கட்டுரைகள்

காலியாகும் கட்சிகளும் வளர்ந்து வரும் நாம்தமிழர் கட்சியும்!… இசை மதிவாணன்.

மதிமுக – மறுபடியும் திமுக என்ற குற்றசாட்டை மெய்ப்பிக்கும் வகையில்  எந்த ஸ்டாலினுக்காக வைகோ பலிகடாவாக்கபட்டு துரத்தபட்டாரோ , அதே ஸ்டாலினை முதல்வராக்க ஓயாது ஓடிக்கொண்டிருக்கிறார் , தனக்கொரு கட்சி இருப்பதையும் தேர்தலில் போட்டியிடனுமென்பது அவருக்கு பாவற்காய்  கசப்பு .

தேமுதிக – விசயகாந்த் என்னும் தனிபட்ட மணிதனுக்காக வளர்ந்த கட்சி தற்போது வளர்ந்த வேகத்தில் கேப்டன் இல்லாத கப்பல் போல மூழ்க தொடங்கிவிட்டது

விசிக & 2 கம்யூனிஸ்ட்டுகள் − என்ன தான் கொள்கை , கோட்பாடுன்னு வாய்கிழிய பேசினாலும் கடைசியில் ரெண்டூ சீட்டுக்காக ஸ்டாலினுக்கு காவடி தூக்க போறதுதான் மிச்சம் .

பாமக : தனித்து தொடர்ந்து  நின்றால்…!!!! ? வளர  வாய்ப்புண்டு , ஆனால் அண்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்றால் பாஜகவை கூட ஏற்பார்கள் அது தமிழக அரசியலுக்கு வேலைக்காகாது . சாதிகட்சி என்ற முத்திரை ஒரு மிகப்பெரும் பலவீனம் .

தவாக : அண்ணன் வேல்முருகன் எந்த அளவு தமிழ்தேசிய தத்துவ அரசியலில் உறுதியோடிருப்பார் என்பதை தற்போதைக்கு கணிக்க இயலாது , தனித்த கட்சியாக திராவிட கட்சியோடு கூட்டணி வைக்காது தேர்தலை எதிர்க்கொள்வாரா என்பது சந்தேகமே !!! கடந்த தேர்தலில் போயஸ் தோட்டத்தில் சீட்டுக்காக கத்திருந்ததும் , தற்போது கருணாநிதிக்காக மெரினா விவகாரத்தில் பொங்கியதை பார்த்தால் சற்றே கடிணம் ….

தினகரன் & அதிமுக  : ஐந்தாண்டுகால ஆட்சிமுடிந்ததும் எடப்பாடியும் , ops ம் ஒரு சேர தினகரன் காலில் விழ வாய்ப்புண்டு , தினகரனோ தனக்குரிய பணபலம் மற்றும் ஊடக பலத்தைக்கொண்டு ஒரு சுற்று வலம் வருவார்

திராவிட அத்யாயத்தின் கடைசி இளவரசர் யார் என்பதில் இவருக்கும் ஸ்டாலினுக்குமான போட்டியில் வெல்ல வாய்ப்புண்டு இதில் வெல்பவரோடு திராவிடிய சாம்ராஜ்ஜியம் வீழ்வது உறுதி .

தமிழகத்தில் காங்கிரசு எனும் செத்துக்கொண்டிருக்கும் பாம்பின் ஆயுட்காலத்தை திமுக தனக்கான டெல்லி அரசியலுக்காக உயிர்ப்போடு வைத்திருக்கிறது .

திமுக : கருணாநிதி எனும் மிகப்பெரிய ஆளுமைக்கு பிற்பாடு  கருணாநிதியின் மகன் என்ற ஒற்றை காரணத்திற்காக வேண்டி அதன் தலைமைபீடத்தை அலங்கரிப்பவர் .

பேச்சு திறமை , தத்துவபுரிதல் , ஆளுமை இவையெல்லாம் தலைகீழ் நின்று தண்ணீர்குடித்தாலும் வராத ஒரு நபர் . ஆர்கேநகர் இடைத்தேர்தலில் மூன்றாமிடம்  , 2016 சட்டமன்றதேர்தலை தலைமை ஏற்றுநடத்தி தோல்வி  எனதொட்டது எதுவும் வெளங்கினதில்லை  . மக்கள் மத்தியிலும் பெரிய நம்பிக்கை ஒன்றும் விதைக்கவில்லை .

அதிமுக &  பாஜக கூட்டணி ஆட்சியை சகிக்க முடியாது , அவர்களை தூக்கி எறிய வேற வழியே இல்லாது மக்கள் திமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெற்றால்தான் உண்டு . அதுக்கும் இடையூறாக ரஜினிகாந்த போன்ற கூத்தாடிகளின் வாக்கு சிதற்களை சமாளிக்க வேண்டும் .

இவைகளுக்கு அப்பாற்பட்டு சீமான் என்ற தனியொரு மனிதன் பற்ற வைத்த தமிழ்தேசிய அரசியல் பெருநெருப்பு இலட்சோப இலட்சம் இளைஞர்கள் மத்தியில் காட்டுத்தீயாக பரவிவருகிறது .

தமிழக அரசியலின் ஒரு பெரும் தலைவனாக வளர்ந்து வரும் ஒரே ஆளுமை அண்ணன்  சீமான் தான் .

இவருக்கு முன் உள்ள பெரும் சவால் ” தினகரன் & ஸ்டாலின் ” இருவரது பண பலம் மற்றும் ஊடக , அரசு எந்திரத்தின் அதிகார பலத்தை எதிர்க்கொண்டு மக்கள் மத்தியில் தனக்கான நம்பிக்கையை விதைப்பது மட்டுமே.

வளமான ஒளிமயமான எதிர்காலம் நாம்தமிழர் கட்சிக்கு  மட்டுமே உண்டு இதை சகல அரசியல் கட்சிகளும் உணர்ந்தே உள்ளது அதன் படபடப்புதான் சுபவீ , கொளத்தூர் மணி , ஷாநவாஸ் போன்ற கோபாலபுரத்து கொத்தடிமைகளின் அலறல் …..

இன்னும் பத்தாண்டுகளில் இந்த தமிழர் நிலத்தின் ஆட்சிஅதிகாரம் நாம்தமிழர் கட்சியின் கரங்களில் கண்டிப்பாக அகப்படும்.

எங்களை கொன்று போட்டாலே ஒழிய
நாங்கள் வென்றெடுப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.

இசை மதிவாணன் .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button