மறுபயனீடு செய்யப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்களால் உருவாக்கப்பட்ட சட்டையில் இந்தியப் பிரதமர் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (8 பிப்ரவரி) நாடாளுமன்றத்தில் நீல நிற மேலாடையை (ஜாக்கெட்) அணிந்திருந்தார்.

பார்ப்பதற்குச் சாதாரண மேலாடை போல் இருந்தது.

ஆனால் அதில் ஒரு புதுமை…

அந்த மேலாடை மறுபயனீடு செய்யப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்களால் உருவான துணியைக் கொண்டு செய்யப்பட்டது.

அதைச் சென்ற திங்கட்கிழமை (6 பிப்ரவரி) Indian Oil Corporation Limited (IOCL) நிறுவனம் திரு. மோடியிடம் பெங்களூரில் வழங்கியதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்தது.

IOCL நிறுவனம் ஆண்டுதோறும் 100 மில்லியன் பிளாஸ்டிக் போத்தல்களை மறுபயனீடு செய்து துணிகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

அவற்றில் செய்யப்படும் மேலாடைகள் முக்கிய நகரங்களில் 3 மாதத்திற்குள் விற்பனைக்கு வரும் என்று ANI குறிப்பிட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button