‘Selfie பிள்ளை’ – கின்னஸ் சாதனை படைத்த பாலிவுட் நடிகர் அக்க்ஷய் குமார்

மூன்றே நிமிடங்களில் 184 தற்படங்களை (selfies) எடுத்துக்கொண்ட பாலிவுட் நடிகர் அக்க்ஷய் குமார் கின்னஸ் உலகச் சாதனைப் (Guinness World Record) புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

அவர,் இந்தியாவின் மும்பை நகரில் உள்ள Mehboob Studios அரங்கில், ரசிகர்களின் முன்னிலையில் சாதனை படைத்தார்.

அரஞ்சு ஆடையை அணிந்திருந்த அக்ஷய் குமார் ஒன்றன் பின் ஒன்றாக ரசிகர்களோடு தற்படங்களை எடுத்துகொண்டார்.

இட வலமாக மாறி மாறி நின்ற ரசிகர்கள், படம் எடுத்துக்கொண்ட உடனே விலகிச்சென்று அடுத்த படத்தை எடுக்க வழிவிட்டனர்.

அவர் உண்மையில் 209 படங்களை எடுத்திருந்தார். 25 படங்கள் தெளிவில்லாமல் இருந்ததால் 184 படங்கள் மட்டுமே சாதனையில் கருத்தில்கொள்ளப்பட்டன.

அக்ஷய் குமார், தமது புதிய திரைப்படமான Selfie-ஐ விளம்பரப்படுத்தும் நோக்கில் சாதனை புரிந்தார்.

திரைப்படம், சிங்கப்பூரில் அடுத்த மாதம் வெளியிடப்படும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button