Featureஇலக்கியச்சோலை

மேதகு பட விமர்சனம்!… பொன் குலேந்திரன். ( கனடா )

விடுதலை புலிகளின ஈழத் தமிழர்களின் போராட்ட,ம் ஆரம்பிக்க முக்கிய காரணம் தமிழ் ஈழத்தை ஆண்ட ஆங்கி;லேயர்  வரமுன்  ஆண்ட தமிழன் மீண்டும் ஆள நினைப்பதில் என்ன தவறு?, ஒரு இனத்தின் மாவீரன் எப்போதும் தோன்றுவதில்லலை, ஒரு இனத்தின் உரிமைகள்  பறித்து அடக்கு முறைகள்  தோன்ம் போது புரட்சியைவழி நடத்த ஒரு மாவீரன் தோன்றுகிரான் . பல தேசங்களுக்கு புரட்சிக்கும் பயங்கரவாததுக்கும் வித்திதயாசம் புரியாது .   அதை எடுத்து சொல்கிறது மேதகு திரைப்படம். .படத்தை பார்த்தபின் சிலர் கண்களில் கண்ணீர் , பலர் சிந்தனையில் ஒரு தீப்பொறி.. இளம் தமிழ் சமூதாயத்தில் ஒரு விளிப்பு. துரோகிகள் மனத்தில் ஒரு பயம்.

காந்தி இயேசு போன்ற  நீண்ட வரலாற்றுப் படங்கள் எடுப்பது மிக செலவாகும் . அதே தோற்றம் உள்ளவரை நடிக்க கண்டு பிடிப்பது மிக கடினம் . அதுவும் இந்தியாவில்  விடுதலலை புலிகள் தடை செய்யபட்ட இயக்கம் என்பதால் பல பிர்ச்சனைகளுக்கு மத்தியில் இந்த படம் மிக குறைந்த செலவில் புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆதரவுடன் எடுகப்பட்ட மிக மிக பெருமை படக்கூடிய விடயம் . பாரதிரஜா கூடதயங்கினார்  . மேதகு தலைவர் தங்கையின் திருமணத்தின் போதுமாப்பிள்ளை  தோழனுக்கு போட்ட மோதிரத்தை விற்று துவக்கு வாங்கியது. தந்தை DLO யாக கிளிநொச்யில் வேலை செய்தது போன்ற சிறு விசயங்களை உள்ளடக்கி இருக்கலாம் . வல்வெட்டிதுறை வடமராட்சி என்ற சோழர் மறவர் வாழ்ந்த பகுதி   ஆரம்பத்தில் அதன் வரலாற்றினை  காட்டி இருக்கலாம், அவர் வாழ்ந்த வீடு அந்த தோற்றம் உள்ளது அல்ல.அதில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம்  அல்ப்ரெட் துரையப்பா பொன்னாலை விஷ்ணு கோவிலுக்கு  சென்ற கார்  அந்த மாடல் கார் அல்ல ..SWRD பண்டர்நாயக்காகா குறைந்த உயரம் உள்ளவர் . பிக்குகள் பேசுவதில் கவனம் செலுத்தி இருக்கலாம்  சிங்களம் பேசுவது போல் இருக்க வேண்டும் .போலீஸ்காரன் உடை அதுவல்ல . இது போன்ற சில விசயங்களில் கவனம் செலுத்தி இருக்கலாம் . பாடல்கள மூன்றும் அபாரம் ,சிந்திக்க வைக்கிறது குமரி கண்டம் அரம்பம்நாட்டுக் கூத்து தனி அழகு. படம் ஒரு முக்கிய செய்தியை இளம் சமூதாயதுக்கு எடுத்து சொல்கிறது மூன்று இனக் கலவரங்களை  பார்த்தவர்களில் நானும்  ஒருவன் என் சிறுகதைகள் பல  ஈழத்து போர் பற்றியவை பரிசு பெற்ற  .விடிவு இல்லம் நாவல் ஈழத்துப் போரினை கருவாக வைத்து  எழுதப்பட்டது . ஆங்கில sub title போட்டிருந்தால் புலம் பெயர்ந்த தமிழ் இளம் சமூதாயத்துக்கு விடுதலை புலிகள் இயக்கம் ஏன் தோன்றியது என்று அறிய முடியும் .எல்லா  பெற்றோர்களும் தம் பிள்ளைகளுக்கு விளக்கம்   சொல்வதில்லை  இந்த படம் அந்த பயங்கரவாதிகள் என்ற  விளக்கத்துக்கு முதல் அடி. காலம் கடந்த பின் நாடுகள் தம் தவறை  உணருகிறார்கள்  . காரணம் சிறு பொருளாதரம் பின்னடைந்த நாடுகளின் மேல் சீனாவின் ஆக்கிரமிப்பு. 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *