பெற்றோரை விட்டுப் பிரிந்து அமெரிக்காவில் இருக்கும் 1,000 பிள்ளைகள்… இணைவது எப்போது?
அமெரிக்காவில் குடும்பத்தினரைவிட்டுப் பிரிந்த சுமார் 1,000 பிள்ளைகள், அவர்களின் பெற்றோருடன் இணைவதற்காகக் காத்திருக்கின்றனர். அமெரிக்க அரசாங்கம் அதனைத் தெரிவித்தது.
அவர்கள், டோனல்ட் டிரம்ப் (Donald Trump) அதிபராக இருந்த வேளையில் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதால் பெற்றோரிடம் இருந்து பிரிய நேரிட்டது.
அப்போது டிரம்ப் சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிராகக் கடுமையான அணுகுமுறையை அறிமுகப்படுத்தினார்.
அந்த அணுகுமுறைக்கு எதிராக டிரம்ப்பின் குடியரசுக் கட்சி ( Republican Party) உள்ளிட்ட பல தரப்புகள் கண்டனக் குரல்களை எழுப்பியிருந்தன. ஆனாலும் டிரம்ப் அதனைக் கைவிடவில்லை.
அதன் பிறகு ஜோ பைடன் (Joe Biden) அதிபராகப் பதவியேற்றதும் அந்த அணுகுமுறை நீக்கப்படும் என உறுதியளித்தார்.
பிரிந்த பிள்ளைகளையும் பெற்றோரையும் ஒன்றிணைக்கப் பணிக்குழு அமைக்கப்பட்டது.
இதுவரை அத்தகைய 3,924 பிள்ளைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 2,926 பிள்ளைகள் பெற்றோருடன் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மிக முக்கியமான இந்தப் பணி தொடரும் என அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
![]()