Featureகட்டுரைகள்

பெண்ணடிமைத்தனம் தொடர்கிறதா?….. (ஒரு பார்வை)….. ஏலையா க.முருகதாசன்

பங்குனி எட்டாந் திகதி சர்வதேச மகளிர் தினமாகும்.பாலியல் ரீதியான பார்வைக்குட்படுத்தப்பட்டு ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை கொடுக்க இயலாது என்ற ஆணாதிக்கத்தை தொடர்ச்சியான போராட்டங்கள் மூலம் சர்வதேசப் பெண்கள் வென்றெடுத்த சுட்டல் நாளாக இந்நாள் எழுச்சி நாளாகக் கொண்டாடப்படுகின்றது.

குறிப்பாக உலக நாடுகளின் உள்ள இனக்குழுமங்களில் ணெ;களின் நிலை என்ன என்பதை கவனிக்கும் போது எப்பொழுதுமே பொதுக்கருத்தாக ஆசியப் பிராந்தியத்து பெண்களைப் பற்றி ஆய்வாளர்கள் குறிப்பிடும் போது மிகவும் மோசமான பெண்ணடிமைத்தனம் உள்ள நாடுகள் ஆசியப் பிராந்தியத்து நாடுகள் எனக் குறிப்பிடுவர்.

கல்வியிலும்அரசியல்நாகரீகத்திலும்,விஞ்ஞானத்திலும்,பொருளாதாரத்திலும்,நாகரீகத்திலும் உச்சம் தொட்ட ஐரோப்பிய நாடுகளிலும் பெண்ணடிமைத்தனம் இருக்கத்தான் செய்கின்றது.

அடிமைத்தனமான அவர்களின் வாழ்க்கைக்கு பொன்முலமாக அவர்களின் வசதியான வாழ்க்கை இருப்பதாக ஐரோப்பிய பெண்கள் கருதுகிறார்கள்.

சமூகத்தில் பெண்கள் என்றால் அவர்கள் யார்?.அவர்களின் முக்கியத்துவம் என்ன?.அவர்கள் எவ்வாறு பயன்படுத்தப் படுகிறார்கள் என்பது ஆழமான ஆய்வுக்குரியதே.

ஓவ்வொரு இனக்குழுமத்தின் பண்பியல் பாரம்பரியத்துடன் தொடர்புபடுத்தி அந்தந்த இனக்குழுமப் பெண்கள் பார்க்கப்படுகின்றனர்.பண்பாடு என்ற வரையறைக்குள் பெண்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள்.

பெண்களை எப்படிக் கையாள வேண்டுமென்பதில் மனிதநேய நீதிக்கு அப்பால் மனித உயிரினத்தில் பெண்ணினமும் ஆணுக்கு சமனாவள் என்ற கருத்தினை உள்வாங்கி ஏற்றுக் கொள்வதற்கு பெண்ணுலகம் மிக நீண்ட காலம் போராடி வேண்டியிருந்தது.

இது இனக்குழுமங்கள் ஒவ்வொன்றும் ஆணாதிக்க வாயிலாக பெண்களை அடக்கியாளுவதற்கு பாலியல் கோட்பாடுகளையும் அவர்களின் பெண்குறி நோக்கிய பார்வையையும் முதன்மைப்படுத்தி பெண்கள் சுகபோகத்துக்கு மட்டுமே உரியவர்கள் என்று வலுவான கருத்தியலை சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் முன்மொழிந்து அவர்களை ஒரு போகப் பொருளாகவே பார்க்கத் தொடங்கியது.

பெண்ணடிமைத்தனத்திற்கு அடிகோழிய இடமே மன்னர் ஆட்சிகால அந்தப்புர அழகிகளாக ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை சுகிப்பதற்காக வைத்திருந்த செயல்பாடேயாகும்.

ஓவ்வொரு இனக்குழுமத்து பெண்களும் தம்மை என்னவாக பயன்படுத்துகிறார்கள் என்பதை அவர்கள் கவனித்த போது தமது பெண்குறியை நோக்கிய ஆண் உலகத்தின் முழுக் கவனமும் இருக்கின்றது என்பதை அவர்கள் உணரத் தொடங்கிய போது அவர்களுக்குள் எழுந்த நெருப்பலைகளே தமக்கான சுயமரியாதையை மனதையும் ஆன்மாவையும் மதிக்கின்ற சமூகசமநீதியை நோக்கி போராட்டமாக வளரத் தொடங்கியது.

இயற்கையின் படைப்பாக கருதப்படும் மனித உயிரினம் தொட்டு உயிரினமாக கருதப்படும் அனைத்துமே ஒன்றிலிருந்து ஒன்று என்ற விதிக்கமையவே நடைபெற்று வருகின்றன.இனவிருத்தி என்பது இந்த அடிப்படை இயற்கை விதிக்கமையவே நடைபெறுகின்றது.

ஆணும் பெண்ணும் இணைகிற போது உண்டாகின்ற இனவிருத்தி ஆரம்பம் என்பதிலேயே ஆணும் பெண்ணும் சமம் என்ற கோட்பாட்டை அவமதித்து ஆணினால் சுகிப்பதற்காக மட்டுமே பெண்ணுரியவள் என்ற மோசமான மனநிலையை ஆணுலகம் வெகு அழுத்தம் திருத்தமாகவும் தமது உணர்ச்சிகளின் வடிகாலே பெண் என்ற ஒரு தோற்றத்தை சமூககட்டுமானமாக நிறத்த முயற்சித்து அதில் ஆணினமும், ஆணினத்தால் கட்டமைக்கப்பட்ட சமூகமும் அதனைச் சமூக விதியாக அழுத்திச் சொல்லி வருகின்றது.

பெண் என்பவள் பலவிதமாக சமூகத்தால் நசுக்கப்படுகிறாள் என்பது உண்மையானாலும் பாலியல் சார்ந்த செயல்பாடுகளாலேயே பெண் பெரும் அவதிக்குட்படுகிறாள்.பெண் என்பவள் ஆணைவிட வலிமை குறைந்தவள் என்பது ஆணுக்கு அனுகூலத்தை ஏற்படுத்திவிட்டது.

பணியிடங்களில் கூட பெண் நண்பிகளை எவ்வித எதிர்பார்ப்புமின்றி; நண்பிகளாக ஆண்கள் வைத்திருப்பது மிக அரிதாக இருக்கின்றது.

தூண்டில் போடுவது போன்று பெண் நண்பியின் மனநிலை என்ன என்பதை ஆண்கள் அறிவதில், பெண் நண்பிகளிடம் சிலேடையான, வக்கிரமான பாலியல் கதைகளைச் சொல்வதும் அவர்களை தமது எண்ண வளையத்துக்குள் கொண்டு வருவதற்கும் அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.தமது ஆசைக்கு உட்படாத பெண்களைப் பற்றி அவர்கள் ஒழுக்கமற்றவர்கள் என்று ஆண்கள் நாக்கூசாமல் சொல்வதுமுண்டு.பெண்களை உளரீதியாக நிலைகுலைய வைப்பதற்கு ஆண்கள் எடுக்கும் மிகவும் கீழ்த்தரமான விமர்சனம் இதுவாகும்.

பணியிடங்களில் அதிகாரிகளால் பணியைப் பறித்துவிடுவேன் என மிரட்டலுக்கு உட்படுத்தி தமது எண்ணத்தை ஈடேற்றுபவர்களும் உண்டு.

தமது ஆசைக்கு இணங்காத பெண் பணியாளர்களுக்கு ஊதியக் குறைப்பு அல்லது திறமைக்குத் தக்க ஊதிய ஏற்றம் போன்றவற்றைச் செய்யாது அவர்களைப் பழிவாங்குகிறார்கள்.

ஐரோப்பிய நாடுகளில்கூட பெண்ணும் ஆணும் ஒரே பணியைச் செய்த போதிலும் ஆணைவிட பெண்ணுக்கு குறைவாகவே ஊதியம் வழங்கப்படுகின்றது.ஆணினம் எப்படி நடந்து கொண்டாலும் பரவாயில்லை,ஆண்கள் சேறு கண்ட இடத்தில் விழக்கி தண்ணி கண்ட இடத்தில் கழுவலாம் என்ற கற்பிதத்தை சமூகம் ஆணினத்துக்கான சலுகையாகவும் வழங்கியதால் அதன்மூலம் ஆண்கள் தவறாக நடக்க முயற்சிக்கின்றனர்.

பெண் அடக்குமுறைக்குள் கணவன் மனைவிக்கிடையில்கூட உண்டு. மனைவி கணவனுக்காக அவர் நினைக்கும் நேரமெல்லாம் அவரின் உடல் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகிறாள்.

உடல் உறவுக்குரிய மனநிலை இல்லாத போதும் உடல் நலக் குறைவு ஏற்படும் காலங்களிலும், உடல் களைப்போ அலுப்போ உள்ள சமயங்களில்கூட மனைவியின் நிலை என்ன என்பதை உளரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவள் தயாராக இருக்கின்றாலா என்பதைக்கூட கவனத்தில் கொள்ளாது தமது இன்பமே பெரிது என்று நடக்கும் கணவன்மாரும் உண்டு என்பது உண்மையே.

பாலியல் ரீதியாக பெண்கள் எவ்வாறு அடிமைப்படுத்தப்பட்டார்கள் என்பதற்கு நான் வாசித்த இரண்டு செய்திகளையும், நான் அறிந்த இரண்டு செய்திகளையும் பதிவு செய்கின்றேன்.

அன்றைய அரசர்கள் தாம் வீட்டைவிட்டு வெளியே செல்லும் போது தனது மனைவிக்கு இடுப்பைச் சுற்றி உலோகத்திலான ஒரு வளையத்தை அணிவித்து சிறுநீர் கழிக்கக் கூடிய விதத்திலும் மலம் கழிக்கக்கூடிய விதத்திலும் துவாரங்களை விட்டிருப்பார்கள். பெண்குறியின் ஏனைய பகுதிகளின் இருபக்கத்தின் உலோக இடைவெளி இருபக்கமும் வீமன் எலிப்பொறிக்கு இருப்பது போல கூரான பற்கள் இருக்கத்தக்கதாக அவை இருக்கும்.

இன்னொரு செய்தி அதையும் ஒரு இணையத்தளத்தில் வாசித்தேன்.இலண்டனில் அகதிநிலை கோரியிருந்த பெண் ஒருவர் தமக்கு நேர்ந்த அவலத்தை இவ்வாறு கூறியிருந்தார்.’நான் பூப்பெய்தியதும் ஒரு வயதான பெண் ஒரு வகை முள்ளும் ஒரு செடிவகை கொடியிலிருந்து நூல் போன்ற ஒன்றைக் கொண்டு வந்து எனது சிறுநீர் துவாரத்தை தவிர்த்தும்,மாதவிடாய் வரும் போது வெளியேறும் இரத்தத்திற்காக ஒரு சிறு துவாரத்தை மட்டுமே விட்டிட்டு பெண்குறித் துவாரத்தை அந்தச் செடி முள்ளால் குத்தி கொண்டு வந்த கொடியை தைப்பது போல தைத்துவிட்டதாகவும் அதனால் சிறுநீர் கழிக்கும் போதும் மாதவிடாய்க் காலத்திலும் தான் சொல்லெணாத் துயரத்தை அனுபவித்ததாகச் சொன்னார்.

ஐரோப்பிய நாடொன்றில் ஒரு பெண்ணுக்கு நடந்து அவலம் இது,அவர் தனது தோழியிடம்’ எனது கணவர் ஒரு சந்தேகப் பேர்வழி நான் வெளியே போய்விட்டு வீட்டுக்கு வரும் போதெல்லாம் எனது கணவர் என்னை குளியலறைக்குள் அழைத்துச் சென்று நான் வேறு ஆண்களுடன் உடல் ரீதியாக தொடர்பு வைத்திருக்கிறேனா என்பதற்காக எனது உள்கீழாடையை நீக்கிப் பார்க்கிறவர் „ என்று சொல்லியிருக்கிறார்.

நான் ஊரிலிருந்த போது தென்பகுதியில் வேலை செய்த ஒருவர் தனது மனைவியை அழகி என்பதற்காக அவர் வரும்வரை பூட்டி வைத்துவிட்டுப் போவதாக அறிந்திருந்தேன்.

கணவன் மனைவிக்கிடையில் நடைபெறும் உடல் உறவு கணவனை மட்டுமே மகிழ்விப்பதல்ல.அது மனைவியையும் மகிழ்விப்பதாகும்.சுகித்தலில் கணவன் பெறும் மகிழ்ச்சிக்கும் மனைவி பெறும் மகிழ்ச்சிக்கும் இடையில் ஒழுங்கமைப்பு தேவைப்படுகின்றது என்பதை பல கணவன்மார்கள் உணர்வதில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

உலக மொத்த பெண்களின் சனத் தொகையில் இன்னும் கல்வியறிவு பெறாத பெண்கள் அரைப் பங்குக்கு மேல் இருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

கல்வியறிவு பெண்களைச் சிந்திக்க வைத்து அவர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டத் தொடங்கிவிடுவார்கள் என்பதுடன் ஆணினம் அவர்கள் மீதான அடக்குமுறைக்கான கோட்டுபாடுகளை தர்க்க ரீதியாக தகர்த்தெறிந்து விடுவார்களென்பதுமாகும்.

பல்லினக் கலாச்சாரம் கொண்ட ஒருமுகப்படுத்தப்பட்ட நாடுகளில்கூட ,அந்த நாடுகளின் பெண்களுக்கான உரிமைச்சட்டங்கள் மூலமாக அனைத்துப் பெண்களுக்குமான உரிமையை நிலைநாட்ட முடிவதில்லை.

பெண் என்ற காரணத்திற்காக சிறுமிகளை வண்புனர்வு செய்கின்ற கொடுமையை நாளாந்த செய்திகளில் பார்க்கின்றோம்.இது மிருகத்தனமான செயலுக்கும் அப்பாற்பட்டதேயாகும்.இத்தகையோருக்கு காலாகாலத்தில் கடுமையான தண்டனைகளை வழங்கி சமூகத்தை ஒழுங்கப்படுத்த அரசுகளும் தவறுகின்றன.

சிறுமிகளை வன்புணர்வு கொள்ளும் செயலுக்கும் பெண்ணடிமைத்தனத்திற்கம் எவ்வித சம்பந்தமும் இல்லையென்று, பெண்ணடிமைத்தனம் பற்றி ஜேர்மனியிலிருக்கும் எழுத்தாளர் திருமதி.கீதாராணி பரமானந்ததம் அவர்கள் என்னிடம் கூறியிருந்தார்.

சிறுமிகள் வன்புணர்வு என்பது சமூக விரோதச் செயலுக்குள் அடங்குகின்றது என்பது அவரின் கருத்தாக இருக்கின்றது .இப்படியான கலவையான எண்ணப்பாடுகளும் இருக்கவே செய்கின்றன.

சமூகத்திலும் சரி குடும்பத்திலும் சரி பெண்கள் எடுக்கும் முடிவுகளை சமூக மட்டத்திலும் சரி குடும்ப மட்டத்திலும் சரி ஏற்றுக் கொள்வதில்லை என்ற பெண்கனகளின் அதிருப்தியை முற்று முழுதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பெண்கள் தமது தொடர்ச்சியான போராட்டத்தின் பயனாக அரச,சமூக, தொழில் நிறுவனங்களில் ஆளுமையுள்ள அதிகாரிகளாகவும் திட்டமிடுபவர்களாகவும் மேலோங்கி நிற்பதையும் மறுக்க முடியாது.

மகளிர் தினத்தை முன்னிட்டு எனக்குத் தெரிந்த இரு பாலினரிடமும் „பெண்கள் இன்னும் அடிமை நிலையில்தான் இருக்கிறார்களா’ எனக் கேட்ட போது அவர்கள் சொன்ன பதில்கள் இவை.

ஜேர்மனியைச் சேர்ந்த எழுத்தாளரும் கவிஞருமான திருமதி.நகுலா சிவநாதன் அவர்களின் பதில்:

„இல்லை பெண்கள் அடிமைத்தனத்தில் இல்லை.அவர்கள் சுதந்திரமாகவே இருக்கிறார்கள், உரிமையுடன் இருக்கிறார்கள். அடிமைத்தனத்திற்கு காரணமே கல்வியறிவு இன்மையே ஆகும்.

இன்று உலகளாவிய ரீதியில் பெண்கள் கல்வியையும் அனூடான அறிவையும் நோக்ககிச் செல்லத் தொடங்கிவிட்டனர்.தொழில்துறைகளில் ஆணுக்குச் சமனாக பெண்கள் அனைத்துத் தரங்களிலும் வகிபாகம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

பெண்கள் அடிமையாக இருக்கிறார்கள் எனத் தொடர்ச்சியாக சொல்லப்படுவதற்குக் காரணம்,தொடர்ச்சியாக அதைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவே.

இப்படித் தொடர்ச்சியாக சொல்லிக் கொள்பவர்களிடம் தர்க்க ரீதியாக வினாக்களைத் தொடுக்கும் போது பதில் சொல்வதற்கு தடுமாறுகிறார்கள்.

பெண்ணடிமைத்தனம் இருந்ததுதான்.ஆனால் அது வெற்றி கொள்ளப்பட்டுவிட்டது.உங்களைப் போலத்தான் நானும் என்று வீடுகளிலேயே மனைவி கணவனைக் கேள்வி கேட்கத் தொடங்கிய காலம் இது.அதற்குக் காரணம் கல்வியும் அறிவின் தேடலுமோ.

எனது பொதுவாழ்விற்கும் எழுத்துத் துறைக்கும் ஆசிரியத்துறைக்கும் உறுதுணையாக பக்கபலமாக எனது உரிமையை மதித்து எனக்கு ஆதரவாக எனது கணவர் இருக்கிறார். யாரிடமிருந்தும் எமது உரிமையைப் பெற வேண்டியதில்லை.எம்மிடமே அது இருக்கின்றது.நாம்தான் அதை எடுக்க வேண்டும்.அதற்கு தடை எதுவுமேயில்லை.

ஜேர்மனியைச் சேர்ந்த எழுத்தாளர் திருமதி.கீதாராணி பரமானந்தம் அவர்களின் பதில்:

„இல்லை! பெண்கள் இன்று வீட்டிலும் வெளியிலும் சம பங்கோடு நிமிர்ந்து வாழ்கிறார்கள்’

என்று அவர் பதில் அளித்த போது பெண்கள் பாலியல் ரீதியாக கொடுமைக்குள்ளாகிறார்களே என்று அவரிடம் கேட்ட போது,

„சில மனித மிருகங்கள் அப்படி நடந்து கொள்வதை வைத்துக் கொண்டு பெண்கள் அடிமையாகத்தான் இருக்கிறார்கள் எனச் சொல்ல முடியாது அவர் பதில் அளித்தார்.

அதற்கு அவரிடம் நான் கணவன் மனைவி என்ற உறவு நிலையில்கூட மனைவி என்பவள் தனக்கு விருப்பமில்லாத போதிலும் உடல் ஆரோக்கியமற்ற தன்மையிலும்கூட கணவனின் உடல்ரீதியான விருப்பத்திற்கு இசைந்து போக வேண்டியுள்ளது.எமது தலைமுறை இரண்டும் கெட்டான் நிலைப் புழுக்கத்திற்குள் அகப்பட்டது போல அடுத்த தலைமுறையிருக்காது அவர்கள் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று முடிவெடுப்பார்கள் என்றார்.இன்னும் அதற்கும் அடுத்த தலைமுறை இன்னும் வேகம் கொண்டவர்களாக ஆணாதிக்கத்தை துவம்சம் செய்பவர்களாக இருப்பார்கள் என்றும் சொன்னார்.

ஜேர்மனியிலிருப்பவரும் „நாளைய நாம்’ தொடர் நாடகத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான திருமதி.சிபோ சிவகுமாரன் அவர்களின் பதில்:

‘கல்வியும் சம உரிமையும் உள்ள ஜேர்மனியில் கூட பெண்களுக்கான இரகசிய விடுதிகள் (குசயரநnhநiஅ) இருப்பது ஏன் என்று யோசித்து பார்த்தது உண்டா?

இலண்டனைச் சேர்ந்த எழுத்தாளர் திருமதி.நிவேதா உதயராயன் அவர்களின் பதில்:

‘ஆம் பெண்கள் இன்னும் அடிமைகளாகத்தான் இருக்கின்றனர். கல்வியில் தொழிலில் குடும்பத்தில் என அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் அதற்கு மேலே இருக்கும் ஆண்களால் கணவனால் என மிகச் சொற்பமான பெண்களைத் தவிரப் பெரும்பாலான பெண்கள் அடக்குமுறைகளைத் தாங்கிக்கொண்டு அடிமைகளாகத்தான் இருக்கின்றனர்.’

டென்மார்க்கைச் சேர்ந்த கவிஞை திருமதி.ரதி மோகன் அவர்களின் பதில்:

‘ஆம் பெண்ணடிமைத்தனம் இன்னமும் உண்டென்று நான்

அடித்துச்சொல்வேன்.’

ஜேர்மனியைச் சேர்ந்த எழுத்தாளர் திருமதி.கரிணி முவா அவர்களின் பதில்

„பெண்ணடக்குமுறை சிற்சில இடங்களில் உண்டு’

ஜேர்மனியைச் சேர்ந்த பாடகரும் „நாளைய நாம் „ தொடர் நாடக நடிகருமான திரு.பொன் இராமா அவர்களின் பதில்:

‘உதாரணத்திற்கு நாடகத்தில் என் நிலை’

பெண்களால் ஆண்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள் எனச் சொல்ல வருகிறீர்களா?

‘ஆம் 100 : 100 உண்மை’

இலங்கையைச் சேர்ந்த மருத்துவரும் சிறந்த விமர்கருமான மருத்துவர் திருமதி.செல்வரஞ்சனி சுப்பிரமணியம் அவர்களின் பதில்:

‘இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் அடைந்திருந்தாலும் குறிப்பிடத்தக்க அளவு ஆணாதிக்கம் இன்னும் நடைமுறையில் இருக்கின்ற காரணத்தால், பெண்கள் முழுமையான சமூக,சுய ஒடுங்கல்களில் இருந்து மீளவில்லை. வீட்டிலும், வேலைத்தளங்களிலும் முழுமையான சுதந்திரத்துடன் இயங்க முடிவதில்லை. திருமணத்தில் பெண்களிடம் சீதனம் கோரப்படும் நடைமுறை இன்றுவரை தொடர்கிறது.அடிமை என்ற நிலையில் இருந்து முன்னேற்றம் அடைந்திருந்தாலும் நேரடியான, மறைமுகமான ஆதிக்கங்களில் இருந்து மீளவில்லை.

முக்கியமாக திருமணமான பெண்கள். பெண்சுதந்திரம் என்பதை பல நவீன பெண்கள் தவறான கோணத்தில் புரிந்து கொள்வதையும் காணக் கூடியதாக இருக்கிறது’.

ஜேர்மனியைச் சேர்ந்த எழுத்தாளர் திரு.பொ.புத்திசிகாமணி அவர்களின் பதில்:

.’இவற்றையெல்லாம் உடைத்தெறிந்து செவ்வாய்க்கிரகம் வரை அறிவை அனுப்பியவர்கள் பெண்கள்.தேவையற்ற ஆசைகளைத் துறந்து அறிவை விருத்தி செய்தால் அகிலம் அவர்கள் காலடியில்.’

டென்மார்க்கில் வசிப்பவரும் எழுத்தாளருமான திருமதி.சுபாஜினி சிறீரஞ்சனின் பதில்:

குரலை உயர்த்தவேண்டும்

‘எனக்கு இந்தக் கொடுமை நடந்தது’என எந்தப் பெண்ணும் சொல்லக் கூடாது’ ……….. என்ற நிலைக்கு உட்படுத்தப்படுவோமானால் இன்றிலிருந்தே எங்கள் குரல்களை உயர்த்த வேண்டும்.

கடந்த சில வருடங்களாக என்றுமில்லாதளவு பாலியல் கொடுமைகள் சிறுமிகள் துஸ்பிரயோகம் எல்லாமே நடந்தேறியிருப்பதாக புள்ளிவிபர அறிக்கை தெரிவிக்கின்றது.

பொதுவாக வேலைசெய்யும் இடங்களில் அதிகாரிகளால் பல கொடுமைகள் நடக்கின்றன,இதை வெளியே சொன்னால் வேலையிலிருந்து இலகுவாகே நீக்கிவிடுகின்ற நிலமையனால் இதை வெளிப்படுத்த முடியாமலும் அல்லது சமூகப் பிரச்சனைகள் ஏற்படும் என்ற காரணத்தால் வெளியே சொல்லாமல் உளரீதியாக பாதிக்கப்பட்டும் பல பெண்கள் வாழ்கின்றனர்.

இன்றைய சூழ்நலையில் இணையதளங்கள் மற்றும் பல சமூக வலைத்தளங்களூடாக துஸ்;பிரயோகங்கள் தனிநபரைப் பழிவாங்கல் மற்றும் வன்முறையான உரையாடல் என அதிகரித்துக்கொண்டே போகிறது.

ஒவ்வொரு பெண்ணும் தனது குடும்பப் பொறுப்பிலிருந்து வெளியே வந்து சற்று சமூகநல அக்கறையோடு தன்னால் முடிந்த கடமைகளைச் செய்ய முற்படும் போது ஆதிக்கத்தனங்களும் பிற்போக்குத்தனமும் உடைந்து நொருங்கிவிடும்!!

ஆக,கொஞ்சம் சுய பொருளாதாரத்துடன் வெளியில் சுதந்திரத்தோடு நடமாடுவதால் மகிழ்ச்சியோடு சுயமரியாதையோடும் வாழ்கிறோம் என்று எண்ணிவிடாது இன்னபிற பல பாதுகாப்புக்காகவும் துணிந்து போராட வேண்டும் எல்லாத் துயரதுன்பங்களையும் தாண்டி வல்லமையோடு வாழும் பெண்ணினத்தை பெருமையோடு வாழ்த்துவோம்……. துன்பப்படும் பெண்களுக்காகவும் குரல் கொடுப்போம்.

ஜேர்மனியில் இருப்பவரும் எழுத்தாளருமான திரு.பொ.கருணாகரமூர்த்தி அவர்களின் கருத்து:

 

‘ஜெர்மனியில் இப்போதும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான வேதனங்கள் வழங்கப்படுவதில்லை. சில நிறுவனங்களின் வேலைக்கான நேர்முகத்தேர்வுகளில் சமீபத்தில் பிள்ளைப்பெற்றுக்கொள்ளும் திட்டம் ஏதும் உள்ளதா என்றெல்லாம் கேட்கிறார்கள். பதில் ‘ஆம்’ எனில் பணியில் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள்.’

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *