கோட்டபாயவுக்கு எதிராக வெள்ளையர்களும் கொடி பிடித்தார்கள்!

இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அம்பலாங்கொட கஹவாவில் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று, நேற்று (11) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.எரிபொருள் பற்றாக்குறையால் தம்மால் நாட்டை சுற்றிப்பார்க்க முடியவில்லை என்று தெரிவித்தே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.கோட்டாவே வீட்டுக்குப் போ என்று கோஷமிட்ட பெண் சுற்றுலாப் பயணிகள் பலர் பதாகைகளையும் இலங்கைக் கொடியையும் ஏந்தியிருந்தனர்.

தாம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கையை வந்தடைந்தாகவும் இலங்கையில் நிலை மோசமடைந்து செல்வதாகவும் பெண் சுற்றுலாப் பயணியொருவர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button