மலேசியாவில் A.R. ரஹ்மான் அளித்த இசை விருந்து…பரவசம் அடைந்த ரசிகர் கூட்டம்.

இசைப் புயல் A.R. ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நேற்று முன்தினம் மலேசியாவில் சிறப்பாக நடந்து முடிந்தது.

சுமார் 60,000 பேர் இசை நிகழ்ச்சியைக் காணக் கோலாலம்பூரின் புக்கிட் ஜலில் (Bukit Jalil) தேசிய விளையாட்டரங்கில் திரண்டிருந்தனர்.

ரஹ்மான் இசையமைத்த பல பிரபலமான பாடல்களைக் கேட்ட ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர்.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் (Anwar Ibrahim) தமது மனைவியுடன் வருகை புரிந்தார்.

அதோடு தொடர்பு, மின்னிலக்கத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்ஸிலும் (Fahmi Fadzil) அவரது மனைவியும் வந்திருந்தனர்.

“இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு அளிக்க வந்துள்ளோம். இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மலேசியாவின் பயணத்துறையையும் கலைத்துறையையும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை ஆராய்வோம்” என்றார் அமைச்சர் ஃபாஹ்மி.

மலேசியாவின் பிரபலப் பாடகி சித்தி நூர்ஹாலிஸா (Datuk Seri Siti Nurhaliza) ‘முன்பே வா’ பாடலைப் பாடியது நிகழ்ச்சியின் சிறப்பு அம்சங்களில் ஒன்று.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button