கட்டுரைகள்

ஒரு செய்தியும் செய்தியின் மீதான எனது எண்ணங்களும்!… ( கட்டுரை ) …… ஏலையா க.முருகதாசன்.

ஈரான் அணு விஞ்ஞானியை கொலை செய்ய செயற்கைக்கோளால் கட்டுபடுத்தப்படும் ரிமோட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது!

ஈரான் அணு விஞ்ஞானியான மொக்சின் பாக்ரிஜாதே துப்பாக்கியால் சுடப்பட்டும் குண்டு வீசியும் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தியையும் இக்கொலைக்கு சட்லைட் நுண்ணியல் தொழில்நுட்பமே பயன்படுத்தப்பட்டதாக ஈரான் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

அதனைச் செய்தவவர்கள் இஸ்ரேல் இராணுவம் என்று சொல்லப்படுகின்றபடியால் அது யூதர்களின் தெள்ளிய அறிவு கொண்டதே என்று முடிவு எடுப்பதற்கு எவ்வித தடையும் இல்லை, வேறு வகையான உற்று நோக்கலும் இல்லை என்ற முடிவுக்கு வரலாம்.

இத்தகவல் உண்மையாக இருப்பதற்கு நுறு வீதம் வாய்ப்புண்டு.புதிய புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை தம் வாழ்வின் முக்கிய அம்சமாக வைத்திருப்போர் அனைவரும் ஒரு இடத்தில் இணைக்கப்பட்டுள்ளனர் என்பதை மறுக்க முடியாது.

அந்த ஒரு இடம் என்பது யூத விஞ்ஞானக் குழுமமாகும்.

குறிப்பாக நவீன கைத்தொலைபேசிகள் எமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாகிவிட்டது அல்லது பொருளாக்கப்பட்டுவிட்டது.

மனித பலவீனங்களுக்கும் ஆசாபாசங்களுக்கும் தீனி போட்டு இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் மனித குலத்தையே ஆட்டிப்படைக்கத் தொடங்கிவிட்டன.

ஈரானின் அணு விஞ்ஞானி சட்லைட் உற்றுநோக்கல் மூலம் கொலை செய்யப்பட்டார் என்பது ஒரு அதிர்ச்சிதரும் செயல் எனச் செய்திகள் சொல்லுகின்றன.

ஆனால் ஈரானில் இது தொடர்பாக அவரைக் காத்துக் கொள்வதற்கான அலட்சியம் இருந்ததோ என எண்ணத் தோன்றுகின்றன.அணுவைப் பிளக்கத் தெரிந்த வல்லமை கொண்ட ஈரானிய விஞ்ஞானத்தை உடைத்து ஊடுருவ யார் துணை போனது என்ற கேள்வித் தொடுப்பில் அவருக்கான பாதுகாப்பில் ஓட்டைகள் ஏற்படுத்தப்பட்டனவா என எண்ணாமல் இருக்க முடியவில்லை.

அத்துடன் ஈரானில் இஸ்ரேலுக்காக செயல்பட்டுவரும்,இஸ்ரேல் உளவு நிறுவனத்தின் ஈரானின் சுதேசிய ஒற்றர்களின்; துணையுடன் இது நடைபெறவும் வாய்ப்புண்டு.

ஈரான் அணு விஞ்ஞானியின் சட்டைப் பைக்குள் ஒரு கைத்தொலைபேசி இருந்தால் போதும் அவர் எங்கெல்லாம் நடமாடுகிறார் என்பதை சட்லைட்டுகள் துல்லியமாக கண்டுபிடித்து விடும்.

அத்தொலைபேசிச் செயலிகள் கோடிக்கொரு பங்காக வைத்திருப்பவரால் அவருக்கென்ற பாதுகாப்பு தொழில்நுட்ப அரணால் மிக மிக நுண்மையாக கண்காணிக்கப்பாட்டாலும் அதையும் மீறி சட்லைட்டுக்களின் நவீன நுண்ணலைகள் ஊடுருவ வாய்ப்புண்டு.

இறுதியாக வந்த சட்லைட் நுண்ணியலில் தரையில் கிடக்கும் குண்டுசியைக்கூட துல்லியமாக படம் பிடித்துவிடும் திறன் கொண்டவையாக இருக்கின்றன.

புழுதி தரையிலிருந்து கிளம்பும் போது அப்புழுத்தித் துணிக்கைகளில் என்னென்ன மூலகங்கள்(எலிமெண்ட்ஸ்கள்) இருக்கின்றன என்பதைச் சட்லைட்டுக்களின் நுண்ணலைகள் உள்வாங்கி அதனை அதற்கான துறைசார் விஞ்ஞானக் குழுக்கள் ஆய்வு செய்யும் நிலைக்கு சட்லைட் யுகம் விஸ்வரூபமெடுத்து வளர்ந்துவிட்டது.

எதிர்காலத்தில் என்ன விளைவைப் பூமி சந்திக்குமோ தெரியாது பூமியின் சுழற்சி வேகத்தை சட்லைட்டுக்களால் கட்டுப்படுத்தும் நிலைகூடத் தோன்றலாம்.

இன்று மனித குலமே விஞ்ஞானக் கருவிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்பது உண்மையிலும் உண்மை.

எவர் ஒருவர் தனது சட்டைப் பைக்குள் கைத்தொலைபேசியை வைத்திருக்கிறாரோ அவர் முழமையாக சட்லைட்கதிர்களினால் ஆட்டுவிக்கப்படும் பொம்மையாக மாறிவிட்டார் என்பதே உண்மையாகும்.

இதற்கு எளிய உதாரணம் நூல்களால் இணைக்கப்பட்டு ஆட்டுவிக்கப்படும் பொம்மலாட்டத்துக்கு இது சமனாகும்.எனவே பொம்மலாட்டப் பொம்மைகள்தான் மனிதர்கள்.

எமது கைத்தொலைபேசிகளில் இருக்கும் செயலிகள் தவிர்ந்த வேறு என்னென்ன செயலிகள் இரகசியமாக இணைக்கப்பட்டுள்ளன என்பது பாவனையாளர்களில் 99.9 வீதமானவர்களுக்குத் தெரியவே தெரியாது.

தமது வேலைகள் மிகச் சுலபமாகவும் இலகுவாகவும் நடைபெறுகின்றன என்ற மகிழ்ச்சியும் பதட்டமின்மையும் ஏற்படுகின்ற ஒரு நிலையையே கைத்தொலைபேசிகள் ஏற்படுத்தி வருகின்றன.

உலகின் ஒட்டுமொத்த வாழ்வியல் பரபரப்புத் தன்மையிலிருந்து மீளவதற்காகவென இலகு வழியைத் திறந்துவிட்டிருப்பதாக காட்டிக் கொண்டே கைத்தொலைபேசிகள் தவிர்க்க முடியாததாக ஆக்கப்பட்டு, அது இல்லாவிட்டால் நிம்மதி இழந்த மாதிரியும் உடலில் ஏதோ

ஒரு அங்கம் இல்லாத மாதிரியுமான உணர்வினை கைத்தொலைபேசிகள் தானாகவே கொடுத்து வருகின்றன.

பயணங்கள் எதன் மூலமாகவிருந்தாலும் இருக்கைகளில் உட்கார்ந்தவுடனேயோ அல்லது நின்று கொண்டிருக்கும் நிலையிலோ எமது கைவிரல்கள் சட்டைப் பைக்குள் இருக்கும் தொலைபேசியையோ அல்லது காற்சட்டைப் பைக்குள் இருக்கும் கைத்தொலைபேசியை தானாகவே எடுக்கின்றன.இதற்கு எளிய ஒரு உதாரணம் மூக்குப் பொடி போடும் பழக்கமுள்ளவர்கள் தமது சட்டைப் பைக்குள் அதை எப்பொழுதும் வைத்திருப்பார்கள்.மூக்கு வாயிலாகச் செல்லும் சுவாச வழி நரம்புகள் மூக்குப் பொடியின் காரத்தண்மையின் சுகத்தை அனுபவிக்க எண்ணும் போதெல்லாம் தாமாகவே கை சட்டைப் பைக்குள் சென்று மூக்குப்பொடி இருக்கும் டப்பியைத் திறந்து மூக்குப் பொடியை எடுத்து பின் டப்பியை மூடிவிட்டு விரல்கள் மூக்குத் துவாரத்திற்கு அதனைக் கொணடு வரும். ஆகக்கூடியது ஐந்து விநாடிகளுக்குள் இச்செயல் முடிந்துவிடும். இதுவும் ஒரு இசைவாக்கமே.

கைவிரல்கள் தொட்டவுடனேயே பாவனையாளருக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்படுகின்றது. தமது உற்றதுணை தம்முடன் இருப்பது போன்ற மன உணர்வினை நம்பிக்கையை ஏற்படுத்துகினறது.

சாப்பிடும் போதும் சலம் மலம் கழிக்கும் போதுகூட, ஒரு கையால் சாப்பிட்டுக் கொண்டு இருக்கையில் இன்னொரு கைவிரலகள்; கைத்தொலைபேசியின் தொடுதிiரையை நகர்த்திக் கொண்டே இருக்கும்.அதைப்போல இயற்கை உபாதை வெளியேறும் போதுகூட கைத்தொலைபேசியின் தொடுதிரையை கைவிரல்கள் நகர்த்திக் கொண்டேயிருக்கும்.

இயற்கை உபாதை நிறைவு பெற்றுவிட்டதைக்கூட உணராது அதில் அடிமையாகிக் கிடக்கும் மூளை.

கிட்டத்தட்ட ஒரு விசப் பாம்பை நாம் கொண்டு திரிவதற்கு இது சமனாகும். ஆனால் இந்த விசப்பாம்பு எமது வாழ்வில் ஒரு அம்சமாகிவிட்டது.

நாம் விஞ்ஞானக் கருவிகளால் மூளைச்சலவை செய்யப்பட்ட மனிதர்களாக மாறிவிட்டோம்.

கைத்தொலைபேசிகள் எந்த நாட்டில் செய்யப்படுகின்றன.அதை உருவாக்கும் நிறுவனங்கள் அடிப்படையில் யாருடையது. எவருக்காக அவை வேலை செய்கின்றன என்பதை அறிவதில் நாம் அக்கறை காட்டுகிறோமா என்பது எமக்குத் தேவையில்லாத ஒன்றாகவே இருக்கின்றது.

அந்த நுண்ணிய சிந்தனைக்குள் நவீன அறிவியல் நோக்கி நாம் எமது மூளைக்கு வேலை கொடுப்பது இல்லை.

எம்மிடம் இருக்கும் இன்றைய கணிணித் தொகுதிக் கருவிகளான கைத்தோலைபேசிகள், ஐ பாட்டுக்கள், தொலைபேசிகள், ஒளிப்பதிவுக் கருவிகள்,ஒலிப்பதிவுக் கருவிகள் அனைத்துமே எம்மைக் கண்காணிக்கும் கருவிகளே.

அது மட்டுமல்லாமல் எமது வீடுகளில் நிறைந்து கிடக்கும் மேற்சொன்ன கருவிகளால் நாங்கள் மெது மெதுவாக நோயாளியாகின்றோம் என்பது மட்டுமல்ல எமது உடலில் ஆக்கத்துக்குக் காரணமான மூலகங்களில் வேறுபாட்டையும் சமனநிலையையும் நவீன கணிணித் தொகுப்புக் கருவிகள் சிதைக்கின்றன.

மனித குலம் ஆகாயத்திலிருந்து இயக்கப்படுகின்றது.இஸ்ரேல் வீரர்களை பணயக் கைதியாக அன்றைய உகண்டா ஜனாதிபதியான இடிஅமீன் பிடித்து வைத்திருந்த போது இடி அமீன் போன்ற தோற்றமுடையவரை

வைத்தே பணயக் கைதிகளை இஸ்ரேல் விடுவித்த செய்திகளை பலர் அறிந்திருக்கலாம்.

ஈரான் அணு விஞ்ஞானி சட்லைட் நுண்ணியலால் கொலை செய்யப்பட்டார் என்பது இப்படியெல்லாம் நடக்கும் என்பவர்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தியே அல்ல.

அது மட்டுமல்லாமல் ஒருவர் தனது சட்டைப் பைக்குள் நவீன கைத்தொலைபேசி ஒன்றை வைத்திருப்பாரானால் அதுவும் அவரின் விரல் ரேகைகள் அதில் பதியப்பட்டு இருக்குமானால் அவரின் உயரம் நிறை எந்த இரத்தத் தொகுதியுள்ளவர் என்னென்ன நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல்கள் போய்ச் சேர வேண்டிய இடத்துக்குப் போய்விட்டன, போய்க் கொண்டேயிருக்கின்றன வங்கி விபரங்கள் உட்பட என்பது சந்தேகமில்லாமல் உண்மையே.

எனவே இரகசியங்கள் என்று எதுவும் இல்லை.இதுவரையில் மனிதர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையோ காணும் கனவுகளைப் பதிவதற்கோ எந்த ஒரு தொழில் நுட்பத்தையும் கண்டுபிடிக்கப்படவில்லையாயினும் எமது கைத்தொலைபேசி வழியாக எமது மூளைகளில் ஏற்படும் எண்ணங்களைச் சிந்தனைகளை அறிந்து கொண்டுதானிருக்கிறார்களோ தெரியாது.

எந்தச் சலசலப்புமே இல்லாமல் ஒரு இனம் இருக்கிறதே தெரியாமல் இருந்து கொண்டு எங்கும் நீக்கமற தமது நுண்ணிய அறிவியல் வலையமைப்பை உலகை மூடியே விரித்து வைத்திருக்கும் யூத இனத்தின் அறிவியலே உலகைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button