முதியவரின் காதை கடித்து முழுங்கிய பாலியல் தொழிலாளி.. பட்டாயாவில் நடந்த பகீர் சம்பவம்!

உலகின் பிரபலமான சுற்றுலா பகுதிகளில் ஒன்று தாய்லாந்தின் பட்டாயா நகரம். இரவிலும் ஜொலிக்கும் நகரமாக இருக்கும் பட்டாயாவில் பாலியல் தொழிலாளி ஒருவர் பயணி ஒருவரின் காதை கடித்து முழுங்கிய சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

25 வயதுடைய கன்னிகா காம்ப்டன் என்ற பெண் ஒருவர் 55 வயது மதிக்கக்கத்தக்க சுற்றுலா பயணியின் காதைதான் கடித்து முழுங்கியிருக்கிறார். கடந்த வாரம் சனிக்கிழமை இது நடந்ததாக தி சன் நாளிதழ் குறிப்பிட்டிருக்கிறது.

அதன்படி, “பாலியல் தொழிலாளியாக இருக்கும் கன்னிகா என கூறப்பட்டிருக்கும் அந்த பெண், 55 வயது முதியவரிடம் பேச முற்பட்ட போது முழு போதையில் இருந்திருக்கிறார். அப்போது, போதையில் என்ன செய்வதென அறிந்திராத அப்பெண் அந்த முதியவரை வலதுப்புற காது மடலை முதலில் கடித்து குதறியதோடு, அவரது காதை முழுங்கியிருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் வலியோட கத்தி கூப்பாடு போட்டிருக்கிறார் அந்த முதியவர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், அந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போதையில் அட்டகாசம் செய்த கன்னிகா காம்ப்டனையும் கைது செய்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் லெப்டினண்ட் கர்னல் சைஜைய் கம்சுவ்லா தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னை கைது செய்ய விடாமல் தடுப்பதற்காக எங்களுடைய போலீஸ் அதிகாரியை அப்பெண் தாக்கினார். அவர் செய்த அட்டூழியத்தை கண்ணால் பார்த்த ஆதாரங்கள் பல இருக்கின்றன. பாதிக்கப்பட்டவரும் அப்பெண்ணுக்கு நிச்சயம் தண்டனை கிடைத்தாக வேண்டும் எனக் கூறியிருக்கிறாராம்.

இருப்பினும் நடந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது இதுவரை தெரியவில்லை என போலீஸ் தரப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button