முகநூல்

அக்கா வணக்கம்!… கிருபா கிருபா.

எல்லாம் நல்லபடியாகத்தான் போனது
உங்களை கொச்சைப்படுத்த இப் பதிவுமல்ல..
சில அடிப்படை விதிகளையும் மீறி
உங்களுக்காக ஐரோப்பிய குளிர்கால
தெருக்களில் நாங்கள் நின்றதும் உண்மை…
போராட்டம் என்பது சத்தியம் நிறைந்ததாக
இருத்தலே அது நிலைத்து நிற்பதற்கான
அத்திவாரம் என்பது தாங்கள்அறிந்திருந்தால்
ஏன் திலீபன் அண்ணா
குலுக்கல் சீட்டு என திடீரென குத்துக்கரணம்..?
தன் தலைவனிடம் கெஞ்சிக்கூத்தாடி
உணவும் எச்சில் நீரும் விழுங்கமறுத்து
தன்னை அணுவணுவாக இன விடுதலைக்காய்
எரித்த திலீபன் எனும் ஒப்பற்ற மாவீரனோடு
உங்களை ஒப்பிடக் காரணம் என்ன..?
அங்கொன்றும் இங்கொன்றுமாக
வரலாற்றுச் சாட்சியங்கள்
இன்னமும் உயிரோடு தான்உலாவுகிறார்கள்
என்பதை மறந்து விட்டீர்களா..?
இன விடுதலைக்கு சாவதென்பது
உயரிய பெரும் தியாகம்…
நீங்கள் அப்படிச் செய்வதாக எண்ணித்தான்
உங்களுக்காக களத்தில் நின்றோம்…
இப்பொழுது எங்கட சனத்திற்கு
நாங்கள் என்ன பதில் சொல்ல அக்கா..?
2009 ற்கு பின் இன விடுதலைக்கு பணி
செய்வதென்பது கத்திமேல்
நடப்பது போல என்பதை நாமறிவோம்…
நீங்கள் அக்கா..?
இன்னமும் நாங்கள்
நம்பிக்கை இழந்து விடவில்லை
தங்களின் பொன்னான உயிர்களை
எம் மண்ணிற்காய் ஈந்த
அற்புத மாவீரர்கள் நடந்த வழித்தடம்
எங்கள் மனங்களில்
ஆழப்பதிந்துள்ளது என்பதே
எங்களின் மேலான பலம்..
இன்னமும் இனத்திற்காக எனச்சொல்லி
பல நூறு பேர் வாருங்கள்
உங்களிற்காய் பணியாற்ற நாங்கள் தயார்..
ஆனால் அது உண்மையும் உறுதியுமாக
பார்த்துக்கொள்ள வேண்டியது
உங்களின் பொறுப்பு

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *