குற்றவாளியை கண்டுபிடிக்க குறி கேட்ட போலீசார் சஸ்பெண்ட்!

மத்திய பிரதேசத்தில், கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளியை கண்டுபிடிக்க, சாமியாரிடம் குறி கேட்ட எஸ்.ஐ., மற்றும் போலீஸ்காரர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.

மத்திய பிரதேசத்தில் உள்ள ஓடபூர்வா கிராமத்தில், 17 வயது சிறுமியின் உடல், அங்குள்ள கிணற்றிலிருந்து மீட்கப் பட்டது.இது தொடர்பாக சிறுமியின் உறவினர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்த மூவர் மீது குற்றஞ்சாட்டி, புகார் அளித்தனர். மூவரையும் கைது செய்த போலீசார், உரிய ஆதாரங்கள் இல்லை என கூறி அவர்களை விடுவித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய எஸ்.ஐ., அனில் ஷர்மா, கொலையாளி யார் என உள்ளூர் சாமியார் ஒருவரிடம் குறி கேட்டுள்ளார். அவரும், சில பெயர்களை சொல்லியுள்ளார். இது குறித்த, ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பானது. இதையடுத்து, அனில் ஷர்மா மற்றும் காவல் நிலைய பொறுப்பாளர் பங்கஜ் சர்மா இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button