இத்தாலி தேர்தலில் போட்டியிடும் இலங்கை பெண்

இத்தாலியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கைப் பெண்ணான தம்மிகா சந்திரசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவர் இத்தாலியின் லோம்பார்டி மாகாணத்தில் வெளிநாட்டு சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக pratito Democration கட்சியின் வேட்பாளராக உள்ளார்.

இந்த உள்ளூராட்சித் தேர்தலில் மாகாணத்தில் வசிக்கும் வெளிநாட்டினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே வேட்பாளரும் அவராகும்.

57 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான தம்மிகா, கந்தானையில் பிறந்து, கந்தானை புனித செபஸ்தியார் கல்லூரியிலும் கந்தானை மஸ்ஸினோட் கல்லூரியிலும் கல்வி கற்று 1984ஆம் ஆண்டு இத்தாலிக்குச் சென்றார். அந்த நேரத்தில், அவருக்கு 19 வயதாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button