ஆஸ்திரேலியாவுக்கு ராணி எலிசபெத் கைப்பட எழுதிய ரகசிய கடிதம்; 63 ஆண்டுகளுக்கு திறக்க முடியாது… ஏன்?

இங்கிலாந்து நாட்டின் ராணியாக 70 ஆண்டுகளுக்கும் கூடுதலாக ஆட்சி செய்தவர் ராணி இரண்டாம் எலிசபெத். 1952-ம் ஆண்டு முதல் ராணியாக இருந்தவர் கடந்த வியாழ கிழமை உடல்நல குறைவால் சிகிச்சை பெற்ற நிலையில் காலமானார். இங்கிலாந்தின் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் தனது கைப்பட ஆஸ்திரேலியா நாட்டுக்கு ரகசிய கடிதம் ஒன்றை கடந்த 1986-ம் ஆண்டு நவம்பரில் எழுதியுள்ளார்.

அதில், சிட்னி நகர மக்களின் முகவரியை குறிப்பிட்டு அனுப்பியுள்ளார். எனினும், இந்த கடிதம் சிட்னி நகரில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடம் ஒன்றில் விலை மதிப்புடைய பொருட்களை வைக்க கூடிய அறையில் வைத்து பூட்டி பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி செவன் நியூஸ் ஆஸ்திரேலியா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ராணியின் தனிப்பட்ட ஊழியர் உள்பட ஒருவருக்கும் அந்த கடிதத்தில் என்ன எழுதப்பட்டு உள்ளது என்பது பற்றி தெரியாது.

ஏனெனில் அந்த கடிதம் ஒரு கண்ணாடி பெட்டிக்குள் பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஒரு விசயம் நிச்சயம். 2085-ம் ஆண்டு வரை அதனை திறந்து பார்க்க முடியாது. ஏனெனில், அந்த கடிதத்தில் சிட்னி நகர மேயரை குறிப்பிட்டு, வருகிற 2085-ம் ஆண்டு, நீங்கள் தேர்வு செய்ய கூடிய ஒரு நல்ல நாளில், தயவு கூர்ந்து இதனை திறக்கவும். அதில் உள்ள எனது செய்தியை சிட்னி நகர மக்களுக்கு தெரிவிக்கவும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதில் எலிசபெத் ஆர் என எளிமையான முறையில் கையெழுத்து இடப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு அதன் தலைவர் என்ற முறையில், ராணி இரண்டாம் எலிசபெத் 16 முறை பயணித்திருக்கிறார். கடந்த 1999-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் தலைவர் பதவியில் இருந்து ராணியை நீக்குவதற்கான பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எனினும், அது பின்னர் தோற்கடிக்கப்பட்டது. ராணி மறைவை அடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சிட்னி நகரில் உள்ள பிரபல ஓப்பரா ஹவுஸ் ஒளியூட்டப்பட்டது. ஆஸ்திரேலியாவின் தலைவராக அரசர் 3-ம் சார்லஸ் நேற்று முறைப்படி அறிவிக்கப்பட்டார்

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button