Featureகட்டுரைகள்

சில விசயங்களை பேசாமல் எழுதாமல் இருக்க முடியவில்லை!… ஏலையா க.முருகதாசன்!

இனம் – மதம் – மொழி என எல்லாவற்றையும் கடந்ததே மனித நேயம்.கொரனோ என்ற வைரஸ் மனிதநேச வாயிலாக உலக மக்களை இணைத்திருக்கின்றது.

இவ்வைரஸால் ஒவ்வொரு நாட்டிலும் ஏற்படும் அவலங்களைக் கேள்விப்படும் போது அனைவருமே சோகத்தில் மூழ்கியிருக்கிறார்கள்.

மனித நேயமுள்ள எவரும் இவ்வைரஸி;ல்லிருந்து மக்களைக் காப்பாற்ற ஒவ்வொரு நாடும் எடுக்கும் முழுவீச்சான பாதுகாப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்புக் கொடுக்கவே முனைவார்கள்.

https://www.youtube.com/watch?time_continue=1&v=KVzDIZAxF-U&feature=emb_logo

தன்னால் சகமனிதனை இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளவே மாட்டார்கள்.

இச்சூழ்நிலையில் மக்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகளை அவை மத வழிபாடாக இருந்தாலென்ன எதுவாக இருந்தாலென்ன எவருமே செய்யக்கூடாது என்பது அனைவருக்கும் தெரியும்.

தமக்கு விருப்பமான மதவழி நடப்பது அவரவர் உரிமை.அதில் எவருக்கும் தலையிட உரிமை இல்லை.

இலங்கை அரசு தலைவர் கொரனோவுக்கு எதிராக தன்னாலான முழுநடவடிக்கைகளையும் செய்து வருகிறார். அதற்கு வைத்தியர்கள் தாதிமார்கள் அதிகாரிகள் அரசாங்க அதிபர்கள் ஆளுநர்கள் இராணுவம் காவல்துறை என அனைத்துப் பிரிவினபலத்த ஒத்துழைப்பு நல்கி மக்களைக் காப்பாற்ற இரவு பகலாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை மக்கள் தமக்கு இவ்வைரஸ் தொற்றிவிடக்கூடாதே என்ற பயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வைரஸ் தொற்று உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது என்பதை அறியாதவர்கள் எவருமே இருக்க முடியாது.

மார்ச் மாதமாகிய இந்த மாதம் இலங்கையில் இவ்வைரஸ் அதிவேகமாக பரவிவருவதை இலங்கையைச் சேர்ந்தவர்களின் காதில் படாமலிருக்க முடியாது.

இந்த நிலையில் ஒரு மதப் பிரிவு யாழ்ப்பாணத்தில் இரு இடங்களில் வழிபாடு நடத்துவதற்கு விளம்பரம் ஒன்றை பத்திரிகை வாயிலாக செய்து யாழில் வெளிநாடொன்றிலிருந்து சென்ற மத போதகரால் வழிபாடு நடத்தப்பட்டு மதபோதகருக்கும் அதில் கலந்து கொண்டவர்களுக்கும் கொரனோ தொற்று உருவாகக் காரணமாகிவிட்டது.

அந்த விளம்பரம் முகநூல் நண்பரின் பக்கத்தில் இருந்த போது அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.அதில்” கொரனோ உங்களை அனுகாது” என்று சொல்லப்பட்டிருந்தது.

நவீன மருத்தவத்தின் உச்சத்திலும் வைரஸ் களின் வகைகளை அறிவதற்காக ஆயவகங்களை கொண்டிருந்து அதற்காக முழுமூச்சுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நாடுகளே திணறிக் கொண்டிருக்கும் நிலையில் இப்படி அம்மதப்பிரிவு மக்களை தவறான தலையங்கம் இட்டு ஒன்றிணைத்ததை சீரணிக்க முடியவில்லை.

இப்படி ஒரு தலைப்பினை இட்டு மக்களை வரவழைத்தமை தவறென்று அவர்களின் மனச்சாட்சிக்கு நன்றாகவே தெரியும்.

யாழ் மக்களிடத்தில் துரிதகதியில் இவ்வைரஸைபரப்புவதற்குத்தான் இப்படி ஒரு கூட்டு வழிபாட்டினைச் செய்தார்களா எனச் சந்தேகிக்கும் நிலையை அவர்கள்தான் உருவாக்கியிருக்கிறார்கள்.

வெளிநாடொன்றிலிருந்து போன மருத்துவருக்கு வெளிநாடுகள் இவ்வைரஸால் அந்தந்த நாடுகள் என்ன பாடுபடுகிறதென்று அவருக்கு நன்றாகவே தெரியும்.

இந்த நிலையில் மதபோதகரும் ஏற்பாட்டாளர்களும் இவ்வழிபாட்டினை இரத்து செய்திருக்க வேண்டும்.ஒருவருக்கு நோயை இன்னொருவர் ஏற்படுத்தினால் அது கொலைக்குற்றத்திற்குச் சமனானது.

இம்மத போதகருக்கு கொரனோ தொற்று இருந்தும் அதனைக் காட்டிக் கொள்ளாது அல்லது பலரின் ஒத்துழைப்புடன் மதவழிபாடு என்ற போர்வையில் யாழிற்கு அழைக்கப்பட்டு யாழ்ப்பாணம் அழைக்கப்பட்டு அங்குள்ள மக்களுக்கு இவ்வைரஸைத் தொற்றை எற்படுத்தப் போனாரா?

அவர் திட்டமிட்ட நோய்க் காவியா?.அவரோடு இணைந்து இயங்கியவர்களும் நோய்ப் பரவலுக்கு உடந்தையா சந்தேகத்தை உருவாக்குகின்றது.

மீண்டும் ஒரு முறை ஒன்றைப் பதிவு செய்கிறேன்.அவரவர் விரும்பிய மதத்தை அவரவர் தழுவி நிற்பதற்கு அவரவருக்கு தனிமனித உரிமை உண்டு.ஆனால் அது எந்த மதமாகவிருந்தாலும் காலச்சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நடப்பதே இறைவனுக்குச் செய்யும் தொண்டாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *