கட்டுரைகள்

கொரோனா கிருமிக்கு தீர்வு!… சங்கர சுப்பிரமணியன்.

சீனாவில் தொடங்கி இதுவரை உலகமெங்கும் நான்கு இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொற்றிக் கொண்ட கொரோனஎன்றகிருமி பத்தொன்பதாயிரத்துக்கும் அதிகமானவர்களை பலி
வாங்கி விட்டது. இதை எப்படி தடுக்கலாம் என்று உலகமே அல்லும் பகலும் அயராது போராடி வரும் வேளையில் கண்ணிழந்தவனுக்கு பார்வை கிடைத்தது போல் இந்த கிருமியை ஒழிக்க ஒரு நல்லவழி கிடத்திருக்கிறது.

பொதுவாகவே தமிழ்நாட்டைப் பற்றி பெருமையாகப் பேசாத  நான் இந்த வழியை கண்டுபிடித்தவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதை நினைக்கும்போது பெருமையடைகிறேன்.

இந்த வழியை முதலிலேயே அவர் வெளிப்படுத்தியிருந்தால் இத்தனை இலட்சம் மக்கள் இந்த நோயால் பாதிப்படைந்திருக்கவோ இத்தனை ஆயிரம் மக்கள் பலியாகியிருக்கவோ மாட்டார்கள். இந்த கிருமியை ஒழிக்க உலகம் முழுதுமுள்ள அரசாங்கங்களும் மருத்துவ மற்றும் சுகாதாரத் துறைகளும் போராடிக் கொண்டிருக்கின்றன.
உலகம் முழுக்கவும் உள்ள விஞ்ஞானிகளும் பலவகைகளிலும் இந்நோயைத்தடுக்க அரும்பாடுபட்டு வருகின்றனர்.

இந்த நேரத்தில் லேட்டாகச் சொன்னாலும் லேட்டஸ்ட்டாக அந்த கிருமியை ஒழிக்க வழி சொல்லியிருக்கிறார். கடலில் நீச்சல் தெரியாதல் போராடிக் கொண்டிருப்பவருக்கு ஒரு மரக்கட்டை கிடைத்தால் எப்படி ஒரு நம்பிக்கை கிடைக்குமோ அந்த அளவுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இப்போது சொல்கிறேன் இந்த வழியைச் சொன்னவர் யாரென்று.
இந்த வழியைச் சொன்னவர் வேறு யாருமில்லை.
அவர்தான் எஸ். வி. சேகர். கொரோனா கிருமி ஒழிப்பு குறித்து ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதர்வண வேதத்தில் கிருமி சம்ஹார சூக்தம் என்ற ஒரு மந்திரம் இருக்கிறதாம். இந்த மந்திரம் வீட்டில் ஒலிக்க வேண்டுமாம். இந்த மந்திரத்தை இந்நோய் உக்கிரமாகத் தாக்கிவரும் நாட்டிலுள்ள இல்லங்களிலெல்லம் ஒலிக்கச் செய்ய அதற்குண்டான அமைப்புக்கள் ஆவன செய்யுமா? செய்தால்  நல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல ஒரு வழியைக்காட்டிய எஸ். வி. சேகர் அவர்களுக்கு உலக மக்கள் அனைவரும் நன்றிக்கடன் பட்டவர்கள். அவருக்கு நம் நன்றியைக் காணிக்கையாக்குவோம்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button