Featureகதைகள்

கிரகப் போர்!…. 18…. (நாவல்) ….. காசியரின் பேரன்.

பச்சைக் கிரக மனிதர்களிடம் இன்னொரு அற்புத உணர்வும் உண்டு. ஒருவர் இன்னொருவருடன் கதைக்க நினைக்கிறார் என்பதை கதைக்க வேண்டியவர் புரிந்து கொள்வார்.

பலமொழிப் பத்திரிகைகளையும் அவர்களால் வாசிக்க முடிகிறதே என்பது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.அப்பொழுது இன்னொரு பத்திரிகையை எடுத்து பச்சைக்கிரக வாசி கொடுத்தக் கொண்டே இது என்ன மொழி தெரியுமா என்றார்.

சாமியும் சுந்தரியும் ஒரே நேரத்தில் சீன மொழி என்றனர்.இருவரும் வாசிக்கத் தொடங்கியவுடனேயே அதிர்ந்து போய் உட்கார்ந்தனர்.

அந்தப் பத்திரிகையில் சீனாவில் உயிர்க் கொல்லி வைரி; ஒன்று ஆரம்பித்ததாகவும், அந்த உயிர் கொல்லி வைரி உலக நாடுகள் எங்கும் பரவிக் கொண்டிருப்பதாகவும் செய்தி இருந்தது.

உலக நாடுகள் பலவற்றின் பெயர்களையும் அந்நாடுகள் பற்றியும் அவர்களிருவரும் அறிந்திருந்ததனால் சீனாவைப் பற்றி ஓரளவு தெரிந்து வைத்திருந்தார்கள்.

சுந்தரி அவரைப் பார்த்து கேட்க நினைப்பதை அவர் உணர்ந்து எப்படி இக்கிருமி பூமியில் பரவியது என்று கேட்க நினைக்கிறீர்களல்லவா என்றவர்’மாங்கதிர் கிரகத்தின் நிர்வாகத்திலிருக்கும் இன்னொரு கிரகமான வைரி கிரக மனிதர்களே இந்த வைரியை பூமிக்கு கொண்டு போய் பரப்பியவர்கள் என்றவர், உங்களை நாளைக்கு அங்குதான் அழைத்துக் கொண்டு போகப் போகிறோம் என்று சொன்னவர் பூமியில் இக்கிருமியைப் பரப்பியதற்கான காரணத்தை வைரிக் கிரகவாசிகள் சொல்வார்கள் என்றார்.

சாமிக்கும் சுந்தரிக்கும் அடுத்த நாள் வைரிக் கிரகவாசிகள் என்ன சொல்லப் போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

அடுத்த நாள் அவர்களை வைரிக்கிருமிக் கிரகத்திற்கு ஏற்றிச் செல்ல ஒரு பலூன் போன்ற வாகனம் வந்து நின்றது.சாமியம் சந்தரியும் பச்சைக் கிரகத்தில் உள்ள இருவரும் அதில் ஏறி அமர்ந்தனர்.

கதவுகள் பூட்டப்பட்டதும் யன்னல் போன்றிருந்த ஒன்றின் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பச்சைக்கிரகத்தைவிட்டு அது புறப்பட்டது தெரிந்தது.எந்த இரைச்சலும் வரவில்லை.ஒரு பலூன் மேலே போவது போல போன அந்த வாகனம் திடீரென்று பாதை மாறி போய்க் கொண்டிருந்தது.

இது ஏன் பாதை மாறினது என்று சாமியும் சுந்தரியம் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, பச்சைக் கிரகத்தில் வந்தவர்கள் பூமியிலுள்ளவற்றை நீங்கள் பார்க்கும் உயரத்திற்கு பறந்து அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று காட்டப் போகிறோம் என்றனர்.

அந்த வட்டவடிவமான வாகனம் பூமியிலுள்ள கட்டடிடங்கள், காடுகள், வயல்வெளிகள், வீதிகள்,மலைகள், கடல்கள் , ஆறுகள், குளங்கள் என எல்லாவற்றையும் மிகத் தெளிவாகப் பார்க்கக்கூடிய உயரத்தில் மிதந்து கொண்டிருந்து.

பெரும்நகர வீதிகள் என்றால் எப்பொழுது மனித நடமாட்டம் அதிகமா இருக்கும். ஆனால் அங்கொருவர் இங்கொருவராக சிலர் வீதியோரத்தில் நடந்து கொண்டிருந்தனர்.

அவர்களில் சிலர் மேலே அண்ணாந்து பார்த்து பலூன் போன்ற ஒன்று வெளிசத்துடன் மிதந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்த்து தமது கைத்தொலைபேசிகளால் படமெடுக்கத் தொடங்கினர்.

அவர்கள் படமெடுத்த சில விநாடிகளில் அந்த வாகனத்தின் ஒரு பகுதியின் மெலிதான கதவு போன்றிருந்த ஒன்று மெதுவாக உருமாறி திரையானது.

அந்தத்திரையில் பூமியில் உள்ள ஒரு நாட்டின் இணையத்தளம் தெரியத் தொடங்க தாங்கள் பயணிக்கும் வாகனத்தின் படமும் வைரியின் தாக்கம் உலகநாடுகளில் இடம்பெறும் வேளையில் பலூன் போன்ற வடிவில் மிதந்து பூமிக்கு வந்த வேறு;றக்கிரக வாசிகள், இவர்கள்தான் பூமியில் வைரியை பரப்பியவர்களா?. அந்த வாகனத்துக்குள் நான்கு உருவங்கள் இருந்தன.அவை மனித உருவில் இருந்தன.அப்படியானால் வேற்றுக் கிரகங்களில் மனித உருவில் உயிரினங்கள் இருக்கின்றனவா.இந்த வேற்றுக்கிரக வாகனம் அச்சமூட்டும் நிகழ்வா என்ற செய்தி பல மொழிகளிலும் இருந்தது.

அதைப் பார்த்து புன்னகைத்த பச்சைக்கிரக வாசிகள்’ பார்த்தீர்களா எங்களைப் படம் எடுத்தவர்கள் ,பூமிக்குரிய நேர அளவான சில நிமிடங்களுக்குள்ளேயே அந்தச் செய்தியை எல்லா மொழி இணையத்திலும் பிரசுரித்து விட்டார்கள்.மாங்கதிர் கிரகத்திலிருந்தே பூமிக்கு மனிதர்கள் சென்றார்கள்.அதே போலத்தான் செவ்வாய்க் கிரகத்திற்கும் மனிதர்களைக் கொண்டு போனோம்;.

ஆனால் செவ்வாய்க்கிரகத்திற்கும் பூமிக்குமிடையில் அந்தந்த நிலம்சார்ந்து வெப்பம் காற்று நீர்நிலைகளைப் பொறுத்து அதனை அனுசரித்துப் போகும் உடல் நிலையை அவர்கள் கொண்டிருந்தார்கள்.பூமியிலுள்ள மனிதர்கள் செவ்வாய்க் கிரகத்தில் வாழ முடியாது அங்கு அதிக வெப்பம்.அதே போல செவ்வாய்க் கிரகத்தில் வாழ்ந்த மனிதர்களால் பூமியில் வாழ முடியாது.பூமி வாழ்க்கை அவர்களுக்கு அதிக குளிராக இருக்கும்.உடல் பகுதிகளின் வேதியல் அளவுகள் வேறு வேறாக இருக்கும் என்ற பச்சைக்கிரக வாசிகள் உங்களை எங்கள் உடலுக்குரிய வேதியில் நிலைக்கு கொண்டு வந்துள்ளோம்.அப்படிக் கொண்டு வந்ததால்தான் நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்றனர்.

உங்களுக்குள் ஏற்பட்ட மாற்றம் உங்களுக்குத் தெரியாமலே ஏற்பட்டது என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சாமியும் சுந்தரியும் ஏதோ கேட்க நினைக்கிறார்கள் அது ஏன் பூமியில் சனநடமாட்டம் குறைந்திருக்கிறது என்ற கேள்வியைத்தான் என்பதை முன்கூட்டியே கணிக்கும் ஆற்றல் பெற்ற பச்சைக்கிரக வாசிகள் ‘ ஏன் பூமி வீதிகளில் சன நடமாட்டம் இல்லையென்று கேட்க நினைக்கிறீர்கள், ஏனென்றால் வைரிக் கிருமியின் தொற்று பரவாமலிருப்பதற்காக அங்குள்ள நாடுகள் பூமி மனிதர்களை வெளியே போக வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள் என்றார்கள்.

வாகனம் தொடர்ந்து மிதந்து கொண்டிருந்தது பூமி முற்றுமுழுதாக மறைந்துவிட்டது.

பச்சைக்கிரக வாசிகள் சொன்ன வைரிக் கிரகத்தில் அவர்கள் சென்ற வாகனம் மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது.

சாமியும் சுந்தரியும் இதுவரையில் போய்வந்த கிரகங்களைவிட இந்தக் கிரகம் வித்தியாசமாக இருந்தது.மிகப் பெரிய மலைகள் இருந்தன.அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தில் இருந்தன.

மலைகளில் நிறைய வண்ண வண்ண மரங்களும் கொடிகளும் இருந்தன.ஒரு மலைக்கும் இன்னொரு மலைக்குமடையில் பாலங்கள் இருந்தன.

மெதுவாக வைரிக் கிரகம் நிலத்தைத் தொட்டது பச்சைக்கிரக வாகனம்.கதவு திறந்ததும் முதலில் சாமியும் சுந்தரியும் இறங்கினார்கள்.

அவர்கள் ஆச்சரியப்பட்டு போய் நின்றார்கள்.பூமியிலிருந்த போது தங்கள் ஊரிலிருக்கும் விமான நிலையத்துக்கு வேடிக்கை பார்ப்பதற்காக அடிக்கடி போவார்கள்.அதனால் அவ்விமான நிலைய கட்டிட அமைப்பு அவர்களுக்கு நன்றாகவே ஞாபகம் இருந்தது.

அவர்களுடைய ஊரிலிருந்த விமான நிலையம் போலவே அவர்கள் வந்திறங்கிய நிலையமும் அச்சொட்டாக இருந்தது.அங்கு எந்த மொழியிலும் அறிவுறுத்தல்கள் இல்லை.

அந்த விமான நிலையம் கூரையால் மூடப்படாமலிருந்தது.அப்பொழுது மழை பெய்தது. ஆனால் பூமியில் உள்ளது போல மேகங்கள் எதுவுமே இல்லை.ஆனால் வானம் பொன்னிறத்தில் இருந்தது. கூரையில்லா விமானக் கட்டிடத்துக்குள் எந்தவொரு மழைத்துளியும் விழவேயில்லை.

அப்பொழுது நீலநிறத்தில் ஒரு பெரிய வளையம் போன்ற ஒன்று வானத்திலிருந்து இறங்கியது.அதிலிருந்து

இறங்கியவரைப் பார்த்ததும் சாமிக்கும் சுந்தரிக்கும் வியப்புக்கு மேல் வியப்பு.

நீங்களா……..நீங்கள் எப்படி இங்கே….என்று அவர்கள் முடிக்குமுன்.நான் நீங்கள் நினைக்கும் உங்கள் அயல் வீட்டுக்காரர் அல்ல.நீங்கள் சொல்வது மாங்கதிர் கிரகத்திற்கு வருவதற்கு முன்பே, பூமியில் வானத்திலிருந்து இறங்கிய மூட்டையிலிருந்து சிடியை எடுத்து தனது தொலைக்காட்சியில் செருகி,அவரின் மனைவிக்குத் தெரியாமல் கள்ளக் காதலியுடன் சுற்றித் திரிந்த வீடியோப் படங்களைப் பார்த்த மனைவி கோபப்பட தொலைக்காட்சியை நிறுத்தியும் அந்தக் காட்சிகளை நிறுத்த முடியாமல் அவதிப்பட்டவர் நானென்று நினைக்கிறீர்களா.அவரல்ல நான் பூமியலிருக்கும் அவரைப் போன்ற உருவத்திலேதான் நானுமிருப்பேன்.

‘வாருங்கள் உங்களை நான்தான் இனி அழைத்துப் போகப் போகிறேன், அவர்கள் போய்விடுவார்கள்’ என அவர் சொல்ல பச்சைக் கிரகத்திலிருந்து வந்தவர்கள் மீண்டும் தங்களுடைய வாகனத்தில் ஏறி மிதக்கத் தொடங்கினார்கள்.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button