கவிதைகள்
கற்று தரும் பாடம்!…. தம்பி நந்தன்.

மீண்டும் மீண்டும்
சொல்கிறேன் சொல்வேன்
இன்னும் மனிதா நீ
திருந்தவில்லை
திருந்துவதற்காய் கிடைத்த
சந்தர்ப்பத்தை கூட
இது எதற்காக என்று
உன் மனச்சாட்சியிடம்
கேட்டாயா?
இந்த கொரோனோ கற்று தரும்
பாடம் என்ன
நீ உயர்சாதி
பணக்காரன்
அந்தஸ்து
பதவி
எது வேண்டுமானாலும்
இருக்கலாம்
ஆனால் கொர்னோவாவுக்கு
முன்னால் எதுவும் எடுபடாது
அதன் முன்னால் வெறும்
உயிர்
இப்போது புரிகிறதா?
இன்னும் புரியவில்லை
என்றால்
நீ வாழ்ந்தென்ன பயன்
வருவதை எதிர் கொள்
விடை காண முன்னே
நீ விதைக்கப்படுவாய்
இது உங்களுக்கும்
எனக்குமான
பாடம்…
![]()