கவிதைகள்
கஷ்டம் உருவானதால் கலைகிறதே ஆசை!…. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

வண்ணத்துப் பூச்சியாய் 
பறந்துவிட ஆசை
வட்டநிலா தன்னைத்
தொட்டுவிட ஆசை
விண்ணெல்லாம் சென்று
சுற்றிவர ஆசை
விதம்விதமாய் ஆசை
மனமுழுக்க இருக்கு !
வட்டமிடும் வண்டாகச்
சுற்றிவர ஆசை
வண்ணமலர் மீதமர்ந்து
தேனுண்ண ஆசை
கொட்டிவிடும் அரிவியிலே
குளித்துநிற்க ஆசை
கொள்ளையாய் மனிதினிலே
குவிந்திருக்கு ஆசை !
சிட்டுக் குருவிகளாய்
திரிந்துவர ஆசை
தேன்குரலில் குயிலாக
பாடிவிட ஆசை
வற்றாத நதிபோல
பெருகிநிற்க ஆசை
மலைபோல மனதுள்
எழுகிறது ஆசை !
பச்சைக் கிளியாக
உருவெடுக்க ஆசை
பழந்தேடிக் கொத்தியே
தின்றிடவும் ஆசை
அச்சமின்றி எங்குமே
சுற்றிவர ஆசை
ஆனாலும் நிலைமையினால்
அடங்கிறதே ஆசை !
மயிலாக தோகை
விரித்தாட ஆசை
வாசமுள்ள மலராய்
மலர்ந்துவிட ஆசை
கனியாக மரத்தினிலே
இருந்துவிட ஆசை
கஷ்டம் உருவானதால்
கலைகிறதே ஆசை !
![]()