நடுகைக்காரி!… 51…. ஏலையா க.முருகதாசன்.

கறுவல் செல்லத்துரை மாஸ்ரர்,ஆரோ ஒரு மனுசியோடை கீரிமலைக் கடற்கரையில் பிரச்சினைப்பட்டதைச் சொல்லப் போறார் என்று மாணவ மாணவிகள் ஆவலுடன் அவர் முகத்தையே வைச்ச கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மாஸ்ரர் ஒரு செருமல் செருமிக் கொண்டே திரும்பவும் வகுப்பின் மேற்குப்புற யன்னலுக்கூடாக பனை மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் நொங்குகளைப் பார்த்தவர் „நான் நினைக்கிறன் மூழடியில் நொங்குக் கண் தெரியத்தக்கதாக சீவிப் போட்டு விரலை வைச்சால் சளுக்கென்று உள்ளை விரல் போகிற பதம்,ஒவ்வொருக்காவும் விரலை வைச்சு நொங்கை எடுக்கேக்கை சளுக் சளுக்கென்று சத்தம் வரும்’ என்றவர் ஆருக்காவது கைவிட்டு நொங்கு தோண்டேக்கிலை சளுக் சளுக்கென்று சத்தம் வந்தது கேட்டதோ „ என்று கேட்க,’ஓம் சேர் நான் கைவிட்;டு நொங்கைத் தோண்டேக்கிலை சளுக்கு சளுக்கு என்று நல்லாய்ச் சத்தம் வந்தது என்று பாலசிங்கம் அப்பாவி போல சொல்ல’பிறகென்ன உனக்கு சீரான அனுபவமிருக்குது „ என்று சொன்ன கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் „ ஏன் ஞானம் நீ நொங்கு குடிக்கிறது இல்லையோ’ என்று கேள்வி கேட்க „சேர் அவருக்கு என்ன குறைச்சல் அண்டைக்கு நீங்கள் சொன்ன மாதிரி பதமான பெருக்காத கைக்கடக்மான இளநியும்,வழவழப்பான நொங்கும் குடிக்கிறவர் „ உள்ளர்த்தம் எதுவுமே இல்லாத மாதிரிச் சொல்ல, மாணவர்களும் மாணவிகளும் வநத சிரிப்பை அடக்க முடியாமல் பற்களால் சொண்டைக் கடிக்கிறார்கள்.
அர்த்தம் விளங்கிய புஸ்பகலாவும்,நீலலோஜினியும், அருந்ததியும் சிரிப்பை அடக்க முடியாமல் வாயைப் பொத்திக் கொண்டு கீழை பார்க்க,புஸ்பகலாவுக்குப் பக்கத்திலிருந்த சர்வாம்பிகை „ என்ன விளங்கியடி வாயைப் பொத்திச் சிரிக்கிறாய், எனக்கு நொங்குக் கதையும் இளநிக் கதையும் விளங்கேலை என்னடி அது,சொல்லடி „ என்று புஸ்பகலாவைக் கேட்க மெதுவாகத் திரும்பி ஞானத்தைப் பார்த்தவள்,’நீ கே;கிறது மாஸ்ரருக்கு கேட்கப் போது பிறகு சொல்லுகிறன்:’ என்று குசுகுசுக்கிறாள்.
சரி சேக்ஸ்பியரின் போயத்தை படிப்பிப்பம் என்று சொன்னவர் போயத்தை வாசிக்கத் தொடங்குகிறார்.
„மை மிஸ்றஸ் ஐஸ் ஆர் நதிங் லைக் த சன்” என்று வாசிச்சவர்,
அடுத்த வரியான „கோறள் பார் மோர் றெட் தான் கேர் லிப்ஸ் றெட்’ என்றுவாசிக்கிறார்;,இதன் அர்த்தம் உங்களுக்கும் விளங்கியிருக்கும,இருந்தாலும்; முதல் வரி என்னவென்றால் „எனது எஜமானியின் கண்கள் சூரியனைப் போல இல்லை, இண்டாவது வரி „பவளம் அவரின் சொண்டுகளை விடச் சிவப்பானது’உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமே,இந்தக் கவிதை எழுதுகிறவர்கள் கதை எழுதுகிறவர்கள் யாற்றை அனுபவங்களை எழுதுகினம் என்று
நினைக்கிறியள்,எல்லாம் அவையவையின்ரை அனுபவங்களைத்தான் எழுதுகினம்.எல்லாத்தையும் எழுதிப் போட்டு கதை முடிவிலை „யாவும் கற்பனை’ என்று போடுவினம்,
இது எல்லாம் எழுத்தாளர்களின் ஏமாத்துப் புருடா வேலை,இப்ப சேக்ஸ்பியர் ஆரோ பெண்ணை இரசித்து இரசித்து கவிதை எழுதிப் போட்டு „ எஜமானியின் கண்கள் சூரியனைப் போல இல்லையாம்,பவளம் எஜமானியின் சொண்டைவிடச் சிவப்பாம்.நல்லாய்க் கவனியுங்கோ சேக்ஸ்பியர் ஆரோ ஒரு பெண்ணின் கண்ணையும் சொண்டையும் இரசித்து காதலோடும் அதோடும் பார்த்திருக்கிறார்.
„அவர் வேறை என்னத்தையெல்லாம் பார்த்தாரோ தெரியாது’ என்றவர் முழுக் கவிதையையும் கண்ணால் நோட்டம் விட்டிட்டு’ ஆங் இஞ்சை பின்னுக்கு சேக்ஸ்பியற்றை இரசிப்பு வருகுது „என்றவர்„இந்தக் கவிதை ஒரு பெண்ணை இரசிக்கிற கவிதை, இரசிக்கிறது மட்டுமல்ல காதலி என்றும் சொல்லுகிற கவிதை. ஏன் வேலைக்காரன் எஜமானியிலை ஆசை வைச்சு காதலிக்க மாட்டானோ, வேலைக்காரனோடை எஜமானியள் ஓடிப் போற கதை மேலை நாடுகளிலை சர்வசாதாரணம்,இஞ்சையும் அருப்புப்பருப்பாய் நடக்குதுதான்.
இங்கிலீசிலை இதையெல்லாம் சிலபஸ் ஆக்கிப் போட்டு உங்களுக்கு காதலையும் அதையும் படிப்பிக்கச் சொல்லிப் போட்டு உங்களை நான் பழுhதக்கிறன் என்று கொஞ்ச மாஸ்ரர் பாரும் ரீச்சர் மாரும் என்னோடை ஏறி விழுகினம்.
அப்பொழுது இதுவரை எதுவும் பேசாதிருந்த கொல்லங்கலட்டியிலிருந்து வருகின்ற சண்முகராஜா,’ நான் நினைக்கிறன் சேர் லவ்வை இங்கிலீசிலை சொன்னால் பிரச்சினை இல்லைப் போல அதுதான் ஐ லவ் யூ என்று எல்லாரும் சொல்லுகினம் போல, நான் உன்னைக் காதலிக்கிறன் என்று சொன்னால் அது அருவருப்பானதோ என்று நினைக்கினம் ஆக்கும், „ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே „ ஏன் சேர் சேக்ஸ்பியரின் இப்படியான காதல் கவிதைகளைச் சிலபசுக்கு படிப்பிக்க எடுத்தவை கண்ணதாசனின் கவிதைகளைப் பாடமாக படிப்பிககலாந்தானே’ என்று கேட்க எல்லா மாணவர்களும் சிரித்துவிடுகின்றனர்.
„ஏதோ நான் உங்களைப் பழுதாக்கிறேனாம்,நீங்கள் படம் பார்க்கிறியள்,திருவிழாக்களுக்குப் போய் அங்கை கடலை வாங்கிக் குடுக்கிறியள், பொம்பிளைப் பிள்ளையளின்ரை காதுக்குள்ளை விசிலடிக்கிறியள்,பின்னலைப் பிடிச்சு இழுத்து அவையிட்டை சனியன் மூதேசி என்று திட்டு வாங்கிறியள்,இதையெல்லாம் நான் சொல்லிக் குடுத்தா செய்யிறியள், நீங்கள் பழமும் திண்டு கொட்டை போட்டவை அல்ல,கொட்டையையும் சேர்த்துச் சாப்பிட்ட ஆட்கள்.
„முந்தி மூத்திரம் பெய்வதற்கே இப்படித்தான் தூக்கிப் பெய்ய வேணும் என்று அப்பா சொல்லித் தருவினம் „ என்று இயல்பாகச் சொன்ன கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் சேக்ஸ்பியரின் முழுக் போயத்தையும் வாசிக்கத் தொடங்குகிறார்,
My mistress’ eyes are nothing like the sun.![]()
என் எஜமானியின் கண்கள் சூரியனைப் போல் இல்லை.
Coral is far more red than her lips’ red.
பவளம் அவள் உதடுகளின் சிவப்பு நிறத்தை விட மிகவும் சிவப்பு.
If snow be white, why then her breasts are dun.
பனி வெண்மையாக இருந்தால் அவளுடைய மார்பகங்கள் ஏன் மங்கலாகின்றன .
If hairs be wires, black wires grow on her head.
முடிகள் கம்பிகளாக இருந்தால் அவள் தலையில் கருப்பு கம்பிகள் வளரும்.
I have seen roses damasked, red and white.
ரோஜாக்கள் மூடப்பட்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். சிவப்பு மற்றும் வெள்ளை.
But no such roses see I in her cheeks.
ஆனால் அப்படிப்பட்ட ரோஜாக்கள் எதையும் நான் அவள் கன்னங்களில் பார்க்கவில்லை.
And in some perfumes is there more delightThan in the breath that from my mistress reeks.
மேலும் சில வாசனை திரவியங்களில் என் எஜமானியின் சுவாசத்தை விட அதிக இன்பம் இருக்கிறது.
I love to hear her speak, yet well I knowThat music hath a far more pleasing sound.
அவள் பேசுவதை நான் கேட்க விரும்புகிறேன் ஆனாலும் அந்த இசைக்கு மிகவும் இனிமையான ஒலி உள்ளது என்று எனக்கு தெரியும்.
I grant I never saw a goddess go.
ஒரு தெய்வம் போவதை நான் பார்த்ததில்லை என்று நான் ஒப்புக்கொள்கிறேன்.
I grant I never saw a goddess go.
என் எஜமானி தரையில் நடக்கும்போது அவள் நடக்கிறாள்.
And yet, by heaven, I think my love as rare As any she belied with false compare.
இன்னும்இ சொர்க்கத்தில் என் காதல் அரிதாகவே அவள் பொய்யுடன் ஒப்பிடுவதைப் போல நான் நினைக்கிறேன்.
ஓவ்வொரு வரியாக வாசித்து அவற்றின் அர்த்தத்தை தமிழில் சொல்லி முடித்தவர் நாளைக்கு இப்ப படிச்ச போயத்தை நீங்கள் படிச்சுக் காட்ட வேண்டும்’ என்றவர் „என்ன ஞானம் இண்டைக்கு அமைதியாயிருக்கிறாய், அதுவும் இங்கிலீஸ் வகுப்பென்றால் உனக்கு அது தேன் மாதிரி….’என்று சொல்லி முடிக்க முந்தி,ஏற்கனவே தன்னைப் பார்ப்பதற்காக காய்ச்சலேடு ஞானம் வந்திருப்பதை கவலையுடன் யோசித்துக் கொண்டிருந்த புஸ்பகலா „சேர் அவருக்குக் காய்ச்சல்,அதோடையும் வந்திருக்கிறார் „ என்று சோர்ந்த முகத்துடன் சொல்ல’ என்னெண்டு உனக்குத் தெரியும்’ என்று மாஸ்ரர் கேட்க,’ அது…’ என்று புஸ்பகலா இழுக்க,’சேர் ஞானம் குடுத்து வைச்சவன் சேர்…என்று தனபாலசிங்கம் பூடகமாகச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,பக்கத்து வகுப்பில் படிப்பிச்சுக் கொண்டிருந்த பாக்கியலட்சுமி ரீச்சர் எட்டிப் பார்த்து „ என்ன மாஸ்ரர் நீங்கள் சேக்ஸ்பியரின் போயத்தை பிள்ளைகளுக்கு நல்லாய் விளங்குகிற மாதிரி படிப்பிச்சதை நானும் கேட்டனான்’ என்று பாராட்டுவது போல நக்கல் செய்ததை கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் விளங்கிக் கொண்ட அதே வேளை இது நாளைக்கு ஸ்ராப் றூமில் வெடிக்கத்தான் போகிறது, அதையும் பார்ப்பம் என்று நினைச்சுக் கொள்கிறார்.
பாக்கியலட்சுமி ரீச்சர் போனதும்’ தனபாலசிங்கம!; ஞானம் கொடுத்து வைச்சவன் என்று சொன்னியே ஏன் அப்படிச் சொன்னனி’ என்று கேட்க,’இல்லை சேர் இவருக்கு அவரில் அக்கறை „ என்று புஸ்பகலாவையும் ஞானத்தையும் காட்டி தனபாலசிங்கம் சொல்ல, „அக்கறைப்படுவது நல்லதுதானே என்று போன போக்கில் செல்லத்துரை மாஸ்ரர் சொல்லிக் கொண்டே வகுப்பைவிட்டுப் போகிறார்.
கறுவல் செல்லத்துரை மாஸ்ரரின் ஆங்கில பாட வகுப்புக்குப் பின்னர் இரண்டு வகுப்புகளுமே சரித்திர பாட வகுப்புக்கள்.சரித்திர பாட வகுப்புக்குப் பொறுப்பானவர் கனகராஜா மாஸ்ரர்.
அந்த இரண்டு வகுப்பும் முடிந்ததும்,மணி அடிக்க எல்லா மாணவ,மாணவிகளும் வகுப்பைவிட்டுப் போக ஞானத்துக்கு அருகில் வந்த புஸ்பகலா „நாளைக்கு பள்ளிக்கூடம் வரவேண்டாம்,வீட்டிலை நில்லுங்கள்’என்று சொன்னவள் அவனின் கழுத்தில் கையை வைச்சு „நல்லாய்க் காயுது,இண்டைக்கே வீட்டீலை நின்றிருக்கலாம் என்று கனிவாகச் சொல்ல,’நிண்டால் உங்களை எப்படிப் பார்க்கிறது „ என்று சொன்ன ஞானம் அவளோடு சைக்கிள் ஸ்ராண்டடிக்கு போகிறான்.புஸ்பகலா அவனைக் காதலோடு பார்க்கிறாள்.
(தொடரும்)
![]()