஈச்ச இளங்குறுத்தே என் தாயே”

அவன் வாசிக்க வாசிக்க இலை அழுதது பூ அழுதது செடி அழுதது மரம் அழுதது வானம் அழுதது மழை பொழிந்தது.எல்லோரும் ஒருபுறம் வியப்பாகவும் மறுபுறம் எப்படிடா இவன் வாசிக்கிறான் என மலைப்பாகவும் பார்த்தார்கள் .

ஆக மொத்தம் ரசித்தார்கள் அடுத்த கட்ட நடவடிக்கை ஆயத்தப்படுத்திய அத்தனை பேரும் கூட இன்னும் கொஞ்ச நேரம் இவன் வாசிக்கட்டும் நேரம் ஆனாலும் பரவாயில்லை கிழவியை பிறகு தூக்கி விடலாம் இவன் வாசிப்பில் மயங்கி அத்தனை பேரும் லயித்து அழுது புலம்பி ரசித்து மகிழ்ந்தனர்.ஊர் முழுவதும் இதான் பேச்சாக இருந்தது. பாலகுருநாதரின் அம்மாவிற்கு தெரிந்தது. அவள் ஏற்கனவே இவனை கரித்துக் கொண்டிருந்தவள் இப்படி அவர் வேலைய பாரு அப்படி இழவு வீட்டுல ஊதிக்கிட்டு இருக்கானே

இதெல்லாம் எதுல போய் முடிய போகுதோ கல்யாணம் முடிச்சோம் புள்ள பெத்து எடுத்தோம் மனுசனா வாழ்ந்தமில்லாம இப்படி இந்த குழாய புடிச்சிகிட்டு அலைஞ்சா என்ன செய்ய முடியும். பார்க்கும் எல்லோரிடம் அழுது புலம்பினாள் எல்லோரும் இல்ல அவனை மாதிரி வாசிக்க முடியுமா மாரிமுத்து புள்ளைய போல அப்படியே வாசிக்கிறான் அவருக்கு அப்புறம் இந்த ஊர்ல இந்த ஜில்லாவுல யாருமே இல்லைன்னு நினைச்சோம் இதோ நமக்கு ஒரு ஆள் கிடைத்துவிட்டான். இதை வச்சு பெரிய ஆளா வந்துருவான் என்று எல்லோரும் சொன்னபோதும் உள்ளுக்குள் லேசாக மகிழ்ந்தான் ஆனாலும் அவள் மனதுக்கு இது பிடிக்கவில்லை தான்

அங்கே சுய நினைவில்லாமல் படுத்து கிடந்த மாரிமுத்து இவன் வாசித்தது கேட்டவுடன் லேசாக உடம்பு அதிர்ந்தது பத்து நாள் படுக்கையில் கிடந்தவர் எழுந்து உட்கார்ந்து விட்டார். எல்லோருடைய பாராட்டையும் பெற்றுக்கொண்டு அவர்கள் தந்த ஆயிரம் ரூபாய் பணத்தையும் வெட்கத்தோடு வாங்கிக் கொண்டு நேராக மாரிமுத்து ஐயாவிடம் சென்றான் அவர் காலுக்கு அருகியில் நாதஸ்வரத்தை வைத்து கீழே விழுந்து வணங்கி அவர்கள் கொடுத்த ஆயிரம் ரூபாய் எடுத்து அவர் கையில் கொடுத்தான் என்னை மன்னிச்சிருங்க”

ஒரு ..ஒரு …வேகத்துல உங்கள பத்தி தப்பா பேசின காரணத்துனால உங்களுக்கு தெரியாம உங்களை கேக்காம உங்களுடைய நாதஸ்வரத்தை எடுத்துட்டு போய் நான் வாசிச்சிட்டேன் என காலை பிடித்து நீங்கள் மன்னித்தால் தான் எழுவேன் என்று சொல்லி காலில் கிடந்தான்.

அவன் விழுந்தவுடன் கையைப் பிடித்து எந்திரிப்பா யார் உன்னை மன்னிப்பது நானா நீ வாசித்தஇசை இருக்கிறதே அபாரமான வாசிப்பு நாதஸ்வரம் சிவன் சொத்து சிவன் கடாட்சம் அது உனக்கு கிடைத்திருக்கிறது எப்படி இது நீ கற்றாய் எங்கிருந்து கற்றாய் என்கூடவே சுத்திக்கிட்டு இருப்பியே யார்கிட்ட

போய் படிச்ச என் குருநாதர் போலவே வாசிக்கிறியே அப்பா என்று மெய் மறந்து கண்கலங்கி நீ வாசித்தது உனக்கு மட்டும் பெருமை இல்லை எனக்கும் தான் பெருமை எனக்குஏற்பட்ட அவமானத்தை உன் வாசிப்பு சரி செஞ்சுருச்சபா.

ஐயா என்ன இப்படி சொல்லிட்டீங்க நான் உங்க பின்னாடியே வந்தது நாதஸ்வரம் கத்துக்கத்தான் நான் எங்க போய் தனியாக கத்துகிறது நீங்க வாசிக்கிறது கேட்டு கேட்டு தான் நான் ஒரு வேகத்துல ஒரு உணர்ச்சில இன்னைக்கு வாசித்தேன் உண்மையிலேயே எனக்கு வாசிக்கணும் ஆசையா இருக்கு உங்களுடைய நுணுக்கமெல்லாம் கத்துக்கணும்னு ஆசையா இருக்கு .

எனக்கு இதெல்லாம் தெரியாது ஏதோஎன்னுடைய வாரிசு இந்த நாதஸ்வரத்தை எடுக்கவில்லை என்று நான் வேதனையில் இருந்தேன் ஆனால் உண்மையிலேயே நாதஸ்வரத்தை வாசித்து நீதான் என் வாரிசு என்று நிரூபித்து விட்டாய் .

போனது போகட்டும் நான் இன்னும் எத்தனை நாள் இந்த உலகத்தில் இருக்க போறனோ தெரியாது நான் இருக்கிறதுக்குள்ள உன்னையும் என்னை விட மேலான வித்துவானா மாத்தி காட்டுனா தான்இந்த மூச்சு இந்த உலகத்தை விட்டுப் போகும் நாளை காலை 5:00 மணியில் குளித்துவிட்டு கோயிலுக்கு வந்துரு என்று சொல்லி நெகிழ்ச்சியின் உச்சத்தில் மாரிமுத்து

அவர் சொன்னது போலவே மறுநாள் அதிகாலையில் அவர் வருவதற்கு முன்பே குளித்து முடித்து நல்ல வேட்டி கட்டி திருநீர் பூசி பவ்யமாக வந்து நின்றான் பாலகுருநாதன்.பழைய நடை இல்லை இருந்தாலும் தட்டு தடுமாறி மனதில் மனதில் மிகுந்த உற்சாகத்தோடு வயது ஆனால் என்ன மனது தான் உற்சாகத்திற்கு காரணம் என்று இரண்டு கையில் இரண்டு நாதஸ்வரத்தை எடுத்துக்கொண்டு கோயிலுக்குள் நுழைந்தார் மாரிமுத்து பிள்ளை.அவரைப் பார்த்தவுடன் சிவனைப் பார்த்த போன்ற மகிழ்ச்சியில் அவர் காலை விழுந்து நம்ஸ்கரித்தான்

அவரும் அவனை ஆசீர்வாதம் செய்து தனது கையில் வைத்திருந்த நாதஸ்வரத்தை அவர் பழகிய நாதஸ்வரத்தை அவன் கையில் கொடுத்து நெற்றி நிறைய திருநீறு அள்ளி பூசி விட்டு சரளி வரிசை ஜண்ட வரிசை தாள வரிசை மேல்ஸ்தாயி ,கீழ் ஸ்தாயி கீதம், வர்ணம், கீர்த்தனை மற்றும் பல்வேறு பாடல்களை வரிசையாக சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார்.பாலகுருவும் ஆர்வத்தோடு வரிசையாக அவரின் மடை திறந்த பிரபாகமாக வருகின்ற அத்தனையும் இவன் பின்தொடர்ந்து அவரே வியக்கும் அளவிற்கு கற்றுக்கொண்டுவாசிக்கத் தொடங்கினான்.தேனாறும் பாலாறும் கலந்து

பாய்ந்தது போல அந்த வளாகம் முழுவதும் கோயிலில் சிறப்பாக ஒரு இசை கச்சேரி நாள்தோறும் நடந்தது வாடிக்கையானது கற்றுக் கொடுக்கிற ஆர்வம் மாரிமுத்துக்கும் கற்றுக் கொள்கிற ஆர்வம் பாலகுருவுக்கும் சேர்ந்தது மல்லாரி பிர்கா தோடி வர்ணம் மெட்டு.

நாத கம்பீரமாய் கணபதி தொடங்கி அத்தனை கடவுளுக்கும் வணக்கம் வாடுகிறார் கடவுள் பாடலாகட்டும் மென்மையாக தாலாட்டுகிற பாடலாகட்டும் தமிழ் பாரதியார் பாரதிதாசன் போன்ற பாடலாகட்டும் அத்தனையும் காற்று நாதஸ்வரத்தில் நுழைந்து வருகின்ற போது அது இசையாய் மாறுகின்ற வித்தை விரல்களிலா நளினமான மூச்சு விடுகின்ற பயிற்சியில என்று சொல்லுகிற அளவிற்கு இசையும் காற்றும் அந்த மனதை தூய்மைப்படுத்துகிற அற்புதமான பணியை செய்து கொண்டிருந்ததுசில மாதங்களிலேயே ஒரு கச்சேரியில் வாசிக்கிற அளவிற்கு பயிற்சி பெற்றான் பாலகுருநாதன்.

மாரிமுத்து பழையபடி உடல் தேறிஎங்கெல்லாம் அவரை இசைக்கு அழைத்தார்களோ அந்த இடத்திற்கு எல்லாம் இருவரும் சென்று வாசிக்கத் தொடங்கினர் முன்னிலும் இருமடங்கு கூட்டம் இவர்களுடைய இரட்டைக் கச்சேரியில் கேட்டு மயங்கி லயித்தது மாரிமுத்துப் பிள்ளையின் மகன் சிவா படித்து முடித்து நல்ல வேலையும் சென்னையில் செட்டில் ஆகிவிட்டான் பலமுறை ஊருக்கு வந்து தந்தையும் அம்மாவையும்தன்னுடன் இருக்கும்படி சென்னைக்கு அழைத்தான்.

சிவாவின் அம்மாவிற்கு செல்ல வேண்டுமென்ற ஆசை ஆனால் மாரிமுத்து தன் ஊரைவிட்டு இந்த கட்டை எங்கேயும் வராது என்று சொல்லிக் கொண்டே இருந்தார் பலமுறை இது அவர்களுக்குள் சண்டையைஉருவாக்கிக் கொண்டிருந்தது.

ஒரு நாள் நள்ளிரவில் சிவாவின் அம்மா முத்துலட்சுமி மாரிமுத்து விடம் கடுமையாக சண்டை செய்து இருப்பாள் போல நீங்க எங்கே கடந்து நாதஸ்வரம்ஊதிகிட்ட கிடங்க இதனால் என்னத்த கண்டேன் என் மகன் கூப்பிடுறான் நான் சென்னைக்கு போகத்தான் போறேன் நீங்க வந்தா வாங்க

வராட்டி இங்கே கடங்க என்று சொன்னாள் நாதஸ்வர வித்வானாக என்னதான் ஊரெல்லாம் பேர் வாங்கி இருந்தாலும் கூட சொந்த மனைவி தனது திறமையை மதிக்க மாட்டுகிறாள் மதிக்காவிட்டாலும் பரவாயில்லை இப்படி தாறுமாறாக கேவலப்படுத்துகிறார் என உண்மையிலேயே மாரிமுத்து அன்று கடுமையாக வேதனைப்பட்டார்.

ஒரு பக்கம் தாங்க முடியாத மனக்குமுறல் இருந்தபோதும் இன்னொரு பக்கம் தனக்கு பின்பு தன் கலையை பின்பற்றுவதற்கு பாலகுருநாதன் சீடனாகவாய்த்து விட்டான் என மிகுந்த உற்சாகம் வீட்டில் இரண்டு தவறை மூச்சை இழுத்து விட்டார் அதன் பிறகு அவர் மூச்சு விடவே இல்லை. இழவு செய்தி சுத்துப்பட்டு அத்தனை கிராமத்துக்கும் தீயாய்ப்பறவியது அத்தனை மக்களும் அங்கே கூடி விட்டனர் .

பாலகுருநாதன் அழுத அழுகை எல்லோரையும் கரைத்து விட்டது சிவா ஊரிலிருந்து வந்து இறுதி காரியங்களை எல்லாம் செய்தான் உடனே பாலகோணாகவும் இருந்தான் அப்பொழுது சிவாவே அந்த நாதஸ்வரத்தை எடுத்து அவன் கையில் கொடுத்து எனக்காக நீ வாசி டா அவர் ஆசையை நான் தான் நிறைவேற்றல

நீயாவது நிறைவேற்றிவிட்ட என்னால இப்ப வாசிக்க முடியாது என்று பாலகுருநாதன் தேம்பித் தேம்பி அழுதான் இல்ல இன்னைக்கு நீ கண்டிப்பா வாசித்து ஆகணும் எல்லோரும் சொல்ல அவர்கள் சொன்னதுக்காண்டி நாதஸ்வரத்தை கையில் வாங்கிமல்லாரி வாசித்து ஒரு பிர்கா வாசித்து இறப்பின் வேதனையை குறைக்க முயற்சி செய்தது நாதஸ்வர இசை என்று சொன்னால் மிகையில்லை.

அதன் பிறகு நாள்தோறும் சிவன் கோயில் பாலகுருநாதன் நாதஸ்வரம் வாசிக்க தொடங்கினார் சில ஊர்களில் அவனை அழைத்தார்கள். அந்த ஊரில் இருந்தால் மாரிமுத்துவின் ஞாபகம் வந்து கொண்டே இருக்கிறது என்று சொல்லி பக்கத்து ஊரில் சென்று வசிக்கலாம் என அம்மாவையும் கூட்டிக்கொண்டு அங்கே சென்று விட்டான்.

பெட்டி படுக்கையோடு எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு அந்த ஊரை விட்டு அடுத்த ஊருக்கு சென்றனர் மறக்காமல் நாதஸ்வரத்தையும் எடுத்துச் சென்றான்.முன்னாடி மாறி இல்லை பல இடங்களில் இசை கச்சேரி இப்பொழுது எல்லாம் நடப்பதே இல்லை அப்படியே இருந்தாலும் ஆட்கள் குறைவாகவே பணம் குறைவாகவே கொடுக்கிறார்கள் நிறைய இடங்களில் பணமே கொடுப்பதில்லை பேருந்து கட்டணம் மட்டும் கொடுக்கிறார்கள்டேய் பாலா இதை வைத்து வாழ முடியாது சொன்னா கேளுடா .

ஏதோ ஆசைக்கு வாசித்து பாத்துட்டேன் போதும்டா அந்த மனுஷனும் போய் சேர்ந்துட்டாரு நான்எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை உனக்குன்னு சொல்லி சொல்வதற்கு ஒரு ஆள் வேணும் அதுக்கு ஒரு கல்யாணம் முடிக்கணும் அதுக்கு நல்ல வேலை தான் தருவாங்க இப்படி நாதஸ்வரம் வாசிச்சா பொண்ணு தருவாங்களாஇப்படி பலமுறை ஒவ்வொரு நாளும் அம்மா சொல்ல கேட்டு இவனும் வெறுப்பில் வேதனையில் இதை கீழே வைக்க மனசு இல்லாமல் நெருப்பில் இட்ட மெழுகாய் ஒவ்வொரு நாளும் வேதனையில் துடித்தான் .

ஒரு வழியாய் ஒரு முடிவு எடுத்தவனாய் இனி வயிறு பெரிதா மனது பெரிதா என்று யோசிக்கின்ற போது வயது தான் பெரிதாக இருக்கிறது வாழத்தான் வேண்டி இருக்கிறது அம்மாவையும் காப்பாற்ற வேண்டியிருந்தது. அம்மா முன்புபோல் வேலைக்கு செல்ல முடியவில்லை என்று யோசித்து ஒரு முடிவு எடுத்துவானாய் சரிமா நாளிலிருந்து நான் எதாச்சும் வேலைக்கு ப்போறேன் .

புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலை அருகே பெரிய மந்தைவெளி போன்ற இடம் அங்கே எல்லோரும் கூடையில் சாப்பாடு தண்ணீர் எல்லாம் வைத்துக்கொண்டு யாராவது வேலை தருகிறார்களா என்று யாராவது வேலைக்கு அழைப்பார்களா வேற ஏதாவது கொத்து வேலைக்கு கூலி வேலைக்கு அழைப்பார்களா என்ற ஏக்கத்தோடு ஒவ்வொரு நாளும் கூட்டம் கூட்டமாக நிற்பது வாடிக்கை அதில் தான். பாலகுருநாதன்

நின்று கொண்டிருந்தான் .எல்லோரையும் போல இல்லாமல் கூடுதலாக ஒரு உரை சுற்றப்பட்ட நீளமான குச்சி போல ஒன்றை வைத்திருந்தான்ர்பார்ப்பவர்கள் ஏதோ கடப்பாறை என்று நினைக்கக்கூடும் ஆனால் அதுகடப்பாரை அல்ல.அது நாதஸ்வரம் ..செல்வியும் நாள்தோரும் புது பஸ் ஸ்டாண்ட் அருகே வந்து கையில் சாப்பாடு கூடையுடன் சித்தால் வேலைக்கு வந்து நிற்பாள் . இவனைப் பார்த்ததும் இவன் ஊருக்கு புதுசு என்று தெரிந்து .

இரண்டு முறை புது பஸ் ஸ்டாண்டில் இருவரும் சந்தித்திருக்கிறார்கள் ஆனால் பேசவில்லை ஒருநாள்லாரியில் மொத்தமாக அதிக ஆட்கள் தேவை என்று மொத்தமாக ஏற்றினார்கள் அதில் பாலகுருநாதனும் செல்வியும் ஒரே இடத்தில் வேலை செய்கிற வாய்ப்பு கிடைத்தது இருவரும் ஆறு அருகே வேலை செய்தார்கள்.

மதிய உணவு இடைவெளியின் போது அவன் சாப்பிட்டு முடித்து எல்லோரும் ஓய்வாக இருக்கும் நேரத்தில் நாதஸ்வரத்தை எடுத்து வாசித்தான் அந்த பக்கம் வந்த செல்வி மெய்மறந்து போனாள் உணர்ச்சிகளைப்பில் கண்ணீர் வந்தது.அவன் அருகில் அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்சட்டென்று அவன் தலையை வருடி கொடுத்தாள். அங்கே ஒரு மின்னல் வெட்டியது மழை வர மேகங்கள் கூடின.

எங்கேயோ இருக்க வேண்டிய ஆள் இங்க இருந்து கஷ்டப்படுறீங்க உனக்கு ஒரு நல்ல காலம் அந்த மாதிரியாத்தா குடுப்பா என்று அவள் சொன்னது இவனுக்கு பெரிய ஆறுதலாக இருந்தது.இதே மாதிரி வாழ்க்கை பூரா என் கூட இருந்து என்னைய பாராட்டி சொல்லிக்கிட்டே இருப்பியா வெட்கத்தில் சிரித்தால் மழை பெய்து விட்டது

அதன் பிறகு ஒவ்வொரு நாளும் காலையில் வேலைக்காக இருவரும் அந்த இடத்தில் சந்திப்பது வழக்கம் ஒரே இடத்தில் வேலை பாரம் ஒரு முறை தான் வரும் மற்றபடி இருவரும் வேறு இடத்தில் தான் வேலை பார்க்கும் சூழல் அமைந்தது. இருந்தபொழுதும் மாலையில் ஒரு இடம் சொல்லி அந்த இடத்தில் சந்தித்து பேசிக்கொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமைகளில் அவள் இருக்கும் தெருவில் உள்ள கோயிலில் வரச்சொல்லி அந்த கோயிலில் அவனை வாசிக்க வைத்து எல்லோரையும் கேட்க வைத்து மகிழ்வாள் செல்வி.கொஞ்ச நாட்களாக செல்வி புது பஸ் ஸ்டாண்ட் பக்கம் வருவது இல்லை சித்தாள் வேலை விட்டு விட்டால் என்று அவன் தோழி

சொன்னாள். உங்கள் வீட்டு பக்கம் போய் சந்திப்பதற்கு இவனுக்கு தயக்கம் இருந்த போதும் கோயில் அவை போல் சென்று வாசிப்பான்.

ஒரு வாரம் அவளை காணாமல் தவித்தான் துடித்தான் என் மனதில் ஆயிரம் மின்னல்களை உருவாக்கி விட்டு எங்கோ சென்று விட்டது அந்த பறவை என்று ஏங்கினான்.

அவனுக்கு நாதஸ்வரம் வாசிக்கவே விருப்பமில்லை. ஒரு பொழுதும் எவ்வளவு துன்பமான சூழ்நிலையிலும் அவன் வாசிப்பதை நிறுத்தியதே இல்லை ஆனால் ஒரு வார காலமாக காணவில்லை என்ற போது மனது எதிலும் லயிக்கவில்லை

சித்தாள் வேலை விட்டு ஒரு பெரிய வீட்டில் வீட்டு வேலை செய்ய சேர்ந்து விட்டாள்.அந்த வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் இசைஞானம் உள்ளவர்கள் அவர்கள் பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டலில் வாசிக்க கூடியவர்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்தது தான் அந்த வீட்டில் வேலைக்கு சேர்ந்தாள் செல்வி.

ஒரு நாள் பேருந்து நிலையத்தில் அவனைப் பார்ப்பதற்காக ஓடி வந்தாள் பாலா கோபத்தில் முகத்தை திருப்பி கொண்டான் ஐயாவுக்கு கோவம் தாங்கலையோ உங்களுக்காக நாங்க என்ன என்ன செஞ்சிட்டு வரோம் தெரியுமா எங்க முகத்தை பார்த்தா உங்களுக்கு நாங்க என்ன செஞ்சோம் என்று சொல்லுவோம் நிமிர்ந்து பார்த்தான்.

உனக்காகத்தான் நானே சித்தாள் வேலையை விட்டுட்டு ஒரு பெரிய பணக்கார வீட்ல வீட்டு வேலைக்காரியை போயிட்டு இருக்கேன் அந்த வீட்ல உள்ளவனா இசையை பத்தி தெரிஞ்சவங்க பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டல்ல உனக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி தருவாங்க நாளை காலைல அவங்க வீட்டுக்கு உன்னை கூட்டிட்டு போறேன் மறக்காம எங்க தெருவுல கோயில் பக்கம் வந்துருஎன சொல்லிவிட்டு மின்னலாய் மறைந்தாள்மறுபடியும் மிகுந்த உற்சாகத்தோடு நாதஸ்வரத்தை வாசித்தான் பாலாகொன்றை மரத்திலிருந்து மஞ்சள் கொன்றை பூக்கள் அவர்கள் இருவரையும் ஆசீர்வதிப்பது போல மரத்திலிருந்து கீழே விழுந்தது.மங்கள வாத்தியம் கெட்டிமேளம் வாசிப்பதை போல வாசித்தான் பாலா….

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *