இந்துக்களை அவமதித்த இலங்கை சிலாபத்தைச் சேர்ந்த ஜீவாணி காரியவாசம்!…. ஏலையா க.முருகதாசன்.

![]()
இலங்கை சிலாபத்தைச் சேர்ந்த சட்டத்தரணியான ஜீவாணி காரியவாசம் தனது முகநூலில் காளியம்மனை மேலாடை எதுவுமின்றியும் இடுப்பில் உள்ளாடை மட்டுமே அணிந்துள்ள நிலையில் மண்டை ஓடுகளை மாலையாகக் கொண்ட படமொன்றை பதிவிட்டதால் அது காளியை வழிபடும் இந்துக்களையே அவமதிக்கும் செயலாகவும் அவர்களைக் கோபமும் கவலையுமடையச் செய்துள்ளது.
![]()
![]()
இது தொடர்பாக இலங்கை கற்றன் நகரிலுள்ள இந்து அமைப்பினர் காவல்துறையினரிடம் புகார் கொடுத்ததுடன் இலங்கை ஜனாதிபதிக்கும் தமது கண்டனத்தைத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் மூலம் அறிய முடிகின்றது.
நான் சிலாபத்திலும் வாழ்ந்தவனாகையால் அங்கு தமிழ் மக்களும் சிங்கள மக்களும் சமூக இணக்கப்பாட்டுடனும் ஒற்றுமையுடனும் மத நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வருவதை நானே பார்த்திருக்கிறேன்.
இந்த நிலையில் சிலபத்தைச் சேர்ந்த ஒருவர் இந்து மக்களை கவலை கொள்ளவும் கோபப்பட வைக்குமளவிற்கு பொறுப்பற்ற முறையில் அதுவும் அவர் ஒரு சட்டத்தரணியாக இருந்தும் இத்தகு பதிவுகளை அவர் வெளியிட்டமை தமிழ் மக்களிற்கும் சிங்கள மக்களுக்குமிடையில் இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் செயலாகவே பார்க்கப்படுகின்றது.
எதையும் விமர்சிக்கலாம் என்ற சனநாயக உரிமைக்கும்கூட வரைமுறைகளும் எல்லைகளும் உண்டென்பதை அறியாதவர் அல்ல அவர்.அதையும் அவருடைய சட்டத்தரணி கல்வி கற்றுக் கொடுத்திருக்கும்.
சட்டத்தரணிக்கான கல்வியில் லொஜிக்(Logic) என்று சொல்லுகின்ற தர்க்கவியலையும் எதிக்ஸ் (Ethics) என்று சொல்லுகின்ற நெறிமுறைக் கல்வியையும் அவர் படிக்காதவர் அல்ல.நெறிமுறைக் கல்வியென்பதில் மனங்களை நோகடிக்காத அறக்கல்வியும் உண்டு.நெறிதவறாமை என்பது அறம் தவறாமையாகும்.
அந்தக் கல்வியில் ஒருவரையோ ஒரு சமூகத்தையோ ஒரு இனக்குழுமத்தையோ அல்லது அவரவர் பின்பற்றும் மதநம்பிக்கை மீதோ அவதூறுகளை வாய்வழி மூலமாகவோ, எழுத்து மூலமாகவோ படங்கள் மூலமாகவோ ஒருவர் மேற்கொள்வாராயின் அது உள்ளத்தை நோகடித்தமைக்கான தண்டனைக்குரிய குற்றம் என்பதை அவர் அறியாதவர் அல்ல.
சிலாபத்திலிருப்பவர் இத்தகு பதிவைப் போட்டதால் அவருக்கு நன்கு பழக்கப்பட் முனீஸ்வரன் கோவிலுக்கும் ,அதனருகில் உள்ள காளியம்மன் கோவிலுக்கும்கூட அவர் போயிருக்கலாம்,அங்கு சிங்களவர்களும் தமிழர்களும் ஒன்றிணைந்து வழிபட்டதை அவர் அறியாதவரல்லர்.
அங்கு இன நல்லிணக்கத்துடனும், மத நல்லிணக்கத்துடனும் சிங்களவர் தமிழர் என எந்த வேறுபாடுமின்றி நம்மிரு இனத்தவர்களுக்கும் ஒரே தெய்வம் என வழிபட்ட அற்புதத்தை நானே பார்த்திருக்கிறேன்.
அது எந்தச் சமயமாகவிருந்தாலும், அந்தச் சமயத்திற்கான உருவங்களையோ சமயச் சின்னங்களையோ அவமதிப்பது என்பது இலங்கையின் ஒருமித்த அனைவரும் இலங்கையர் என்ற முதன்மைமிக்க கோட்பாட்டிற்கே கேடு விளைவிக்கும் செயலாகும்.
இது அரசியல் ரீதியாகவும் இலங்கையின் மத நல்லிணக்கத்தை கேள்விக்குறியாக்கும் செயலுமாகும்;.மத நல்லிணக்க ஒருமைப்பாட்டுக்கு இத்தகு பதிவுகள் ஊறு
விளைவிக்குமாகையால் இது ஒரு சமூகக் குற்றம் மட்டுமல்ல தண்டனைக்குரிய தேசவிரோதச் செயலுமாகும்.![]()
ஒரு பெண்ணாக இருக்கும் ஜீவாணி காரியவாசம் ஒரு பெண் தெய்வத்தை இழிவுபடுத்தியமை பெண்ணினத்தையே எள்ளி நகையாடியமைக்கு சமனாகும்.
தனிமனித உரிமைக்கான வரைவிலக்கணம் என்ன அதன் எல்லை என்பது பற்றியும், ஜனநாயக உரிமைக்கான வரைவிலக்கணம் என்ன அதன் எல்லை என்பது பற்றியும், இலங்கையின் பல்லின மக்களின் மொழி, மதம் கலை கலாச்சாரம் பற்றிய அலகுகள் என அத்தனையுடன் இலங்கை தனக்னெ வகுத்துக் கொண்ட ஜனநாயகச் சோசலிசக் குடியரசு வரைபுகளைக் கற்காதவரும் அல்ல அவர்.
இவருடைய பதிவு முழு இலங்கையின் பண்பிற்கே கேடு விளைவித்துள்ளது என்பதை அவர் உணர்தல் வேண்டும்.அவர் தன்னளவில் நான் யாருமில்லை (I am nobody) என்று அவர் வெளிப்படுத்தலாம் விளிக்கலாம் அது அவரின் உரிமை ஆனால் நாங்கள் யாருமில்லை(We are nobody) என அவர் விளிக்க முயற்சிப்பது தவறேயாகும்
சமய நம்பிக்கையை அநாகரீகமாக விமர்சிக்க அவருக்கு உரிமையில்லை என்பதை அவர் அறியாதவர் அல்ல, அது அவரின் சட்டக் கல்வியிலேயே இருக்கும்.
அவர் தானாகவே இதை மேற்கொண்டாரா அல்லது இந்துசமயத்திற்கு எதிரானவர்களின் தூண்டுதலால் இத்தகு அவதூறுச் செயலைச் செய்தாரா என்பதும் பலரின் மனதில்: சந்தேகங்களை விதைத்துள்ளன.
அதே வேளை அவரை தமது கருத்துக்களால் விமர்சிப்பவர்கள் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி இருப்பதும் கண்டிக்கத்தக்கதே. அதில் இந்துசமயகுருவும் அடங்கியிருப்பது வேதனைக்குரியதே.
இந்நிலையில் தனது தவறை உணர்ந்து பதிவிட்ட நிர்வாண காளியம்மன் படத்தை தனது முகநூலிலிருந்து நீக்கி மன்னிப்பு கேட்பதே ஜீவாணி காரியவாசம் செய்ய வேண்டிய பண்பான மனித நாகரீகமாகும்.
இது போன்ற பதிவுகள் தமிழர் சிங்களவர்களுக்கிடையிலான ஒற்;றுமைளையச் சிதைக்கின்ற செயலாகும்.இதைச் சகோதரி ஜீவாணி காரியவாசம் உணர்வார் என நம்புகிறேன்.
බුදුරජාණන්වහන්සේට වගේම දෙවියන්ට අපහස කරලා හොදින් ඉන්න බෑ කාටවත්.දෙවියන් දඩුවම් කරයි මේ වගේ ගෑණුන්ට..
———————————————————————————————–
සියළුම ශුද්ධ වූ ජලය පරයා ඇල්කොහොල් මානව වර්ගයාගේ සුරක්ෂිත භාවය ආරක්ෂා කල වසරක අවසානය… මුළු ලොවම අවිනිශ්චිත වසරක ආරම්භය ඉදිරිපිට.. මගේ ප්රාර්ථනය මිනිස් ශිෂ්ටාචාරයේ නිර්මාණශීලීම වසරක් වේවා කියා… 2021 – #වසංගතේ_අපේ_අතේ
(ஆல்கஹால் அனைத்து புனித நீரையும் வென்று மனிதகுலத்தின் பாதுகாப்பைப் பாதுகாத்த ஒரு வருடத்தின் முடிவு … உலகம் முழுவதும் நிச்சயமற்ற ஒரு வருடம் தொடங்குவதற்கு முன்பு .. மனித நாகரிகத்தின் மிகவும் ஆக்கபூர்வமான ஆண்டாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் … 2021 – #plague_our_hand
Jeevanee Kariyawasam 31 DtiaeSclmfopemlbocoer t20aefcnl2e0 nhsatgdo 17roer:or2lad1 ·
සියළුම ශුද්ධ වූ ජලය පරයා ඇල්කොහොල් මානව වර්ගයාගේ සුරක්ෂිත භාවය ආරක්ෂා කල වසරක අවසානය… මුළු ලොවම අවිනිශ්චිත වසරක ආරම්භය ඉදිරිපිට.. මගේ ප්රාර්ථනය මිනිස් ශිෂ්ටාචාරයේ නිර්මාණශීලීම වසරක් වේවා කියා… 2021 – #වසංගතේ_අපේ_අතේ )
————————————————————————————————————————————–
![]()