கவிதைகள்

ஊனம்… பார்க்கும்… மனத்தில் தான்!…. முனைவர். கிருஷ்ண திலகா. ( வீடியோ )

கண்ணில்லை எனினும்
கடமையை மறந்தாரில்லை!
இடக்கை,வலக்கையோடு
நம்பிக்கை இருக்கென்று
உழைக்கத் தவறினாரில்லை!

கையிருக்க ,காலிருக்க…
மனசில் தெம்புமிருக்க…
நமக்கெதற்கு வம்பென்று
வாழ்வதில் அர்த்தம் கண்டனரே!

காலிழந்தும் வாழ்வை சிலரோ
கடக்கக் கலங்க வில்லை
உழைப்பின் உன்னதத்தில்
கல்லும் கற்கண்டாக
கரையை அணைக்கும் கடலலையாய்…
கனித்தே வாழ்வில் நிற்கின்றார்!

காலம் கடமையை மறந்ததுவோ?
இயற்கை இயங்க மறுத்ததுவோ?
எல்லாமிருந்தும்….
எல்லாமிருந்தும் ….
இங்கே….மதுவை நாடி…
மயக்கம் கூட்ட….மாநிலம் தேடி….
கும்பலொன்று குடும்பம் மறந்து..
வரிசையில் நிற்கத் துடிக்கிறது …
மனிதம் மறந்து!
பார்க்கும் மனத்தில் ஊனமெங்கே
பார்ப்பவர் கொஞ்சம் சொல்லுங்களேன் !

https://www.facebook.com/thilagavathy.thilagavathy.3386/videos/706241033463755/

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *