ஆசிரியரை கொலை செய்தது பேய் தான் – பீதியை கிளப்பிய மாணவனின் வாக்குமூலம்

பிரான்ஸில் ஆசிரியையை கொலை செய்த மாணவன் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின், செயின்ட் ஜீன் டி லஸ் நகரில் உள்ள பள்ளியில் மாணவன் ஒருவன் 52 வயது நிரம்பிய ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான்.

கொலை செய்த மாணவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவன் கூறிய பதில் காவல்துறையினரை திகைக்க வைத்தது. எனக்கு பேய் பிடித்திருக்கிறது, ஆசிரியையை அந்த பேய் தான் கொலை செய்ய சொன்னது என்றான்.

இந்த சம்பவம் மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியை கொல்லப்பட்டதற்கு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. ஆசிரியை மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button