கட்டுரைகள்

அரசியலுக்கு அழகு முக்கியமானதல்ல அது தகுதியுமல்ல!… ( கட்டுரை ) ஏலையா க.முருகதாசன்!

குஸ்புவிற்கு கிட்டத்தட்ட இது நாலாவது கட்சித் தாவல்.அதிமுக ஆட்சியிலிருந்த போது திமுகவிலிருந்த குஸ்பு சினிமாத்;துறையிலிருக்கும் நடிகைகள் எவரும் கற்புக்கரசிகள் அல்ல என்று தன்னையும் சேர்த்துச் சொல்ல அதை ஆமோதித்து ‘ஆம்’ என்றவர் சுகாசினி.

முன்னாள் நடிகையான ஜெயலலிதா குஸ்புவின் அறிக்கையால் கோபமடைந்த அவர் மீது வழக்குத் தொடுக்க முனையும் போது அதிமுகாவில் இணைந்து தன்னைக் இணைத்தக் காத்துக் கொண்டவர் இவர்.ஜெயா தொலைக்காட்சி ஒரு புறத்தில் அதிமுகாவின் பிரச்சார கருவியாகவும், இன்னொரு புறத்தில் பெரும் வணிக நிறுவணமாகவும் செயல்பட்டது.அதிமுகாவிற்கு சென்ற குஸ்பு அங்கு நிகழ்ச்சி நடத்துனராகவும் செயல்பட்டார்.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரும்பான்மையானவற்றில் அழகியல் எப்பொழுதுமே முதன்மை வகிக்கும்.

குஸ்புவின் அழகு ஜெயா தொலைக்காட்சிக்கு தேவைப்பட்டதால் அவர் நடிகைகளை கற்பற்றவர்கள் என்று சொன்னது நீர்த்துப் போயிற்று.

இவர் அதிமுகாவில் எதை எதிர்பார்த்துப் போனாரோ தெரியவில்லை எட்டாத பழம் புளிக்கும் என்ற நரியாரின் ஏமாற்றம் போல அவருக்கும் எட்டாத பதவி புளிப்பான பதவி என்று அங்கிருந்து பயணமானார்திமுகவிற்கு.

திமுக என்பது சாதரண கட்சியல்ல முற்போக்குச் சிந்தனையாலும் திடமான போராட்டங்களாலும் தொண்டர்களின் வியர்வைகளாலும் கட்டி எழுப்பப்பட்ட கட்சி அது.தமிழகத்தை மற்றைய மாநிலங்களைவிட சிந்தனைப்புரட்சி மூலம் மாற்றத்தை கொண்டு வந்தவர்கள் திமுகாவினர்தான்.திமுக தமிழக மண்ணில் வேரூன்றி விழுதெறிந்து பரந்து நின்ற ஆலமரம் போன்றது.குஸ்புவிற்கு திமுகாவின் வரலாறு தெரியவே தெரியாது.நடிக நடிகைகள் அரசியலை பாலர் பாடம் போல பார்ப்பதற்கு அவரவர் உசுப்பேத்தல் இரசிகர்களே காரணம். அவரின் கணவர் நடிகை ரோஜா போல நீயும் அரசியலில் ஈடுபட்டால் தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஆகலாம் என்று ஆசை வார்த்தை கூறி உற்சாகப்படுத்தியிருக்கலாம்,உசுப்பேத்தியிருக்கலாம்.

சினிமாவை தனது வளர்ச்சிக்கு பயன்படுத்திய கட்சிதான் திமுக என்றாலும் சினிமா கவர்ச்சி மட்டுமே அரசியலுக்கான தகுதியல்ல என்பது திமுகாவிற்கு நன்றாகவே தெரியும்.; இந்த வயதிலும் என்றும் மாறாத அழகிலிருக்கிறீர்களே என்று மேடைக்கு மேடை நிகழ்ச்சியாளர்களின் புகழாரத்தால் மகிழ்ந்து போன குஸ்பு தனது அழகிற்கு, சினிமா மாயைக்கு திமுக தளவாதிகள் பதவி முடியை தலையில் அணிவிப்பார்கள் என எண்ணினார் அதிலும் ஏமாற்றமே.

அடுத்த பயணத்தை காங்கிரஸ் கட்சியை நோக்கி நகர்த்தினார்.அங்கும் அவருக்கு ஏமாற்றமே.காங்கிரஸ் கட்சியும் சாதாரண கட்சியல்ல.அது ஒரு

தேசியக் கட்சி.காலத்திற்கு காலம் நடைபெறும் தேர்தல்களில்,அவ்வப்போது காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தாலும் நேருவையோ இந்திரா காந்தியையோ மக்கள் மறக்கமாட்டார்கள்.அது படித்த பெரும் அரசியலாளர்களைக் கொண்ட கட்சி.இந்தியா என்ற உப கண்டத்தை வடிவமைத்த கட்சி.அக்கட்சியில் சேர வருபவர்களை அவர்களும் வருக வருகவென அழைத்தார்கள்.எந்தக் கட்சியாகவிருந்தாலும் அதில் இணைபவர்களை மாலைசூட்டி பொன்னாடை போர்த்தி வரவேற்பது பண்பென்றும் சொல்லலாம் அரசியல் தந்திரம் என்றும் சொல்லலாம் அதைத்தான் காங்கிரஸ் கட்சியும் செய்தது.தனது கட்சியில் இணைய விரும்புவறின் அரசியல் அறிவு என்ன, கல்வித்தரம் என்ன, எத்துறையிலிருந்து அவர் வருகிறார் என்பதை அவர்கள் கூர்ந்து நோக்காமலா இருப்பார்கள்.

தான் ஒவ்வொரு கட்சியாக தாவத்தாவ ஒவ்வொரு கட்சிக்காரர்களும் இருகரம் கூப்பி வரவேற்கிறார்களே அவர்கள் தனக்கு கோவில் கட்டிய கோமாளிகள் போன்றவர்கள் ,குஸ்பு இட்லி சுட்ட வெருளிகள் போன்றவர்கள் என்று நினைத்த அவருக்கு அங்கும் ஏமாற்றமே.அவர்கள் குஸ்புவை வைக்க வேண்டிய இடத்தில் வைத்தார்கள்.பாஜாகாவில் இணைய வேண்டுமென்றால் அவர் காங்கிரஸ் காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.திட்டமிட்டு அவர் காங்கிரஸை விமர்சித்தார் வெளியேற்றப்பட்டார்.

தமக்கு எந்தெந்த வழிகளில் எவர் எவரை வைத்து ஆதரவைத் தேடலாம் வாக்குகளை அள்ளலாம் என்ற நோக்கத்தில் அவரின் அழகை பண்டமாற்றுச் செய்யலாம் என்ற அரசியல் தந்திரத்தை எல்லாக் கட்சிகளுமே கையாண்டன.

தமிழ்நாட்டில் பாரதிய ஜநாயகக் கட்சி காலூன்ற முடியாமல் திணறுகின்றது.ரஜனிகாந்த் வருவாரா என்றால் அவர் வரவேண்டிய நேரத்தில் வருவேன் என்று அவரின் இரசிகர்களை குதூகலத்திலேயே வைத்திருக்கிறார்.

பாரதிய ஜனதா கட்சி குஸ்புவை அமோகமாக ஆராத்தி எடுத்து வரவேற்றிருக்கிறது.காங்கிரஸ் கட்சியிலிருந்தவர்களை ஒருமாதிரி உள்ளுக்குள்ளை கொண்டு வந்திட்டம் என்ற கள்ளச் சிரிப்புடன்: பார்த்துக் கொள்வார்கள் பாரதிய ஜனதாக் கட்சியினர்.

அவர்களுக்கு குஸ்பு அரசியல் அறிஞர் அல்ல அழகு சாதனம் .அவரும் அரசியலில் சைபரே.பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக மாநிலப் பொறுப்பாளரான தமிழிசை சௌந்தராஜன் ஆளுநராகத் தெலுங்கானா செல்ல, அவரளவில் மற்றவர்களின் திறமையில்லாதிருப்பதைக் கண்ட மாநிலப் பொறுப்பாளர் பதவி தனக்குக் கிடைக்கலாம் என்ற எண்ணம் கொண்டாரோ தெரியவில்லை கட்சி தாவிவிட்டார்.அரசியல் நடவடிக்கைகளில் கட்சி விட்டு கட்சி மாறுபவர்களுக்கு தாவுதல் என்ற வார்த்தையை பயன்படுத்துவது உண்டு.தாவுதல் என்பது மரம் விட்டு மரம் தாவும் குரங்கின் தாவுதலிலிருந்து வந்ததே இந்தத் தாவுதல் ஆகும்.எனவே தாவித் தாவி பல கட்சிகளில் இருந்தவர் இப்பொழுது கடைசியாகத் தாவிய காங்கிரஸ் கட்சியிலிருந்து பாரதிய ஜனதாக் கட்சிக்குத் தாவியிருக்கிறார்.

தனக்கு இருக்கும் இரசிகர்களை கணக்கில் வைத்து நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அரசியல் சார்ந்த மதிநுட்பத்துடன் பதில் சொல்லத் தெரியாது கோபத்துடன் நிருபரை அவமதித்த குஸ்பு அரசியல் அறிவற்றவர் என்பதைக் காட்டியிருக்கிறார்.

பராதிய ஐனதா கட்சியின் பதவிப் பழத் தோட்டத்தில் பதவிப் பழம் கிடைக்குமா கிடைக்காத பதவிப் பழம் புளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்து அவர் எந்தக் கட்:சிக்கு தாவுவார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button