சீனாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 2026ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாகக்கூடும் – அறிக்கை
சீனாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2026ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெய்ச்சிங்கின் பொருளியல் மெதுவடைந்திருந்தாலும் நாட்டில் சொத்துச் சமத்துவமின்மையைக் குறைக்க அது முயற்சி எடுத்துவருகிறது.
Credit Suisse நிறுவனம் வெளியிட்ட உலகச் சொத்து அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
கடந்த ஆண்டிறுதி நிலவரப்படி சீனாவில் 6 மில்லியனுக்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் இருந்ததாக அறிக்கை குறிப்பிட்டது.
உலக அளவில் அந்த எண்ணிக்கை 10 விழுக்காடு.
2026ஆம் ஆண்டுக்குள் அந்த எண்ணிக்கை 97 விழுக்காட்டை எட்டி, 12 மில்லியனைத் தாண்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
![]()