கதைகள்

அரூப வண்ணம்!…. ( சிறுகதை ) ….. யாழ் ராகவன்.

கழுதை கலரில் வானம் மாறிய பொழுதொன்றில்கொன்றை மலர்களை உதிர்க்கும் அந்த மரத்தினடியில் கிளீன்சேவ் செய்யப்பட்ட முழு லைட் சூட்டில் இருக்கும் அந்த நபர்சார் “அந்த முக்கு பஸ் ஸ்டாப்ல இறங்கிக்கலாமா “என்று என் வண்டியை நிறுத்தி கேட்டார்.பிரிட்டிஷ்அலுவலர் போன்ற தோற்றத்துடன்  கம்பீரமான பார்வையுடன் இருக்கும் அவர் முதல் பார்வையிலே என்னை வசீகரித்தார்.அதுதான் எனக்கும் பா ஜெயராஜுக்கும் முதல் சந்திப்பு. யார் தன் பெயரைக் கேட்டாலும்முன் எழுத்தோடு சேர்த்து சொல்வதுதான் பா ஜெயராஜுக்கு கூடுதல் தகுதியாக இருந்தது.
வண்டியில் போய்க் கொண்டிருக்கும்போது நவாப்பழம் அழகாக இருந்தது வாங்கலாம் என்று நினைத்தபோது என்னிடம்  வாகான பை எதுவும் இல்லை ஜெயராஜ் தான் வாங்கி அதை சரியாக விலைபேசி எனக்கு கொடுத்தார்.அப்படியே ஒரு நட்பு உரையாடல் தொடர்ந்தது.அடுத்தநாள் அந்த பையை திருப்பிக் கொடுக்க நான் கலெக்டர் ஆபீஸ் முன்புமரத்தடியில் அருகே சென்றேன்அங்கேபலர்சுருசுருப்பாகஅமர்ந்திருப்பார்கள்அரசு அலுவலகங்களில் காட்டுகின்ற மெத்தனப் போக்கு ஒருபோதும் இவர்களிடம் இல்லை யார் வந்தாலும் கனிவாக நடத்துகிற பாங்குஅவர்கள் தேவைகளையெல்லாம் தீர்த்து வைக்கின்ற அற்புதமான பணியை செய்து கொண்டு மரத்தடியில் வாழுகின்ற மகாமுனிவர்கள்இவர்கள்.
 அதிக சம்பளம் வாங்கிக்கொண்டுஇதற்குமேலும்லஞ்சம் வருகின்றவர் நிறைந்த இடம்வரித்துக் கொண்ட பணியை செய்வதற்கு தயங்குகிற அவர்களுக்கு எவ்வளவோ மேல் இவர்கள். .அதில் ஒருவர்தான் பா.ஜெயராஜ் கற்ற கல்வியை சமூகத்திற்கு பயன்படுத்துவதுஎவ்வளவுசிறப்பு வாய்ந்தது என்பதை நடைமுறையில் காட்டுகின்ற அற்புதமான மனிதர்அங்கு போய் நின்றேன்.சரியாக 10 மணி அளவில்அங்கு வந்து சேர்ந்தார் பா.ஜெயராஜ் என்ன சண்முகம் சார் இந்த பைக்கு ௭ன்ன அவசரம் காலையில் நீங்கஆபிஸ் போகாம என்னை ப்பார்க்க வந்துட்டீங்களா.
வாங்க ஒரு டீ சாப்பிட்டேபேசலாம் வடை எதுனா சாப்பிடுறீங்களாஎனக் கேட்டுவிட்டு இருவருக்கும்  தேநீர் சொல்லி விடாமல் பேசிக் கொண்டிருந்தார். கலெக்டர்ஆபீஸ் முன்னாடிதான் 20 வருஷம் ஆகப்போகுது.வாரிசு சர்டிபிகேட் இறப்பு , ஜாதி சான்றிதழ் இந்த மாதிரி எல்லாம் எழுதி கொடுக்கிறது நிரப்பி கொடுப்பதுதான் என் வேலை.இந்த ஆன்லைன் வருமுன்பொழப்பு நல்லா போயிட்டு இருந்துச்சு ஆன்லைன் வந்ததும் வந்தது கொஞ்சம் வருமானம் குறைஞ்சு போச்சு என  புன்னகையை உதிர்த்தார்.
வண்ணங்களின் மேல் அவருக்கு அவ்வளவுவெறுப்பு எப்படி வந்ததுஒவ்வொரு வண்ணத்திலும் புதிதாக ஒரு கட்சி ..கட்சி ஆரம்பிப்பதை விட சாதி சங்கங்களும் புதுப்புது வண்ணங்களில் ஆரம்பித்ததும் மாநாடுகள் நடத்துவதும்கொடுமையின் உச்சம். உடுத்த ஆடை முழுசும்சாப்பிடுற சாப்பாடு தட்டில் வர வரைக்கும் எல்லாமே ஒரே சாதிகளை செய்யப்பட்டது என்று சொல்ல முடியுமா.இன்று அவர் சொல்லுகிற கருத்துக்களில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும்பாதிக்கப்பட்ட மக்களைஅரசு மருத்துவமனையில் சேர்த்து அவர்களுக்கு தேவையான உதவி செய்வதை அவர் சேவையாகவும் செய்துகொண்டிருந்தார்.சரக்கொன்றை மரத்தில் அமரும் பறவைகளில் காகத்தை அவருக்கு மிகவும் பிடிக்கும்அதன்அரூப வண்ணத்தில் அவர் மிதந்து கொண்டே இருப்பார்.
அப்பொழுது என் தொலைபேசி அழைத்ததுஅலுவலகத்தில் உயர் அதிகாரி என்னை அவசரமாக அழைத்தார்நான் பதினோரு மணிக்கு ரயில் நிலையத்தில் அவரை சந்திக்க வேண்டும் என்று எனக்கு தகவல் வந்தது.இதற்கிடையில் என் தந்தை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய சூழலில் வீட்டில் இருந்து மற்றொரு அழைப்பு வந்ததுஎன்ன செய்வதென்று நான் தடுமாறி உள்ளதைஎன் முகக் குறிப்பை பார்த்து விட்டு ஜெயராஜ்  கேட்டார் என்ன சார் பிரச்சனை.
நான் எதாவது செய்யணுமா சொல்லுங்க நான்  உங்களுக்கு செய்கிறேன்என்றவுடன்உடன் பிறந்தவரைப் போல அவர் சொன்னபொழுது கண்கள் பனித்தது.ஒரு கேப் புக் பண்ணி அவரை அந்த வண்டியில் அனுப்பி வீட்டு முகவரி சொல்லி அப்பாவை இந்த மருத்துவமனை சேர்க்க வேண்டும் என்று விவரம் சொன்னேன்.நான் சென்று என் அதிகாரியை பார்த்து அலுவலகத்தில் விட்டுவிட்டு மருத்துவமனை சென்றேன்அன்றைய பிரச்சினை நல்லபடியாக முடிந்தது.
அதன்பிறகு பல்வேறு சந்திப்புகள் பல்வேறு உரையாடல்கள் அரசியல் சமூகம் விளையாட்டு எனஎங்கள் பேச்சு  சுவாரசியமாக நீண்டுகொண்டே கொண்டிருந்ததுஎப்பொழுதும் ஜெயராஜ் அண்ணனிடம் ஒரு பகடி இருக்கும்.கலெக்டர் ஆபீஸ் முன்பு வருகின்ற எத்தனையோ படிக்க தெரியாத மக்களுக்கு அவர்களின் தேவையறிந்து விண்ணப்ப படிவங்களை நிரப்பி கொடுத்து உரிய அலுவலகத்தில் கொண்டு போய் சேர்த்து அவர்கள் பணி முடிந்த வரைகனிவோடும் பணிவோடும் கடமையாற்றி கொண்டு புன்னகையை விதைக்கக்கூடிய அற்புதமான மனிதர் .
பணம் என அவர்கள் கொடுப்பதை மட்டும் வாங்கிக் கொள்வார்.தேவைகளைக் குறைத்துக் கொள்வதே வாழ்வின் அற்புதம் நமக்கு என்று பெரிதாக எதுவும் இருக்க கூடாது என்ற சித்தாந்தம் உடையவர்.சிறிது நேரம் கூட சோர்வோ அயர்ச்சியோ, கவலையோ, வருத்தமோ அவர் முகத்தில் நீடிப்பதில்லைமடைதிறந்த வெள்ளம் போல பேச்சும் சிரிப்பும் எப்பொழுதும் அவர் சொத்தாக இருந்தது
4 இட்லி ஒருபோதும் புதுமையாகஎதையும் விரும்பாதவர்.மதுரைதெருக்களில் பல்வேறு இடங்களில் நாங்கள் அலையாத இடங்களே இல்லை என்று சொல்லலாம் பெரிய பெரிய சாதி தலைவர்களுடையபோஸ்டர் விளம்பரங்களைப் பார்க்கும் போதெல்லாம் கேவலமாக திட்டுவார். ஒரு பெரிய கல்லூரியில் படித்து முடித்த அவர் வெளிநாடு செல்வதற்கு ஒருவனை நம்பி ஏமாந்து பணத்தை எல்லாம் கொடுத்து விட்டு வந்தவர்நேர்மையான மனிதர்களை தான் இந்த சமூகம் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
நாம் யாரையும் ஏமாற்ற பழகிக் கொள்ளவில்லை என்று சொன்னால் நம்மை எல்லோரும் ஏமாற்றுவார்கள் என்ற தப்பான ஒரு புரிதலை இந்த சமூகம் நமக்கு காட்டிக்கொண்டே இருக்கிறது இருந்தபோதும் கடலின் ஆர்ப்பரிப்பை நதியின் நடனத்தை ஒருபொழுதும் யாராலும் எதுவும் செய்துவிட முடியாது.பெருகிவரும் நுகர்வு கலாச்சாரங்கள் எப்படி சந்தையியல்போக்கு ஆகியவற்றை எல்லாம் பற்றி பகடி செய்து கொண்டே வருவார்.மழை கொட்டிய ஒரு இரவு நேரத்தில் மின்சாரம் தடைப்பட்டு பொழுதில் அவர் தெரு தேடி அவர் இல்லம் தேடி சென்றேன்.மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டு இருட்டில் அமர்ந்திருந்த அவர் என்னை பார்த்ததும்ஓடிவந்து வாஞ்சையோடுஎன்ன சார் இவ்வளவு தூரம்எங்கே  இந்த பக்கம் .
அந்த சின்னஞ்சிறிய கூட்டில்அவரின் மகன் புகைப்படமும்உலகத் தலைவர்களின் புகைப்படமும் அங்கு இருந்ததுவீட்டில் வேறு யாரும் இல்லையா என்று நான் யோசித்தபடியே கேட்டேன்கேள்வி கேட்பது மிகவும் எளிது ஆனால் நாம் கேட்கிற கேள்விகள் எதிராளியை சந்தோஷப்படுத்துமா சங்கடப்படுத்துமா எனஅடுத்தவரை காயப்படுத்த கூடாது என்றெல்லாம் யோசித்து யாரும்தற்போது கேள்வி கேட்பதில்லை.
சண்முகம் சார் நான் யார்கிட்டயும் பொதுவாக பேசுறது இல்ல நீங்க என் நெருங்கிய நண்பர் ஆயிட்டீங்க அதனால நீங்க கேட்க கேள்விக்கு பதில்..
எனக்கும் அவளுக்கும் காதல் திருமணம் கல்லூரி படிக்கும்போதே ஓடிப்போய் திருமணம் செஞ்சுகிட்டோம்.அதன்பிறகு சின்னச்சின்ன வேலைகள் சொற்ப வருமானம் நான் வெளிநாடு செல்லும் முயற்சியில் இருந்தேன்.
என்னோடு வறுமையை பங்கு கொள்ள அவள் விரும்பவில்லை அவளுக்குஆரம்பத்தில்காதல்   மயக்கத்தில் எல்லாம் இனித்தது வாழ்க்கை கிரகத்தில் அத்தனையும் புளித்தது.வண்ணங்களின் மேல் காதல் அவளுக்கு விதவிதமான புடவைகள் பக்கத்துவீட்டில் இரவல் வாங்கி அணிந்து கொள்வாள்.எங்கள் வீட்டில் அருகில் இருக்கும் சாந்தியுடன் அவளுக்குநட்பு ஏற்பட்டது.இழவு வீடு சடங்கு வீடு ஆகியவற்றில் எல்லாம் சாந்தி உடைமாற்றவேலையை செய்கிற மருத்துவச்சியார் வீட்டில் இழவு நடந்தாலும் யார் வீட்டில் சடங்கு நடந்தாலும்
பூப்புனித நீராட்டு விழா நடந்தாலும்சாந்திக்கு துணையாக இவள்சென்றுவிட்டுஅங்கே உள்ள இறந்த பெண்களின் புடவைகள் எல்லாம் வாங்கி அணிந்து கொண்டுமகிழ்ச்சி யின்உற்சாகத்துக்கு எப்போதும்போய் விடுவாள். அவளுக்கு அப்படி ஒரு போதை அந்த வண்ணங்களின் மேல் அந்த ஆடைகளின் மேல்அவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருந்தது எங்களுக்கு ஆசையாக பிறந்த மகனை சரியாக கவனிப்பதில்லை.புடவைகள்வாங்கித்தரும் யாருடனும் செல்வதற்குதயாராக இருந்தாள்.அடிக்கடி சண்டை வரும் அதனால் மகனின் படிப்பு கெட்டுவிடும் என்று சொல்லி ஒரு பெரியவரின் உதவியோடு மகனை ஒரு விடுதியில் சேர்த்து விட்டு வந்தேன்.
உண்டு உறைவிட பள்ளியில்அவன் தங்கி படித்துக் கொண்டிருக்கிறான்.இதைப்போல ஒரு மின்சாரம் தடைபட்ட நாளில்வீட்டில் தேடி பார்த்த பொழுது அவள் இல்லை சாந்தியின் கணவனும் காணோம் என்று சொல்லி க் கொண்டிருந்தார்கள்.அப்போதிருந்தே எனக்கு வண்ணங்களின் மேல்  எரிச்சல் வந்தது.
முதலில் கோபமாக வந்தது பின்பு என் இயலாமையை நினைத்துவருந்தினேன் அவளுக்கென்ன வண்ணங்களின் மேல் உள்ள காதலினால் ஆடைகள் மேல் உள்ள மோகத்தால் அவள் மகிழ்ச்சியாக இருக்கட்டும்அப்படியே விட்டுவிட்டேன்.
நண்பனில்அம்மாஇறந்த சடங்கிற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதுஅங்கே ஒரு பெண்இறந்த நண்பனின் அம்மாவுடைய சடலத்தில்பொருத்தப்பட்டிருந்த பல வண்ண ஆடைகளை எடுத்துக்கொண்டுமுகமெல்லாம் ஒரு மலர்ச்சியோடு ஒரு அதீத வெறியோடுஅவற்றை அள்ளி தன் தோளின் மேல் போட்டுக் கொண்டு இருந்தகாட்சியை பார்த்த பொழுது சட்டென்று ஜெயராஜ் அண்ணன் ஞாபகம் வந்தது.
,,,,,,யாழ் ராகவன்,,,,,

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *