இதவிட நேரடியா சொல்ல முடியாது” – குரைக்கும் நாயால் கடுப்பானவர் செய்த செயல்!

நாய்கள் வளர்ப்பது எல்லாருக்குமே பிடித்தமான ஒன்றாக மாறிவிட்டது. அதன் அன்பும் பாசமும் சுட்டித்தனமான குரும்புகளும் எப்போதுமே அனைவரையும் இம்ப்ரஸ் செய்துவிடும்.

ஆனால் திடீரென நடுராத்திரி நேரத்தில் நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தால் அது தூக்கத்தில் இருப்பவர்களை சமயங்களில் கடுப்படையவேச் செய்யும். அதுவும் பக்கத்து வீட்டுக்காரரின் நாய் குரைத்தால் இன்னும் எரிச்சலடையவே செய்வார்கள். இதனை கண்டிக்கவும் முடியாமல் தட்டிக்கேட்கவும் முடியாமல் கையை கட்டிப் போட்டதுபோல கண்டும் காணாமல் செல்பவர்களும் உண்டு.

இப்படியான சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் தன்னுடைய அண்டைவீட்டாருக்கு அவர் வளர்க்கும் நாயால் ஏற்படும் அசௌகரியத்தை உணர்த்தும் வகையில் ஸ்க்ரிபில் ஒன்றை வரைந்து அவரது வீட்டின் லெட்டர் பெட்டியில் போட்டிருக்கிறார். அந்த ஸ்க்ரிபில் லெட்டர் ரெடிட் தளத்தில் பகிரப்பட்டு வைரலாக்கப்பட்டிருக்கிறது.

அதில், நீங்கள் வளர்க்கும் நாய் சிறுநீர், மலம் கழிப்பது, விளையாடுவது இதெல்லாம்தாம் சரிதான். ஆனால் அடிக்கடி குரைத்துக் கொண்டே இருப்பது ஏற்கத்தக்கத்தல்ல. அதற்கு முறையாக பயிற்சி அளித்து பராமரியுங்கள். இது மீண்டும் தொடர்ந்தால் சட்டப்படி காவல்துறையில் புகார் தெரிவிக்க வேண்டிவரும். பிறகு நீங்கள்தான் அபராதம் கட்ட நேரிடும்” என நாசூக்காக அந்த காமிக் ஸ்க்ரிபிலில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த பதிவை பார்த்த ரெடிட் பயனர்கள் பலரும் “மிகவும் பொறுமையான பாங்காக இருக்கிறது., இந்த ஸ்க்ரிபில் என்னுடைய பக்கத்து வீட்டுக்காரருக்கும் கொடுக்கலாமென இருக்கிறேன்., இதை விட பொறுமையா தன்னுடைய கோபத்தை ஒருவரால் வெளிப்படுத்திட முடியாது.” போன்ற கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button